ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 24–7–19

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2019

‘மேஸ்ட்ரோ’ அத்­தி­யா­யம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

ஏன் அவர் ‘மேஸ்ட்ரோ’ எனும் அத்­தி­யா­யம் இனிதான் தொடங்­கு­கி­றது. இது­வ­ரைக்­கு­மான எது­வும் ராஜா­வின் இசை­யோடு தொடர்­பற்­றது அல்ல என்­றா­லும், இளை­ய­ராஜா திரை­வழி இசை­யில் முயன்­று­பார்த்த புது­மை­கள் ஏரா­ளம். ஒரே அத்­தி­யா­யத்­தில் அவற்றை எல்­லாம் வரி­சைப்­ப­டுத்தி வெளிச்­சொல்லி விட இய­லாது என்­றா­லும் இங்கே இந்த அத்­தி­யா­யம் அவற்­றுக்­கான கட்­டி­யத் தொடக்­கம் என்­றா­கி­றது.

‘புவனா ஒரு கேள்­விக்­குறி’ படத்­தில் வரு­கிற ‘‘விழி­யிலே மலர்ந்­தது உயி­ரிலே கலந்­தது’’ என்ற பாட­லைக் கவ­னித்­தி­ருக்­கி­றீர்­களா..?

 தொடக்க இசை மெல்ல வலுப்­பெ­று­கை­யில் வய­லின் இசை செல்­வாக்­கா­கா­மலே குழ­லிசை கொண்டு செல்­லும். சட்­டென்று ஒரு சின்ன இழை வய­லின் இசை வலுப்­பெற்று உடனே ஓயும். இந்த இசைத்­து­ணுக்கை மட்­டும் நம்­மால் நினை­வுக்­குக் கொண்­டு­வர முடி­யும்.

ஏற்­க­னவே வேறொரு அத்­தி­யா­யத்­தில் சொன்­னது தான். இங்கே தொகுக்­கை­யில் மீவ­ருகை அவ­சி­ய­மா­கி­றது. குறிஞ்சி மல­ரில் வழிந்த ரசத்தை பாட­லில் அதன் இணைப்­பி­சை­யாக இரண்­டா­வது நிமி­டம் பதி­னா­லா­வது நொடி­யில் ஒரு துக்­கடா தோன்­றும். 02.29 வரைக்­கும்.

 ஒரு சின்­னஞ்­சி­றிய இசை தான் என்­றா­லும், மிகத் தனித்த ஆன்­மாவை அது தக்­க­வைத்­துக் கொண்­டி­ருப்­ப­தை­யும் சதா ஆர்ப்­ப­ரிக்­கிற அலை­யின் குன்­றாக் குர­லோசை போல அது தொடர்ந்­தொ­லிப்­ப­தை­யும் கேட்­கை­யி­லெல்­லாம் பர­வ­ச­மாய் உணர முடி­கி­றது.

இசை­யில் தன்­னா­லான அள­வுக்கு என்­னென்­னவோ செய்து பார்த்­தி­ருக்­கி­றார் ராஜா. ஆயி­ரம் படங்­க­ளில் இப்­ப­டி­யான பாடல்­கள் மாத்­தி­ரம் சில பல நூறு தேறும்.

 இன்­னொரு சான்று ‘‘காட்­டுக்­கு­யில்’’ பாட்­டுச் சொல்ல பாடல். ‘சின்ன மாப்ளே’ படத்­தில் மனோ – ஸ்வர்­ண­லதா பாடி­யது. இந்த பாட­லின் தொடக்­கத்­தில் ‘‘காட்­டுக்­கு­யில்’’ என்ற சொற்­கூட்­டில் குயில் மற்­றும் அடுத்த சொற்­கூட்­டான பாட்­டுச் சொல்ல என்­ப­தில் பாட்டு அதா­வது, குயில் மற்­றும் பாட்டு இந்த இரண்­டோ­டும் சேர்ந்­தொ­லிக்­கிற சின்­ன­தொரு ஸ்டிக் ப்ளே வரும். பாட­லில் எங்­கெல்­லாம் பல்­லவி தொடங்­கு­கி­றதோ, அப்­போது மட்­டும் முதல் முறை ஒலித்து அடங்­கும். இந்­தப் பாட­லின் முழு­மை­யான ஞாப­க­மாக அந்­தச் சின்­ன­தொரு துணுக்­கிசை மன­தில் பசை போட்­டுப் பதி­ய­வைத்த சித்­தி­ர­மாக நிலைக்­கி­றது.

