டீசல் – 11 காசுகள் குறைவு, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019 09:42

சென்னை,        

சென்னையில் டீசல் விலை இன்று 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.96க்கு விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான ரூ.75.70க்கு விற்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த 2018 ஜூன் மாதம் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ68.02 என்றும், டீசல் விலை ரூ57.41 என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிற தொடங்கியது.

இந்நிலையில் டீசல் விலை இன்று (ஜூலை 12ம் தேதி) 11 காசுகள் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.69.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையில் (ரூ.75.70) இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.