காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும்: பரூக் அப்துல்லா

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 18:33

ஸ்ரீநகர்

   இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நீண்டநாள் காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று கூறினார்.

தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஹஸ்ரத்பாலில் தனது தாயாரின் 19ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியை நடத்தினார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சித் தொண்டர்களிடம் பாரூக் அப்துல்லா உரையாற்றினார். அப்போது பாரூக் அப்துல்லா, காஷ்மீர் பிரச்சனை குறித்து. பேசினார்.
”இந்தியா - பாகிஸ்தான் இடையில் காஷ்மீர் என்ற பகுதி ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. ஐநா சபைக்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இன்னும் தீர்வு காணப்படாத் நிலையில் இன்னும் நீடிக்கிறது. இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படவேண்டும்.

இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் காஷ்மீர் மக்களுடன் இந்தியா பேசவேண்டும். ஆசாத் காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பேச்சுவார்த்தையைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. ராணுவ நடவடிக்கைகளால் எதையும் சாதிக்க முடியாது” என்று பாரூக் அப்துல்லா தெரிவித்தார்.