டி.என்.பி.எல்., போட்டி சென்னை அணி வெற்றி

பதிவு செய்த நாள் : 26 ஜூலை 2019 23:55


திருநெல்வேலி:

சங்கர்நகரில் நடந்த டி.என்.பி.எல்., போட்டியில் சென்னை அணி 54 ரன்கள் வித்யாசத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தியது.

நெல்லை சங்கர்நகரில் டி.என்.பி.எல்., 9வது போட்டி  இரவு நடந்தது. இதில் காரைக்குடி, சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கங்கா ஸ்ரீதர் ராஜூ 38 பந்துகளில் 54 ரன்களும், கோபிநாத் 40 பந்துகளில் 55 ரன்களும், கவுசிக் காந்தி 21 பந்துகளில் 32 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 

176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய காரைக்குடி அணி வீரர்கள் ரன்குவிக்க முடியாமல் திணறினர்.  காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 54 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்குடி வீரர் ஷாஜகான் 20 பந்துகளில் 27 ரன்களும், யோ மகேஷ் 24 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3 ஓவர்கள் வீசி 9 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் களை எடுத்த சென்னை அணி பந்துவீச்சாளர் பெரியசாமி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அணி விளையாடிய 3போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி அடைந்து 4 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.