கணவன் மனைவி இடையே எமனாகும் டிக் டாக்! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019

இளம் தலை­மு­றையை முற்­று­மு­ழு­தாக வளைத்­துப் போட்­டி­ருக்­கி­றது டிக் டாக் ஆப். சமூக ஊட­கங்­க­ளைத் திறந்­தாலே, வரிசை கட்டி நிற்­கின்­றன வீடி­யோக்­கள். ஆண், பெண் வேறு­பா­டில்­லா­மல் வித­வி­த­மாக வீடி­யோக்­கள் எடுத்­துப் பதிவு செய்­கி­றார்­கள். தொடக்­கத்­தில் கொண்­டாட்­ட­மா­க­வும், பொழு­து­போக்­கா­க­வும் இருந்த டிக் டாக் இப்­போது விப­ரீ­த­மா­க­வும் உரு­வெ­டுத்து நிற்­ப­து­தான் அதிர்ச்­சியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

பெரம்­ப­லூர் மாவட்­டம், சீரா­நத்­தம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் மணி­கண்­டன். சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்றி வரு­கி­றார். இவ­ரின் மனைவி அனிதா, மகன் அனீஷ், மகள் மோனிஷா மூவ­ரும் சீரா­நத்­தத்­தில் வசித்து வந்­த­னர். அனி­தா­வுக்கு `டிக் டாக்’­கில் அதிக ஈடு­பாடு. வீட்­டில் குழந்­தை­க­ளைக்­கூட சரி­யா­கக் கவ­னிக்­கா­மல், எப்­போ­தும் `டிக் டாக்’­கி­லேயே மூழ்­கி­யி­ருக்­கி­றார் என்று கண­வர் சுரே­ஷி­டம் உற­வி­னர்­கள் புகார் செய்­துள்­ள­னர்.

சமீ­பத்­தில் ஒரு­நாள், மகள் மோனிஷா அடி­பட்டு வலி­யால் துடித்­தி­ருக்­கி­றார். அப்­போது அவரை மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லா­மல், `டிக் டாக்’ கில் மூழ்­கி­யி­ருந்­த­தாக கண­வர் சுரே­ஷுக்கு புகார் சென்­றுள்­ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ், தன் மனைவி அனி­தா­வைக் கண்­டித்­துள்­ளார். கண­வன் திட்­டி­ய­தால் மன­மு­டைந்த அனிதா விஷம் குடித்­துத் தற்­கொலை செய்­து­கொண்­டார். மேலும், அவர் விஷம் குடித்­த­தை­யும் `டிக் டாக்’­கில் வீடி­யோ­வாக்கி வெளி­யிட்­டுள்­ளார்.

தற்­கொலை

“சுரேஷ், அனிதா தம்­பதி விஷ­யத்­தில் மட்­டு­மல்ல, இன்று பல தம்­ப­தி­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­து­டன்,  குடும்ப உற­வு­களை சிதைக்­கும் ஊட­க­மா­க­வும் ‘டிக் டாக்’ மாறி­யி­ருக்­கி­றது. அத­னால்­தான் இது­போன்ற சம்­ப­வங்­கள் நடக்­கின்­றன”  என்­கி­றார் உள­வி­யல் நிபு­ணர் பிர­பா­க­ரன்.

"மேலும், சமூக ஊட­கங்­களை எப்­ப­டிக் கையா­ள­வேண்­டும் என்­ப­தை­யும் தெரிந்து வைத்­துக் கொண்­டால் இந்த பிரச்­னை­யி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­ள­லாம். அதோடு, பய­னுள்ள தக­வல்­க­ளை­யும் மற்­ற­வர்­க­ளு­டன் சொல்லி சிரித்து, மகிழ்ச்­சி­ய­டைய வேண்­டிய விஷ­யங்­க­ளை­யும் பொது­வெ­ளி­யில் பகிர்ந்து கொள்­வ­தில் எந்­தத் தவ­றும் இல்லை. ஆனால், பெரும்­பா­லான பெண்­கள் பொது­வெ­ளி­யில் பகி­ரக்­கூ­டாத பல விஷ­யங்­களை வெளி­யி­டு­கி­றார்­கள். கார­ணம், மற்­ற­வர்­க­ளின் பார்வை தன்­மீது இருக்­க­வேண்­டும் என்­கிற எண்­ணம். பாராட்­டு­க­ளுக்கு அடி­மைப்­பட்­டுக் கிடப்­ப­தால் தங்­க­ளது எல்லை எது என்­பதை மறந்து விடு­கின்­ற­னர். இத­னால் காலப்­போக்­கில் கண­வன், பிள்ளை என குடும்­பத்தை மறந்து `டிக் டாக்’கே கதி என கிடக்­கி­றார்­கள்.  

