நக்சல் பூமியில் பூத்த முதல் பெண் ஐ.பி.எஸ்.,! – சுமதி

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019

நம்­ரதா ஜெயின் இரண்­டா­வது முயற்­சி­யில் சிவில் சர்­வீச் தேர்­வில் வெற்றி பெற்­றா­லும், முன்­னிலை இடம் பிடித்து ஐபி­எஸ் பணி­யில் சேர மூன்­றா­வது முறை மீண்­டும் முயற்­சித்து வெற்றி பெற்­றுள்­ளார்.

சத்­திஸ்­க­ரின் தண்­ட­வடா பகுதி மாவோ­யிஸ்ட்­கள் ஆதிக்­கம் செலுத்­தும் பகு­தி­யாக அறி­யப்­ப­டு­கி­றது. இந்த பகு­தி­யில் 5.5 லட்­சம் மக்­கள் வசிக்­கின்­ற­னர். நக்­ஸல்­கள் வன்­முறை தவிர, மது­ போதை வன்­முறை, வேலை­யின்மை ஆகிய பிரச்­னை­கள் இதன் வளர்ச்­சியை பாதித்­துள்­ளன. இந்த மாவட்­டத்­தின் கல்வி விகி­தம் 30.2 சத­வீ­த­மாக மிக குறை­வாக உள்­ளது. மாவட்­டத்­தில் உள்ள கல்வி நிறு­வ­னங்­கள் எளி­தில் அணுக முடி­யா­மல் தொலை­தூ­ரத்­திக்ல் இருப்­பது குறைந்த கல்வி விகி­தத்­திற்கு ஒரு கார­ண­மாக அமை­கி­றது.

இந்த பின்­ன­ணி­யில் மாவட்­டத்­திற்கு நம்­பிக்கை அளிக்­கும் வித­மாக, தண்­ட­வ­டாவை சேர்ந்த நம்­ரதா ஜெயின் இந்த பகு­தி­யில் இருந்து யு.பி.எஸ்.சி தேர்­வில் வெற்றி பெற்ற முதல் பெண்­ணாக இருக்­கும் செய்தி வெளி­யாகி உள்­ளது. அகில இந்­திய அள­வில் இவர் 12வது இடம் பிடித்­துள்­ளார்.  

சிவில் சர்­வீஸ் தேர்­வுக்கு தயா­ராக போதிய வச­தி­கள் இல்லை என்ற போதி­லும், நம்­ரதா விடா­மு­யற்­சி­யோடு, ஆன்­லைன் பயிர்­சியை நாடி, தனது சிவில் சர்­வீஸ் கனவை நிறை­வேற்­றிக்­கொண்­டுள்­ளார்.   “எனக்­கும் என் குடும்­பத்­தி­ன­ருக்­கும் இது பெரு­மி­த­மான தரு­ணம். நான் பணி அமர்த்­தப்­ப­டும் எந்த ஒரு இடத்­தி­லும் கடமை செய்ய தயா­ராக உள்­ளேன். சதிஸ்­க­ரில் மேலும் பல இளை­ஞர்­கள் சாதிக்க தூண்­டு­கோ­ளாக இருப்­பேன்,” என 25 வய­தான நம்­ரதா கூறு­கி­றார்.

இவ­ரது குடும்­பம் ராஜஸ்­தா­னைச் சேர்ந்­தது என்­றா­லும், நம்­ர­தா­வின் தாத்தா 50 ஆண்­டு­க­ளுக்கு முன், பாஸ்­ட­ரில் இருந்து குடி­பெ­யர்ந்து தண்­ட­வா­டா­வில் வசித்து வரு­கின்­ற­னர். அவ­ரது அப்பா ஜன்­வர்­லால் ஜெயின் பிசினஸ்­மே­னாக இருக்­கி­றார். தாய் கிரண் ஜெயின் இல்­லத்­த­லை­வி­யாக இருக்­கி­றார்.  

தண்­ட­வ­டா­வில் பெற்ற அனு­ப­வம் கார­ண­மாக, நம்­ரதா இந்­திய காவல் துறை­யில் (ஐ.பி.எஸ்) சேர விரும்­பு­கி­றார். 10 வயது முதல் அவர் வன்­முறை சம்­ப­வங்­களை பார்த்து வந்­துள்­ளார். வன்­முறை சம்­ப­வங்­கள் பெரு­கு­வ­தைக் கண்டு, தனது பகு­திக்கு ஏதே­னும் செய்ய விரும்­பி­னார்.

எட்­டா­வது படித்­துக்­கொண்­டி­ருந்த போது, பள்­ளிக்கு வந்த மாவட்ட கலெக்­ட­ரி­டம் அவர் அறி­மு­கம் செய்து வைக்­கப்­பட்­டார். அதன் பிறகு அவர் தனது தந்­தை­யி­டம் கலெட்­கர் பதவி பற்றி கேட்­ட­றிந்­தார்.

