தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமம் அருகே நியூட்ரினோ மையம்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 20:23

புதுடில்லி:

    தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் கிராமம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நியூட்ரினோ என்பது, மின்னியல் ரீதியில், நேர்மறை, எதிர்மறை இன்றி, நடுத்தன்மை உடைய நுண்துகள். எலக்ட்ரானுடன் ஒப்பிடுகையில், இதன் அடர்த்தி, மிகக் குறைவு. கதிரியக்க தாக்கத்தால், நியூட்ரினோ உருவாகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம், புவியின் உள்கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவியல் நிபுணர்கள கருதுகிறார்கள்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொட்டிபுரம் கிராமம் அருகே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து, நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது.
இந்த திட்டத்துக்காக, மலை அடியில், 2.5 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசும் ஒப்புதல் தந்துள்ளது. இதையடுத்து, 2015ல், இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மக்கள எதிர்ப்பு காரணமாக் பணிகள துவக்கப்படவில்லை.

இந்நிலையில், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், கூறியது:

தேனி மாவட்டம் பொட்டி புரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, அங்கு நியூட்ரினோ மையம் அமைய உள்ளது. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆயவகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது