சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 403 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2019

விஷ்­ணு­வர்த்­தன் நடித்து 1989ம் ஆண்டு வெளி­யான 'தேவா' என்ற கன்­ன­டப்­ப­டத்­தின் உரி­மை­யைப் பெற்று தமி­ழில் உரு­வாக்­கப்­பட்ட படம் 'தர்­ம­துரை'. 1991ம் ஆண்டு வெளி­வந்த இப்­ப­டத்­தில் ரஜி­னி­காந்த், சரண்­ராஜ், 'நிழல்­கள்' ரவி, மது, கவு­தமி உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­தார்­கள். இப்­ப­டத்­திற்கு திரைக்­கதை, வச­னம் எழு­தி­யி­ருந்­தார் பஞ்சு அரு­ணா­ச­லம். இதை ராஜ­சே­கர் இயக்­கி­யி­ருந்­தார்.

பணக்­கா­ர­ரான சரண்­ராஜ், தன் மக­ளின் காதலை ஏற்­றுக் கொள்ள மறுக்­கி­றார். எனவே, அவ­ரது மகள் அப்­பாவை எதிர்த்து வீட்டை விட்டு காத­ல­னு­டன் ஓடவே, தன் ஆட்­களை அனுப்பி அவர்­க­ளைப் பிடித்து வரச் சொல்­கி­றார் சரண்­ராஜ்.

 காட்­டில் புகுந்த காத­லர்­களை சரண்­ரா­ஜின் ஆட்­கள் கண்­டு­பி­டித்து அடிக்க ஆரம்­பிக்க, அப்­போது அங்கு வரும் ரஜி­னி­காந்த் காத­லர்­க­ளைக் காப்­பாற்­று­கி­றார். தோல்­வி­யு­டன் திரும்­பிச் செல்­லும் ஆட்­கள் நடந்­ததை சரண்­ரா­ஜி­டம் சொல்ல, அவர் தன் சகோ­த­ரர் 'நிழல்­கள்' ரவி­யு­டன் காட்­டுக்கு வரு­கி­றார். காட்­டில் ரஜி­னி­காந்த்­தைப் பார்க்­கும் சரண்­ரா­ஜும் 'நிழல்­கள்' ரவி­யும் அதிர்ச்­சி­ய­டை­கின்­ற­னர். கார­ணம், அவர்­க­ளது அண்­ணன்­தான் ரஜி­னி­காந்த். அவரை எதிர்­கொள்ள திரா­ணி­யின்றி சரண்­ரா­ஜும், 'நிழல்­கள்' ரவி­யும் திரும்­பிச் செல்­கின்­ற­னர்.

 இதைக் கண்டு ஆச்­ச­ரி­ய­ம­டை­யும் சரண்­ரா­ஜின் மகள், இது குறித்து ரஜி­னி­யின் மனைவி கவு­த­மி­யி­டம் விசா­

ரிக்­கி­றார். அப்­போ­து­தான் ரஜினி யார் என்­பது குறித்து அந்­தக் காதல் ஜோடிக்­குத் தெரி­ய­வ­ரு­கி­றது. வள்­ளி­யூர் என்ற கிரா­மத்­தில் வசிக்­கும் சாதா­ரண விவ­சாயி, ரஜி­னி­காந்த். தன் தம்­பி­கள் சரண்­ராஜ், 'நிழல்­கள்' ரவி இரு­வ­ரி­ட­மும் மிக­வும் பாச­மாக இருக்­கி­றார். ஆனால் தம்­பி­கள் இரு­வ­ரும் தீய குணங்­க­ளைக் கொண்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்­கள். தந்­தை­யின் எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி, தன் தம்­பி­கள் படிப்­ப­தற்­காக நிறைய கடன் வாங்­கு­கி­றார் ரஜினி. படித்­த­பின், தம்­பி­கள் வியா­பா­ரம் செய்­வ­தற்­காக ரஜி­னியை கடன் வாங்­கித் தரச்­சொல்லி, அந்­தப் பணத்­து­டன் சென்­னைக்­குச் செல்­கின்­ற­னர்.

 சென்­னை­யில் கடத்­தல் தொழில் செய்­யும் ஜோசு­டன் இணைந்து கடத்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். ஒரு சந்­தர்ப்­பத்­தில் ஜோஸ் மற்­றும் அவ­ரது மகன் அஜய் ரத்­னத்தை போலீ­சில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்­பி­விட்டு, சட்ட விரோத நட­வ­டிக்­கை­கள் மூலம் பணக்­கா­ரர்­க­ளா­கி­வி­டு­கின்­ற­னர். சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வரும் அஜய் ரத்­னம், தன்னை சிறைக்கு அனுப்­பிய 'நிழல்­கள்' ரவி­யை­யும் சரண்­ரா­ஜை­யும் கொலை செய்ய முயல்­கி­றார். அதி­லி­ருந்து தப்­பித்து விடும் 'நிழல்­கள்' ரவி, அஜய் ரத்­னத்­தைக் கொன்று விடு­கி­றார்.

