இங்கிலாந்து முதல் முறையாக உலக சாம்பியன்: பைனலில் சூப்பர் ஓவரில் நியூசி.,யை வீழ்த்தியது

பதிவு செய்த நாள் : 15 ஜூலை 2019 00:54


லார்ட்ஸ்,:

உலக கோப்பையை முதல்முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றியது. பரபரப்பான பைனலில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்தன. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கோப்பையை வென்று சாதித்தது.

சர்­வ­தேச கிரிக்­கெட் கவுன்­சில் (ஐ.சி.சி.,) நடத்­தும் 12வது உலக கோப்பை ஒரு­நாள் கிரிக்­கெட் தொடர் இங்­கி­லாந்து மற்­றும் வேல்­சில் நடை­பெற்­றது. இதில், நடப்பு சாம்­பி­யன் ஆஸ்­தி­ர«­லியா, 2வது இடத்­தைப் பிடித்த நியூ­சி­லாந்து, இந்­தியா, இங்­கி­லாந்து, பாகிஸ்­தான், வெஸ்ட்­இண்­டீஸ், இலங்கை, தென் ஆப்­ரிக்கா, வங்­க­தே­சம், ஆப்­கா­னிஸ்­தான் உள்­ளிட்ட உல­கின் ‘டாப்–10’ அணி­கள் பங்­கேற்­றன. முத­லில் போட்­டி­கள் ‘ரவுண்ட்­ரா­பின்’ லீக் முறை­யில் நடந்­தது. இதில், ஒவ்­வொரு அணி­யும் மற்ற அணி­யு­டன் ஒரு­முறை மோதின. இதன் பின் அதா­வது லீக் சுற்­றின் முடி­வில் புள்­ளி­கள் அடிப்­ப­டை­யில் முதல் நான்கு இடத்­தைப் பிடித்த இந்­தியா (15 புள்ளி), ஆஸ்­தி­ரே­லியா (14 புள்ளி), இங்­கி­லாந்து (12 புள்ளி), நியூ­சி­லாந்து (11) அணி­கள் அரை­இ­று­திக்கு முன்­னே­றின. மற்ற அணி­கள் முதல் சுற்­று­டன் வெளி­யே­றின.
மான்­செஸ்­ட­ரில் நடந்த முத­லா­வது அரை­இ­று­திப் போட்­டி­யில் இந்­தி­யாவை 18 ரன் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்­திய நியூ­சி­லாந்து அணி தொடர்ச்­சி­யாக இரண்­டா­வது முறை­யாக பைன­லுக்கு முன்­னேறி அசத்­தி­யது. இதே போல் பர்­மிங்­கா­மில் நடந்த இரண்­டா­வது அரை­இ­று­தி­யில் நடப்பு சாம்­பி­யன் ஆஸ்­தி­ரே­லி­யாவை 8 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்­திய இங்­கி­லாந்து நான்­கா­வது முறை­யாக பைன­லுக்கு முன்­னே­றி­யது.
இந்த நிலை­யில், லண்­டன் லார்ட்ஸ் மைதான்­தில் நேற்று நடை­பெற்ற உள்ள மெகா பைன­லில் நியூ­சி­லாந்து, இங்­கி­லாந்து அணி­கள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. தர­வ­ரி­சை­யில் இங்­கி­லாந்து 2, நியூ­சி­லாந்து 3வது இடத்­தில் உள்­ளன. இரு அணி­க­ளும் இது­வரை உலக கோப்­பையை கைப்­பற்­ற­வில்லை. இத­னால், யாருக்கு முதல் உலக கோப்பை என்ற எதிர்­பார்ப்பு காணப்­பட்­டது, பலத்த எதிர்­பார்ப்­பிற்கு இடையே போட்டி துவங்­கி­யது. இதில், ‘டாஸ்’ வென்ற நியூ­சி­லாந்து கேப்­டன் வில்­லி­யம்­சன் முத­லில் ‘பேட்­டிங்கை’ தேர்வு செய்­தார். இரு அணி­யி­லும் மாற்­றம் ஏதும் செய்­யப்­ப­ட­வில்லை.