நாம் எதைச் செய்­தா­லும், `அதை ஏன் செய்­கி­றோம்’, `அத­னால் என்ன பயன்’, `என்­னென்ன பின்­வி­ளை­வு­கள் ஏற்­ப­டும்’ என்­ப­து­பற்றி யோசிக்­க­வேண்­டும். ‘டிக் டாக்’­கில் வீடியோ போடு­வ­தால் என்ன பலன் கிடைக்­கப் போகி­றது..? சினிமா, தொலைக்­காட்­சித் துறை­க­ளில் வாய்ப்­புத் தேடு­ப­வர்­க­ளுக்கு இது பய­ன­ளிக்­க­லாம். அந்த தேடலே இல்­லாத பெண்­கள் ஏன் வீடி­யோக்­கள் போட­வேண்­டும்? தற்­கா­லிக சந்­தோ­ஷத்­துக்­காக, முகம் தெரி­யா­த­வர்­க­ளின் பாராட்­டுக்கு ஆசைப்­பட்டு அதைச் செய்­கி­றார்­கள் என்­ப­து­தான் வேதனை. தன் மீதான கவ­னத்­தைத் தக்க வைப்­ப­தற்­காக சில நேரங்­க­ளில் வரம்பை மீறி விடு­கி­றார்­கள்.

`டிக் டாக்’ பயன்­ப­டுத்­து­வது முற்­றி­லும் தவறு என்று சொல்­ல­வில்லை. ஆனால், நாம் அதில் பகி­ரும் விஷ­யங்­கள், நம்­மை­யும், நம் குடும்­பத்­தை­யும் பாதிக்­கா­த­வாறு பார்த்­துக்­கொள்­ள­வேண்­டும். ஆபா­ச­மான அசை­வு­க­ளு­டன் நட­ன­மா­டு­வது, தவ­றான வசன உச்­ச­ரிப்­பு­க­ளுக்கு வாய­சைப்­பது போன்ற தேவை­யில்­லாத, எதற்­கும் பய­னற்ற விஷ­யங்­களை கண்­டிப்­பா­கச் செய்­யக் கூடாது. நாம் செய்­யும் தவ­றான செயல்­க­ளுக்­காக, நம்­மைப் பின் தொடர்­ப­வர்­கள், பாராட்­டு­ப­வர்­கள் தவ­றான நோக்­கத்­து­டன்­தான் நம்­மைப் பார்ப்­பார்­கள். பெரும்­பா­லும் இது அழிவை நோக்­கியே அழைத்­துச் செல்­லும்; குடும்ப வாழ்க்­கை­யைச் சிதைக்­கும்.

சுய கட்­டுப்­பாடு உள்­ள­வர்­கள் மட்­டுமே பேஸ்­புக், வாட்ஸ் அப், டிக் டாக் போன்ற சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும். அப்­படி இருக்க முடி­யா­த­வர்­கள் இது­போன்ற ஆப்­களை டெலிட் செய்­து­வி­டு­வது நல்­லது” என்­றார்.

`கண­வன் மனை­வி­யி­டையே சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது பற்­றித் தெளி­வி­ருந்­தால் பிரச்­னை­கள் ஏற்­ப­டா­மல் தவிர்க்­க­லாம்’ என்­கி­றார் மன­நல மருத்­து­வர் ஆனந்­த­பா­லன்.

“இது போன்ற ஆப்­க­ளைப் பயன்­ப­டுத்தி வீடி­யோக்­கள் பதி­வி­டும்­போது உட­னடி அங்­கீ­கா­ரம் கிடைக்­கி­றது. பிறர் நம்மை அங்­கீ­க­ரிக்க வேண்­டும், பாராட்­ட­வேண்­டும் என்­பது மனி­தர்­க­ளி­டையே பொது­வாக காணப்­ப­டும் ஓர் எதிர்­பார்ப்­பு­தான். தங்­க­ளது திற­மை­களை வெளி உல­குக்­குக் காட்ட இது ஒரு நல்ல தள­மாக இருக்­கி­றது. அதே­நே­ரம்,  ஒரு­முறை பாராட்டு கிடைத்­தால் அதை தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­கிற எண்­ணம் உண்­டா­கி­வி­டும். இத­னால், சிலர் அதற்கு அடி­மை­யாகி முழு­நே­ரத்­தை­யும் அதி­லேயே செல­வ­ழிக்­கின்­ற­னர். அத­னால் அன்­றா­டப்­ப­ணி­க­ளில் எந்த தடை­யும் ஏற்­ப­டா­மல் பார்த்­துக்­கொண்­டால் எந்­தப் பிரச்­னை­யும் ஏற்­ப­டாது.

கண­வன், - மனைவி

திரு­ம­ண­மான பெண்­கள் இது போன்ற சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்­பது சரி­யல்ல. தம்­ப­தி­க­ளி­டையே போதிய புரி­தல் இருந்­தால் எந்­தப் பிரச்­னை­யும் ஏற்­ப­டாது. தங்­க­ளுக்­கான எல்­லை­களை இரு­வ­ரும் சேர்ந்து பேசி முடி­வெ­டுக்­க­லாம். எல்லா விஷ­யத்­தி­லும் நன்­மை­யும் உண்டு, தீமை­யும் உண்டு. அதைச் சரி­யா­கக் கையாண்­டால் எந்­தப் பிரச்­னை­யும் ஏற்­ப­டப் போவ­தில்லை” என்­றார்.