‘‘தங்­கச்­சங்­கிலி மின்­னும் பைங்­கிளி’’ பாட­லைக் கேட்­டி­ருப்­பீர்­கள். என் வாழ்­வில் அதி­க­தி­கம் கேட்­கிற பாடல்­க­ளில் முதல் பத்­தில் சங்­கி­லிக்கு இட­முண்டு. சலிக்­காத நல்­லிசை. அது இருக்­கட்­டும். இந்த பாட­லின் பல்­லவி முடிந்து சர­ணத்­துக்கு முந்­தைய நகர்­த­லி­சையை கவ­னித்­தால் அதன் தாள நதி­யில் சின்­ன­தொரு முரண் இருப்­பதை உண­ர­லாம். தனித்து ஒலித்­தால் நாரா­சம் என்ற அள­வுக்கு பயந்து கையாள வேண்­டிய பல­மான அல்­லது முர­ணான இசைக்­கோர்­வையை என்­னவோ ஒற்றை மல்­லி­கைப்­பூ­வைக் கையா­ளு­கி­றாற் போல எடுத்­தாண்­டி­ருப்­பார் ராஜா. இந்த பாட­லில் தபே­லா­வும் குழ­லும் அப்­ப­டி­யான முர­ணி­சைக் கோர்­வையை உண்டு பண்­ணும். இப்­படி எல்லா வாத்­தி­யங்­க­ளை­யும் கொண்டு இப்­ப­டி­யான பிர­யத்­த­னத்தை எடுத்­தி­ருக்­கி­றார் ராஜா. அது மற்ற யாரி­ட­மும் இல்­லாத புதுமை என்­ப­தைத் தாண்டி ஒவ்­வொரு பாட­லுக்­கு­மான தனித்த உள­வி­ய­லுக்­குள் அந்­தப் பாடல்­கள் தங்­க­ளைத் தப்­பு­வித்­துக் கொள்­வ­தற்­கான முதற்­கா­ர­ணி­யா­க­வும், இப்­ப­டி­யான தனித்­தொ­லிக்­கும் துல்­லி­யத் துணுக்­கி­சைக் கோர்­வை­கள் செயல்­பட்டு வரு­வ­தும் கண்­கூடு.

இந்த பாட­லின் சிறப்பு என்ன என்­ப­தைப் பார்க்­க­லாம்.

‘சின்­னத்­தாயி’ படத்­தின் நாடித்­து­டிப்பே ‘‘கோட்­டையை விட்டு வேட்­டைக்­குப் போகும்’’ என்ற பாடல்­தான். பல­மான பறை இசை, பம்­பை­யின் உட­னோசை, மேலும் சோகத்தை மெலி­தாக படர்த்­திச் செல்­லும் நாதஸ்­வ­ரம் மற்­றும் துணைக்­க­ரு­வி­க­ளோடு இந்த பாட­லின் பின்­னணி இசை­ய­மைந்­தி­ருக்­கும்.

 விஷத்­தின் கொடு­மை­யைத் தன் கண்­க­ளி­லும், நாவி­லும் சுமந்து கொண்­டி­ருக்­கிற சர்ப்­பத்­தைத் தன் குழந்­த­மை­யின் அறி­யா­மை­யோடு அனா­யா­ச­மாக ஓற்­றைக் கையா­லெ­டுத்து தூர எறிந்து விட்டு விளை­யாட்­டைத் தொட­ரும் சிறு­பிள்­ளை­யின் குர­லி­லேயே மொத்­தப் பாட­லை­யும் பாடச் செய்­தி­ருப்­பார். அதே நேரம் உறுத்­தாத தாளக்­கட்­டுக்­க­ளோடு லேசான மயக்­கத்­தில் நகர்­கிற தன்­மை­யோடு மொத்­தப் பாட­லின் இசை­யும் அமைந்­தி­ருக்­கும்.