நியூ­சி­லாந்து அணிக்கு கப்­டில், நிகோ­லஸ் இரு­வ­ரும் சுமா­ரான துவக்­கம் தந்­த­னர். 2 பவுண்­டரி, ஒரு சிக்­சர் உட்­பட 19 ரன் எடுத்த நிலை­யில் வோக்ஸ் வேகத்­தில் கப்­டில் (19) சரிந்­தார். பின் நிகோ­ல­சு­டன் கேப்­டன் வில்­லி­யம்­சன் இணைந்­தார். இரு­வ­ரும் நிதா­ன­மாக விளை­யாடி வந்­த­னர். 21.2 ஓவ­ரில் நியூ­சி­லாந்து 100 ரன் எடுத்­தது. இந்த நேரத்­தில் பிங­ள­கட் பந்­தில் கேப்­டன் வில்­லி­யம்­சன் (30) வெளி­யேறி அதிர்ச்சி கொடுத்­தார். அதே நேரம் நிகோ­லஸ் 71 பந்­தில் அரை­ச­தம் கடந்­தார். இவர் 55 ரன் (77 பந்து, 4 பவுண்­டரி) எடுத்த நிலை­யில், பிளங்­கட் பந்­தில் ‘ஸ்டெம்­பு­கள் சிதற’ போல்­டா­னார். நியூசி., அணி அதி­கம் நம்­பி­யி­ருந்த ராஸ் டெய்­லர் (15), நீஷம் (19), கிராண்ட்­ஹோம் (19) ஏமாற்­றி­னர். சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய லதாம் (47) அரை­சத வாய்ப்பை தவ­ற­விட்­டார். ஹென்ரி (4) ஏமாற்­றி­னார். கடைசி கட்ட ஓவர்­களை வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்­சர் இரு­வ­ரும் சிறப்­பாக பந்­து­வீசி அசத்­தி­னர். முடி­வில் நியூ­சி­லாந்து அணி 50 ஓவ­ரில் 8 விக்­கெட் இழப்­புக்கு 241 ரன்­கள் எடுத்­தது. சான்ட்­னர் (5), பவு­லட் (1) அவுட்­டா­கா­மல் இருந்­த­னர். இங்­கி­லாந்து தரப்­பில் வோக்ஸ், பிளங்­கட் தலா 3, ஜோப்ரா ஆர்ச்­சர், மார்க் உட் தலா 1 விக்­கெட் சாய்த்­த­னர்.
எட்­டக்­கூ­டிய இலக்கை துரத்­திய இங்­கி­லாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்­டோவ் இரு­வ­ரும் துவக்­கம் தந்­த­னர். ஹேன்ரி வேகத்­தில் ஜோன் ராய் (17) சரிந்­தார். அதே நேரம் பேர்ஸ்­டோவ் இம்­முறை நிதா­ன­மாக விளை­யாடி ரன் எடுத்து வந்­த­தார். கிராண்ட்­ஹோம் பந்­தில் நட்­சத்­திர வீரர் ஜோ ரூட் (6) வெளி­யேறி அதிர்ச்சி கொடுத்­தார். பெர்­கு­சன் வேகத்­தில் பேர்ஸ்­டோவ் (36) சரிய ஆட்­டம் பர­ப­ரப்­பா­னது. கேப்­டன் மார்­கன் (9) ஏமாற்­றி­னார். சீரான இடை­வெ­ளி­யில் விக்­கெட்­டு­கள் சரிய ஸ்டோக்­சு­டன் பட்­லர் இணைந்­தார். இரு­வ­ரும் பொறுப்­பு­டன் விளை­யாடி ரன் எடுத்து வந்­த­னர். இதை­ய­டுத்து சரி­வி­லி­ருந்த இங்­கி­லாந்து மீளத் துவங்­கி­யது. 15 ஓவ­ரில் 100 ரன் தேவை என இருந்­தது.
