ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 17–7–19

16 ஜூலை 2019, 04:25 PM

இளை­ய­ராஜா வந்த காலம்...

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

இளை­ய­ராஜா  இசை பற்­றிய கொண்­டாட்­டங்­கள் பல ரகம். பல­ரும் வெளிப்­ப­டை­யாக ராஜா ரசி­கர்­கள் என சொன்­ன­தும் ஒரு தேக்­கத்­தி­னுள் அப்­ப­டியே உறை­வதை உணர்ந்­தி­ருக்­கி­றேன். இளை­ய­ரா­ஜா­வின் வாழ்­கா­லத்­தில் பிறந்­த­தற்­கா­க­வும், வாழ்­வ­தற்­கா­க­வும், இயற்­கைக்­கும், இறை­வ­னுக்­கும் நன்றி சொல்­வ­தாக பல­ரும் நெக்­கு­ரு­கு­வார்­கள். திரை இசைப் பாடல்­கள் என்­ப­தைத் தாண்டி இளை­ய­ரா­ஜா­வின் ரசி­கர்­கள் அவரை உணர்ந்து கொண்டே வாழ்­வது எளி­தில் விவ­ரித்து விடத்­தக்­க­தல்ல.

 எல்லா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­ட­மும் பல்­வேறு திறன்­கள் ஒளிந்­தி­ருக்­கின்­றன. முன் பழைய காலத்­தின் இசை­ய­மைப்­பா­ளர்­க­ளின் மெச்­சத்­தக்க மேத­மை­யில் இருந்து துவங்கி நேற்­றைய ஜி.வி. பிர­காஷ், அனி­ருத் வரைக்­கும் இசை என்­பது அறிந்து கொள்­வ­தும், பாடல் என்­பது உரு­வாக்­கு­வ­தும், படங்­க­ளுக்­கான பாடல் மற்­றும் பின்­னணி இசை வேலைப்­பா­டு­களை வெற்­றி­டத்­தில் பூர்த்தி செய்து தரு­வ­தும் ஒரு வேலை என்ற அர்த்­தத்­தில் அவ்­வ­ள­வு­தான் என தோன்­றக்­கூ­டும்.ஆனால், இசை என்­னும் சொல்­லில் இளை­ய­ராஜா என்­னும் மனி­த­ரின் வருகை வேண்­டு­மா­னால் சினி­மாக்­க­ளுக்கு இசை­ய­மைப்­ப­தன் மூல­மாக நிகழ்ந்­தி­ருக்­கக் கூடும். ஆனால், இசை என்­னும் மதத்­தில் இளை­ய­ராஜா என்­ப­வ­ரது மந்­தி­ரஸ்­தா­னம் வேறு.

 மேதை­கள் அவர்­கள் வாழ்ந்த காலத்­தில் உண­ரப்­ப­டு­வதை விட அதி­லி­ருந்து வெகு காலம் கழித்­துக் கொண்­டா­டப்­ப­டு­வது அதி­க­மாக இருக்­கும். இதனை நேர­டி­யாக புரிந்து கொள்­வ­தா­னால் ஒரு­வ­ரது மேத­மையை முழு­வ­து­மாக உணர்­வ­தற்கு அவர் வாழ்­கிற காலம் போதவே போதாது. அங்கே தொடங்­கிப் பல­ரது உணர்­தல்­க­ளின் தொகுப்­பிற்கு அப்­பால் நெடுந்­தொ­லை­வில் அவ­ரைப் பற்­றிய முழு­மை­யான சித்­தி­ரம் தெரி­யத் தொடங்­கும். தென்­ப­டு­தல் தெரி­தல் ஆகாது. தெரி­கை­யில் தென்­ப­டு­தல் முற்­றுப்­பெற்று பல காலம் ஆகி­யி­ருக்­கக் கூடும். இது ராஜா­வுக்­கும் பொருந்­தும்.