 ‘‘கோட்­டையை விட்டு

வேட்­டைக்கு போகும்

சுட­ல­மா­ட­சாமி

சுட­ல­மாட சாமி­யும் நான் தான்

பூசாரி நீ தான்

சூடம் ஏத்தி காமி

 கொட்­ட­வே­ணும் மேளம்...

கையை கட்ட வேணும் யாரும்...

அஞ்சி நிக்­கும் ஊரும்..

அருள்­வாக்கு சொல்­லும் நேரம்..

 கோட்­டையை விட்டு

வேட்­டைக்கு போகும்

சுட­ல­மா­ட­சாமி

சுட­ல­மாட சாமி­யும் நான் தான்

பூசாரி நீ தான்

சூடம் ஏத்தி காமி

 அன்­னா­டம் நாட்­டுல

வெண்­டைக்­காய் சுண்­டைக்­காய்

விலை­யேறி போகுது மார்க்­கெட்­டுல .

 அன்­னா­டம் நாட்­டுல

வெண்­டைக்­காய் சுண்­டைக்­காய்

விலை­யேறி போகுது மார்க்­கெட்­டுல

 விலை­யேறி போகுது மார்க்­கெட்­டுல

 என்­னாட்­டம் ஏழைங்க

அதை­வாங்கி திங்­கத்­தான்

துட்­டு­யில்ல சாமியே பாக்­கெட்­டுல

துட்­டு­யில்ல சாமியே பாக்­கெட்­டுல.

வீட்­டுக்கு வீடு எங்­க­ளத்­தான்

மரம் ஒன்னு வைக்க சொல்­லூ­றாக

மரமே தான் எங்க வீடாச்சு சாமி

ஏழைங்க வாயை மெல்­லூ­றாக

எல்­லா­ரின் வாழ்­வும்

சீராக வேணும் ஒன்­னால தான்

கண்­ணால பாரு

வேறாக்கி காட்டு ஒன்­னால தான்

கோட்­டையை விட்டு

வேட்­டைக்கு போகும்

சுட­ல­மா­ட­சாமி

சுட­ல­மாட சாமி­யும் நான் தான்

பூசாரி நீ தான்

சூடம் ஏத்தி காமி

ஊர் சுத்­தும் சாமியே

நீ கொண்ட கண்­ணாலே

என்­னாட்­டம் ஏழையை பார்க்­க­ணுமே

ஊர் சுத்­தும் சாமியே

நீ கொண்ட கண்­ணாலே

என்­னாட்­டம் ஏழையை பார்க்­க­ணுமே..

ஊர் சுத்­தும் சாமியே

நீ கொண்ட கண்­ணாலே

என்­னாட்­டம் ஏழையை பார்க்­க­ணுமே..

என்­னாட்­டம் ஏழையை பார்க்­க­ணுமே..

எல்­லோ­ரும் போல் என்னை

நீயும் தான் தள்­ளாமே

எந்­நா­ளும் தான் காக்­க­னுமே

உன்­கிட்ட ஓர் வரம் கேட்­க­னுமே

எப்­போ­தும் காவல் நானி­ருப்­பேன்

என்­னென்ன வேணும் நான் கொடுப்­பேன்

பொல்­லாங்கு பேசும் ஊர் சனம் தான்

புண்­ணாக்கி போச்சே என் மனம் தான்

என்­னாட்ட சாமி

எல்­லோ­ருக்­கும் சொந்­தம் எப்­போ­தும் தான்

விண்­ணோடு மேயும்

உன்­னோடு நானும் எந்­நா­ளும் தான்

கோட்­டையை விட்டு

வேட்­டைக்கு போகும்

சுட­ல­மா­ட­சாமி

சுட­ல­மாட சாமி­யும் நான் தான்

பூசாரி நீ தான்

சூடம் ஏத்தி காமி

கொட்­ட­வே­னும் மேளம்

கையை கட்ட வேணும் யாரும்

அஞ்சி நிக்­கும் ஊரும்

அருள்­வாக்கு சொல்­லும் நேரம்

கோட்­டையை விட்டு

வேட்­டைக்கு போகும்

சுட­ல­மா­ட­சாமி

சுட­ல­மாட சாமி­யும் நான் தான்

பூசாரி நீ தான்

சூடம் ஏத்தி காமி’’

இதன் இன்­னொரு உரு­வெ­னவே இந்த பாட­லைச் சொல்ல முடி­கி­றது.