 ஆனால், தான் கொலைப்­ப­ழி­யி­லி­ருந்து தப்­பிக்க, ரஜி­னி­காந்த்தை கொலைக்­குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளச் சொல்­கி­றார். தம்­பிக்­காக ரஜி­னி­யும் கொலைப்­ப­ழியை ஏற்­றுக் கொண்டு ஏழு ஆண்­டு­கள் சிறை­யில் இருக்­கி­றார்.  சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, கிரா­மத்து வீட்டை விற்க சரண்­ரா­ஜும் 'நிழல்­கள்' ரவி­யும் வரு­கின்­ற­னர். அவர்­கள் தந்தை இதற்கு ஒப்­புக் கொள்­ளா­த­தால் அவ­ரைக் கொன்று விட்டு கவு­த­மி­யை­யும் அவ­ரு­டைய பைய­னை­யும் வீட்டை விட்­டுத் துரத்தி விடு­கின்­ற­னர். சென்­னைக்கு வரும் கவு­தமி வீட்டு வேலை செய்து தன் மக­னைக் காப்­பாற்­று­கி­றார். கிரா­மத்­தில் அப்­பா­வைக் கொலை செய்­ததை பார்த்­து­விட்ட கார­ணத்­தால், ரஜி­னி­யின் மக­னை­யும் 'நிழல்­கள்' ரவி கொன்று விடு­கி­றார்.

 சிறை­யி­லி­ருந்து வரும் ரஜி­னி­யி­டம் நடந்­த­தை­யெல்­லாம் கவு­தமி சொல்ல, ஆத்­தி­ர­ம­டை­யும் அவர், சரண்­ராஜ், 'நிழல்­கள்' ரவி இரு­வ­ரை­யும் அடித்து உதைத்து, அவர்­கள் உற­வையே அறுத்­தெ­றிந்­து­விட்டு காட்­டுப் பகு­திக்­குச் சென்று விடு­கி­றார். சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வரும் ஜோஸ், தன்னை சிறைக்கு அனுப்­பிய சரண்­ராஜ் மற்­றும் 'நிழல்­கள்' ரவி இரு­வ­ரை­யும் பழி தீர்ப்­ப­தற்­காக தன் ஆட்­களை வைத்து கடத்­திச் சென்று விடு­கி­றார். இரு­வ­ரை­யும் காப்­பாற்­றும்­படி கவு­தமி சொல்ல, ரஜி­னி­யும் ஜோஸ் மற்­றும் அவ­ரது ஆட்­க­ளு­டன் சண்­டை­யிட்டு தம்­பி­க­ளைக் காப்­பாற்­று­வ­து­டன், அவர்­கள் செய்த தவ­று­க­ளை­யும் மன்­னித்து ஏற்­றுக் கொள்­கி­றார்.

  ரஜி­னி­காந்த், மஞ்­சுளா, ரமேஷ் அர­விந்த், செந்­தில் ஆகி­யோர் நடிக்க 'காலம் மாறிப்­போச்சு' என்ற பெய­ரில் ராஜ­சே­கர் இயக்­கத்­தில் இதே தயா­ரிப்­பா­ள­ருக்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட படம் இது. அப்­போது பட­மாக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த கதையே வேறு. சில நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்த பிறகு என்ன கார­ணத்­தாலோ 'காலம் மாறிப்­போச்சு' கைவி­டப்­பட்டு, கன்­ன­டத்­தில் வெளி­யான 'தேவா' படத்­தின் உரி­மையை வாங்கி, 'தர்­ம­துரை' என்ற பெய­ரில் தமி­ழில் தயா­ரித்­தார்­கள்.

  நுாற்றி எழு­பத்­தைந்து நாட்­கள் ஓடி வெள்ளி விழா கண்ட 'தர்­ம­துரை', தெலுங்­கில் டப் செய்­யப்­பட்டு 'கைதி அன்­னயா' என்ற பெய­ரில் வெளி­யா­னது.

 இப்­ப­டத்­தில் இடம்­பெற்ற "ஆணென்ன பெண்­ணென்ன'', "அண்­ணன் என்ன தம்பி என்ன'', "மாசி மாசம் ஆளான பொண்ணு'', "ஒண்ணு ரெண்டு'', "சந்­தைக்கு வந்த கிளி'' ஆகிய பாடல்­கள் ஹிட் ஆயின.