வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல்- சேலம் திமுக எம்.பி. பார்த்திபன் மீது வழக்குப்பதிவு

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 14:17

சேலம், 

    வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மக்களவைத்தொகுதி திமுக எம்பி பார்த்திபன். சேலம் வேடங்கரடு மலைப்பகுதியில் கள தணிக்கைக்குச் சென்ற வனக்காவலர்களுக்கு இவர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து எம்.பி பார்த்திபன் மற்றும் அவரது சகோதர்கள் என 4 பேர் மீது அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனச்சரகர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த எம்.பி, பார்த்திபன் தன் மீது அவப்பெயரை உண்டாக்கவே தேவையின்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.