10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 2020இல் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 19 ஜூலை 2019 13:41

சென்னை,

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 2020ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டது.

பொதுத்தேர்வு அட்டவணை விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

10ம் வகுப்புக்கு  2020 மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடிகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2020 மே 4ம் தேதி வெளியிடப்படும்.

11ம் வகுப்புகளுக்கு  2020 மார்ச் 4ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும்.

11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள்  2020 மே 14ம் தேதி வெளியிடப்படும்

12ம் வகுப்புக்கு 2020  மார்ச் 2ம் தேதி துவங்கி,  மார்ச் 24ம் தேதி தேர்வு முடியும்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  2020 ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும்.