 இளை­ய­ராஜா வந்த காலம் என்­பது திரைத்­து­றை­யில் சினிமா உரு­வாக்­கம் செட்­டிங்­கு­க­ளைத் தாண்டி மண்ணை நோக்­கிச் செல்­லத் தொடங்­கிற்று. அடுத்த வரு­டங்­க­ளில் பார­தி­ராஜா, மகேந்­தி­ரன், ருத்­ரய்யா, பாலு­ம­கேந்­திரா போன்ற இயக்­கு­னர்­கள் விஸ்­வ­ரூ­பம் எடுத்­தார்­கள். எம்.ஜி. ராமச்­சந்­தி­ரன் என்ற உச்ச நடி­கர் முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்று சினி­மா­வில் நடிப்­ப­தில் இருந்து ஒதுங்­கி­னார். சிவாஜி தனி­யா­வர்த்­த­னம் செய்ய வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது. போட்­டி­யா­ளர்­கள் பலரை ஒதுக்கி கமல், ரஜினி என்று ஆரம்­பத்­தில் நக­ரத் தொடங்­கிய புகழ்­நதி மெல்ல ரஜினி, கமல் என்று ஆனது. மோகன் உரு­வாகி நிலை­பெற்­றார். சிவ­கு­மார் மெல்ல செல்­வாக்­கா­னார். இவற்­றோடு பல முன்­பி­ருந்த நட்­சத்­தி­ரங்­கள் ஒதுங்­கி­னர்.

 இசைத்­து­றை­யில் இளை­ய­ராஜா வருகை நிகழ்ந்­த­போது ராம­மூர்த்­தி­யைப் பிரிந்து நெடுங்­கா­ல­மான எம்.எஸ். விஸ்­வ­நா­தன் நம்­பர் ஒன் ஸ்தானத்­தில் இருந்­தார். சங்­கர் – கணேஷ் அதிக எண்­ணிக்­கை­யில் படங்­கள் பண்­ணி­னார்­கள்.ஜி.கே. வெங்­க­டேஷ், சலீல் சவுத்ரி, வி. குமார், விஜ­ய­பாஸ்­கர், செல்­லப்­பிள்ளை சத்­யம், ராஜன், நாகேந்­திரா, ஷியாம் ஆகிய பிற­மொ­ழி­க­ளில் பர­ப­ரப்­பாக இயங்­கி­ய­வர்­கள் தமி­ழில் அவ்­வப்­போது படங்­கள் செய்­தார்­கள்.  இன்­னொரு பக்­கம் கே.வி. மகா­தே­வன், டி.கே. ராம­மூர்த்தி, ஏ.எம். ராஜா, எஸ்.எம். சுப்­பையா நாயுடு, எம்.பீ. ஸ்ரீனி­வா­சன், எஸ். ராஜேஸ்­வ­ர­ராவ், எஸ்.வி. வெங்­கட்­ரா­மன், ஜி. தேவ­ரா­ஜன், ஆர். கோவர்­தன் ஆகிய முன் காலத்­தின் மேதை­க­ளும் படங்­க­ளுக்கு இசைத்­தார்­கள்.

 1977ல் இளை­ய­ரா­ஜா­வுக்கு அடுத்து அறி­மு­க­மான சந்­தி­ர­போஸ் பின் நெடுங்­கா­லம் கழித்­துச் சிறிது காலம் கோலோச்­சி­னார். இளை­ய­ராஜா அறி­மு­க­மான பிற்­பாடு, பதி­னான்கு வரு­டங்­கள் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் இசை­ய­மைத்­துக் கொண்­டி­ருந்து பிறகு மெல்ல ஓய்வு பெற்­றார்.

 இங்கே இளை­ய­ரா­ஜா­வின் வரு­கைக் காலத்­தில் அது­வ­ரைக்­கும் இசைத்­தட்­டுக்­கள் என்ற பெரிய வடி­வம் அவற்றை இசைப்­ப­தற்­கான மாபெ­ரிய பிளே­யர்­கள் அவற்­றின் ஆட்­சிக்­கா­லம் நெடி­யது. கிட்­டத்­தட்ட நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட வரு­டங்­கள் எல்.பி. ரெகார்ட் என்ற வடி­வத்­துக்­கான மாற்­றே­தும் இல்­லா­மல் தனி­யா­வர்த்­த­னம் செய்து கொண்­டி­ருந்­தது. ஒவ்­வொரு தட்­டி­லும் குழந்­தைக்கு சாதம் பிசைந்­தாற்­போல கொஞ்­சூண்டை விடக் கொஞ்­ச­மாய் ஆறு பாடல்­கள். அடுத்து கேட்­ப­தற்கு அடுத்­ததை மாற்ற வேண்­டும். பத்து, பன்­னி­ரண்டு பாடல்­கள் கேட்­ப­தற்கு மெனக்­கெட வேண்­டும். மேலும் அவற்­றைப் பாது­காப்­ப­தி­லி­ருந்து புழங்­கு­வது வரை விலை­யி­லி­ருந்து ஒலிக்­கச் செய்­தல் வரை எல்­லாமே குறு­க­லான வீதி­யில் ஓடிப்­பி­டித்­தாற்­போல இருந்­தது.

