தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையில் தமிழகத்திற்கு முதலிடம்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 19:36

சென்னை

    தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை அகில இந்திய அளவில் 17 சதவீதமாக குறைந்து விட்டது ஆனால் தென்மாநிலங்கள் பற்றாக்குறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை 17 சதவீதமாக உள்ளது எனக் கூறலாம் தென் மாநிலங்களில் பற்றாக்குறையில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு அங்கு வழக்கமான அளவைவிட 49 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது இரண்டாவது இடத்தில் கேரள மாநிலம் உள்ளது அங்கு போய் அங்கு பற்றாக்குறை அளவு 45 சதவீதம் ஆகும்.

லட்சத்தீவு கடலோர ஆந்திர பிரதேசம் ராயலசீமா தெலுங்கானா விதர்ப்பம் ஆகிய பகுதிகளில் பருவமழை பற்றாக்குறை நிலவுகிறது ஒவ்வொரு இடத்திலும் பற்றாக்குறை அளவு வேறுபடுகிறது.

இப்பொழுது உள்ள நிலவரப்படி ஜூலை மாதம் 17ஆம் தேதி ஆந்திர மாநில கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது ஆந்திர மாநில கடற்கரையிலும் அல்லது ஒடிசா கடற்கரையில் அந்தத் தாளில் உருவாவதற்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் பீகார் மாநிலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தென்மேற்கு பருவ மழை மேகங்கள் சுற்றி வருவதாக வானிலை நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர் இந்த மேகங்கள் அப்படியே வடக்குப் பகுதியில் நடந்து இமயமலைகளில் உள்ள சிறிய கொண்டு பகுதிகளில் தங்க கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.