போராடி வெளியேறியது இந்தியா: உலக கோப்பை கனவு தகர்ந்தது

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 00:06


மான்செஸ்டர்:

இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய அரைஇறுதிப் போட்டியில் ஜடேஜா (77), தோனி (50) போராடிய போதும் 18 ரன்னில் பரிதாபமாக தோற்றது. நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்னை சேஸ் செய்த இந்திய அணிக்கு ரோகித், கேப்டன் கோஹ்லி, ராகுல் மூவரும் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தினேஷ் கார்த்திக் முதல் 20 பந்தில் ரன் எடுக்க முடியாமல் திணறினார். ரிஷாப் பன்ட், பாண்ட்யா தலா 32 ரன் எடுத்து வெளியேறினர். இந்த வெற்றியால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நியூசி., பைனலுக்கு முன்னேறியது.

ஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரைஇறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதியது. தவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசி., 4வது இடத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதிய லீக் சுற்றில் மோதிய போது மழை காரணமாக ஆட்டம் ரத்தானது.

இதே போல் மான்செஸ்டரிலும் மழை மிரட்டியது. இருந்தும் வருண பகவான் கருணையில் ஆட்டம் துவங்கிய போது ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். பும்ரா, புவனேஷ்வர் இருவரும் வேகத்தில் மிரட்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். கப்டில் (1) ஆட்டமிழந்தார். 8வது ஓவரில் அணிக்கான முதல் பவுண்டரி அடிக்கப்பட்டது. தவிர, 10 ஓவர் முடிவில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களே எடுத்திருந்தது, ஜடோஜா பந்தில் நிகோலஸ் (28) கிளீன் போல்டானார். பின் கேப்டன் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தனர். சகால் ‘சுழலில்’ வில்லியம்சன் (67) சிக்கினார், நீஷம் (12), கிராண்ட்ஹோம் (16) ஏமாற்றினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் மழைவர ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, டெய்லர் (67), லதாம் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா, புவனேஷ்வர், பாண்ட்யா, ஜடேஜா, சகால் தலா 1 விக்கெட் சாய்த்தனர். தொடர்ந்து மழை பெய்ய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதாவது போட்டி நேற்று தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வருண பகவான் கருணை காட்ட நேற்றைய தினம் குறிப்பிடட்ட நேரத்தில் ஆட்டம் துவங்கியது. டெய்லர் 74 ன் (90 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில் ஜடேஜாவால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதே போல் லதாம் 10 ரன் எடுத்திருந் போது புவனேஷ்வர் பந்தில் ஜடோஜா அற்புதமாக கேட்ம் பிடிக்கப்பட்டு வெளியேறினார். தொடர்ந்து அசத்திய புவனேஷ்வர் இம்முறை ஹென்ரி (1) விக்கெட்டை வீழ்த்தினார். கடைசியில் சான்ட்னர் (9), பவுலட் (3) அவுட்டாகாமல் கைகொடுக்க நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3, பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா, சகால் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஹென்ரி வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது வேகத்தில் ரோகித் சர்மா (1) ஆட்டமிழந்தார். பவுலட் பந்ததில் கோஹ்லி (1) எல்.பி.டபுள்யு., ஆனார். மீண்டும் அசத்திய ஹென்ரி இம்முறை ராகுலை (1) வழியனுப்பி வைத்தார். 5 ரன்னில் 3 முக்கிய விக்கெட்டுகளை ழந்த நிலையில், இளம் வீரர் ரிஷாப் பன்ட்டுடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். நியூசி., பந்துவீச்சும் பீல்டிங்கும் மிரட்ட இந்த இருவரும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக, தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் 20 பந்தில் ரன் எடுக்கவில்லை 21வது பந்தில் பவுண்டரி அடித்து தனது கணக்கை துவக்கினார். அதே நேரம் ரிஷாப் பன்ட், தனது வழக்கமான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.

இந்த நேரத்தில் ஹென்ரி பந்தில் தினேஷ் கார்த்திக் (7) ஆட்டமிழந்தார். பாய்ன்ட் திசையில் நீஷம் அபாரமாக கேட்ச் பிடித்தார். அடுத்து தோனிக்கு பதில் பாண்ட்யா களமிறக்கப்பட்டார். சிறப்பாக விளையாடிய வந்த ரிஷாப் பீன்ட் (32) சான்ட்னர் பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். இதே போல் சான்ட்னர் பந்தில் பாண்ட்யாவும் (32) நடையை கட்ட இந்தியா பரிதாப நிலைக்கு சென்றது. 92 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், தோனியுடன் ஜடேஜா இணைந்தார். திடீர் திருப்பமாக ஜடேஜா ‘ருத்ரதாண்டவம்’ ஆட அவருக்கு தோனி கம்பெனி கொடுத்தார். ஆட்டம் சூடுபிடித்தது. எதிரணி ப;ப்து வீச்சை ஜடேஜா சிக்சர், பவுண்டரி என விளாச ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. ஜடேஜா 39 பந்தில் அரைசதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தவிர, 46.3 ஓவரிரில் இந்தியா 200 ரன் கடந்த போது ஆட்டம் இந்தியா வசம் திரும்பியது.

இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், பவுல்ட் பந்தை தூக்கி அடித்து வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா ஆட்டமிரக்க ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இவர் 77 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இருபப்தும் தோனி இருக்கார் என்ற நம்பிக்கை இருந்தது. 2 ஓவரில் 31 ரன் தேவை என்ற நிலையில், பர்குசன் பந்தில் தோனி இமாலய சிக்சர் அடித்தார். அதே ஓவரில் 2 ரன் எடுக்க விரைவாக ஓடிவந்த நிலையில், கப்டில் தனது சூப்பர் த்ரோவால் ஸ்டைம்பை தகர்க்க தோனி ரன் அவுட் ஆனார். தோனியின் இந்த வுட் நியூசிலாந்தின் வெற்றியை உறதி செய்தது. தோனி 50 ரன் (72 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். புவனேஷ்வர் குமார் (0), சகால் (5) வெளியேற இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னுக்கு ஆட்டமிழந்ததது. இதையடுத்து 18 ரன்னில் வீழ்ந்த இந்தியாவின் அ¬ரிறுதி கனவு தகர்ந்தது. பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தார். நியூசி., தரப்பில் ஹென்ரி 3, பவுலுட், சான்ட்னர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். பவுலிங்கில் அசத்திய ஹென்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக ரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. பர்மிங்காமில் இன்று நடக்க உள்ள இரண்டாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்துடன் (லார்ட்ஸ், ஜூலை 14) மோதும்.