இளை­ய­ரா­ஜா­வின் இசை­யாட்சி நிலை­பெற்ற காலத்­தில் கேசட்­டு­கள் வரத்­தொ­டங்­கின. மேலோட்­ட­மாய்ப் பார்த்­தால் கேசட்­டு­க­ளின் வடிவ எளிமை அவற்­றின் ஸ்பேஸ் எனப்­ப­டு­கிற இடம் அழித்­துப் பதி­வ­தற்­கான வசதி எல்­லா­வற்­றை­யும் விட அவற்­றின் சின்­னூண்டு தேகம் என எல்லா விதத்­தி­லும் மக்­க­ளுக்கு அரு­கா­மை­யில் இசை கேட்­ப­தைக் கொண்டு போய் நிறுத்­திற்று. அந்த இடத்­தில் புதிய பாடல்­களை, புதிய டியூன்­களை, புதிய குரல்­களை, புத்­தம் புதிய வரி­களை, இடை­யொ­லி­களை, உட­னொ­லி­களை, இசை­யிடை மவு­னத்தை, முன்­னர் கேட்­டி­ராத பல்­லவி, சரண சேர்­மா­னத்­திற்­கான இசைக்­கோர்­வை­களை என எல்­லா­வற்­றி­லும் வெரைட்டி தந்து வான் வரை பேரு­ருக் கொண்­டார். இந்­திய இசை உல­கில் இப்­ப­டி­யான மாற்ற காலத்­தில் தோன்றி வெகு சீக்­கி­ரத்­தில் உச்­சம் தொட்ட இன்­னொரு இசை­ஞ­ரைச் சொல்­வது அரிது.

இன்­னொரு இளை­ய­ராஜா காலத்து புதுமை அது­வ­ரைக்­கு­மான ஆல் இந்­தியா ரேடி­யோ­வின் முன் பழைய பணி­யா­ளர்­கள் அதி­க­தி­கம் ஓய்வு பெற்­ற­தும் புதி­தாய் வந்­த­மர்ந்­த­வர்­கள் ‘ராஜாவா ஹை ஜ்ஜால்லி’ என்று சப்­புக் கொட்­டி­ய­தும் அதி­க­ரிக்­கப்­பட்ட ரேடியோ ஸ்டேஷன்­க­ளும், அதி­கம் வழங்­கப்­பட்ட நிகழ்ச்­சி­க­ளும், நேர­தா­ரா­ள­மும் என பல்­வேறு கார­ணங்­கள் இசை என்­றாலே பாடல்­கள் என்­றாலே சர்­வா­தி­கார ஒற்­றை­யாக ரேடி­யோவை ஆக்கி இருந்த காலத்­தில் தமி­ழக இலங்கை ரேடி­யோக்­க­ளுக்கு வேறு வழியே இல்­லா­மல் ராஜா­வைத் துதிப்­பது நித்ய கட­மை­யா­யிற்று. எல்­லா­வற்­றுக்­கும் மேலாக இளை­ய­ராஜா ‘மோனோ’ எனப்­ப­டு­கிற ஒரு தள இசைப்­ப­தி­வி­லி­ருந்து ‘ஸ்டீரியோ’ எனப்­ப­டு­கிற இரு­த­ளத்­துக்கு திரை­யி­சைப் பதிவு மாற்­ற­ம­டைந்த காலத்­தில் தன்­னா­லான அளவு உச்­சங்­களை அதன் வழி­யும் நேர்த்­தி­னார்.