மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு; சான்றிதழ் விநியோகம்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 16:34

சென்னை,

    தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு மாநிலங்களவைப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற மாநிலங்களவை உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளனர்.

அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட முகம்மது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

திமுகவின் சார்பில் போட்டியிட்ட தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற வைகோ, வில்சன், சண்முகம் ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளனர்.

வெற்றிச் சான்றிதழை, தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டசபைச் செயலாளருமான சீனிவாசனிடம் இருந்து ஆறு பேரும் பெற்றுக் கொண்டனர்.

6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தலைமை செயலகத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பெற்ற் வைகோ, வில்சன், சண்முகம் ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அப்போது துரைமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.