இந்த நிலை­யில் அதி­ர­டி­யாக விளை­யா­டிய பட்­லர் 53 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இவ­ரைத் தொடர்ந்து ஸ்டாக்ஸ் 81 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இந்த ஜோடி 5வது விக்­கெட்­டுக்கு 110 ரன்­கள் சேர்த்த நிலை­யில், பெர்­க­சன் பந்­தில் பட்­லர் ஆட்­ட­மி­ழந்­தார். இவர் 59 ரன் (60 பந்து, 6 பவுண்­டரி) எடுத்­தார். 5 ஓவ­ரில் 46 ரன் தேவைப்­பட வோக்ஸ் களம் வந்­தார். 46வது ஓவ­ரின் முடி­வில் இங்­கி­லாந்து 200 ரன் கடந்­தது. மீண்­டும் சத்­திய பெர்­கு­சன் இம்­முறை வோக்ஸ் (2) விக்­கெட்டை வீழ்த்­தி­னார். 3 ஓவ­ரில் 34 ரன் தேவைப்­பட வோக்­சு­டன் பிளங்­கட் இணைந்­தார். பவுல்ட் வீசிய 48வது ஓவ­ரில் 10 ரன் கிடைத்­தது. இத­னால், 2 ஓவ­ரில் 24 ரன் தேவை என இருந்­தது. 49வது ஓவரை நீஷம் வீசி­னார். இந்த ஓவ­ரில் பிளங்­கட் (10) ஆட்­ட­மி­ழந்­தார். இதே ஓவ­ரில் ஜோப்ரா ஆர்ச்­சர் ‘டக்–­அ­வுட்’ ஆனார்.
கடைசி ஓவ­ரில் 15 ரன் தேவைப்­பட பவுல்ட் பந்து வீச வந்­தார். முதல் இரண்டு பந்தை வீண் செய்த ஸ்டோக்ஸ், அடுத்த இரண்டு பந்­தில் தலா ஒரு சிக்­சர் அடித்­தார். 2 பந்­தில் 3 ரன் தேவைப்­பட்­டது. 5வது பந்­தில் ஸ்டோக்ஸ்
இரண்­டா­வது ரன் எடுக்க முயன்ற போது அடில் ரஷித் (0) ரன் அவுட் ஆனார். கடைசி பந்­தில் 2 ரன் தேவைப்­பட்­டது. கடைசி பந்­தில் 1 ரன்  கிடைத்த நிலை­யில், மார்க் உட் (0) ரன் அவுட் ஆனார். இதை­ய­டுத்து ஆட்­டம் ‘டை’யில் (சமன்) முடிந்­தது.
இங்­கி­லாந்து 50 ஓவ­ரில் 9 விக்­கெட் இழப்­புக்கு 241 ரன் எடுத்­தது. ஸ்டோக்ஸ் 84 ரன் (98 பந்து, 5 பவுண்­டரி, 2 சிக்­சர்) எடுத்து அவுட்­டா­கா­மல் இருந்­தார். நியூ­சி­லாந்து தரப்­பில் பெர்­கு­சன், நீஷம் தலா 3 விக்­கெட்
சாய்த்­த­னர்.
ஆட்­டம் சனில் முடிந்த நிலை­யில், கோப்பை யாருக்கு என்­பதை தீர்­மா­விக்க ‘சூப்­பர் ஓவர்’ நடத்­தப்­பட்­டது. இதில் முத­லில் பேட் செய்த இங்­கி­லாந்து விக்­கெட் இழப்­பின்றி 15 ரன் எடுத்­தது. அடுத்து கள­மிங்­கிய நியூ­சி­லாந்து ஒரு ஓவ­ரில் 1 விக்­கெட் இழப்­புக்கு 15 ரன் எடுத்தது. இரு அணிகளும் ஒரே ஸ்கோரை (15) மீண்டும் எட்டின. ஆனால், இப்போட்டியில் அதிக பவுண்டரி அடித்த (22) அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து கோப்பையை தட்டிச்சென்றது. நியூ­சி­லாந்து பரி­தா­ப­மாக தோற்று இரண்­டா­வது முறை­யாக கோப்பை வாய்பை இழந்­தது. அதே நேரம் இங்­கி­லாந்து தனது சொந்த மண்­ணில் முத­லா­வது உலக கோப்­பையை வென்று சாதித்­தது. ஆட்­ட­நா­ய­க­னாக ஸ்டோக்ஸ் தேர்வு செய்­யப்­பட்­டார்