“தந்தை என்­னி­டம் சிவில் சர்­வீஸ் தேர்வு பற்­றி­யும் கலெட்­கர்­கள் சமூ­கத்­தின் மன்­னர்­கள் என்­றும் தெரி­வித்­தார். சமூ­கத்­தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் ஆற்­றல் படைத்த, மக்­கள் நல­னுக்­காக செயல்­ப­டக்­கூ­டிய அதி­கா­ரம் பெற்­ற­வர்­கள் ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள்,” என தெரி­வித்­தார். இத­னால் ஊக்­கம் பெற்ற நம்­ரதா, சிவில் சர்­வீஸ் தேர்வு எழுதி, அரசு அதி­கா­ரி­யாக வேண்­டும் என உறுதி கொண்­டார். பள்­ளிப் படிப்பை முடித்து, பிலாய் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் பட்­டம் பெற்ற பிறகு அவர் சிவில் சர்­வீ­சஸ் தேர்­வுக்கு தயா­ராக டில்லி சென்­றார்.

“யூ.பி.எஸ்.சி தேர்வு தொடர்­பான வச­தி­கள் தண்­ட­வா­டா­வில் இல்லை. எங்­க­ளுக்கு அதிக தக­வல்­கள் தெரி­ய­வில்லை, உயர்­கல்வி என்­றால், பொறி­யி­யல் அல்­லது எம்­பிஏ படிப்­பது என நினைத்­துக் கொண்­டி­ருந்­தோம்,” என்­கி­றார் நம்­ரதா.

டில்­லி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்த போது தான் நம்­ர­தா­வுக்கு சிவில் சர்­வீஸ் தேர்வு முறை குறித்து புரிந்­தது. 2015ல் அவ­ரால் வெற்றி பெற முடி­ய­வில்லை. பின்­னர் தண்­ட­வடா திரும்­பி­ய­வர் தனது தயா­ரிப்பை தொடர்ந்­தார். மாவட்ட நிர்­வா­கம் நடத்­திய பயிற்சி மையத்­தில் அவர் பயிற்சி பெற்­றார். 2016 ல் அவர் இராண்­டா­வ­து­வது முயற்­சி­யில், 1099 வெற்­றி­யா­ளர்­க­ளில் 99 வது இடம் பெற்­றார். எனி­னும் அவர் ஐ.ஏ.எஸ் அல்­லது ஐ.பி.எஸ் அதி­கா­ரி­யாக விரும்பி மேலும் முன்­னி­லை­யில் தேர்­வாக விரும்­பி­னார். மூன்­றா­வது முயற்­சிக்கு அவர் ஆன்­லைன் கல்வி தளங்­கள் உத­வி­யு­டன் முயற்சி செய்­தார்.

”கடின முயற்சி கார­ண­மாக, ரேங்க் பெற முடி­யாத நிலை­யில் இருந்து 99வது இடத்­திற்கு வந்­தேன். என் தோல்­வி­க­ளில் இருந்து நிறைய கற்­றுக்­கொண்டு, கடின உழைப்பு மட்­டும் பதில் அல்ல என புரிந்து கொண்­டேன். இலக்கு குறித்து வியூ­கம் அமைத்து படிப்­ப­டி­யாக செயல்­பட வேண்­டும் என புரிந்­தது,” என்­கி­றார் நம்­ரதா.

பொது­வாக சிவில் சர்­வீஸ் தேர்­வுக்கு தயா­ரா­வது என வரும் போது, ஒன்று டில்­லிக்கு சென்று பயிற்சி பெற வேண்­டும் அல்­லது உள்­ளூ­ரி­லேயே தயா­ராக வேண்­டும். எனி­னும் தற்­போ­தும் பல மாண­வர்­கள் ஆன்­லைன் கல்வி மூலம் தயா­ரா­கின்­ற­னர். “கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக ஆன்­லைன் பயிற்சி மூலம் தயார் செய்து வந்­தேன். என் வெற்­றி­யில் நியோ ஸ்டென்­சி­லுக்கு முக்­கி­யப் பங்கு இருக்­கி­றது. தொலை­தூ­ரத்­தில் உள்ள மாண­வர்­கள் தேசிய அள­வில் போட்­டி­யிட ஆன்­லைன் பாடத்­தி­டங்­கள் உத­வு­கின்­றன,” என்­கி­றார் .

தொழில்­நுட்­பம் வரம்­பு­களை உடைத்து, கல்­வியை அனை­வ­ருக்­கும் சாத்­தி­ய­மாக்கி உள்­ள­தாக கரு­து­கி­றார் நம்­ரதா. “இதற்கு முன்­னர் எங்­கள் ஊர் பெய­ரைச் சொன்­னால் மக்­கள் உடனே வன்­மு­றையை தான் நினை­வில் கொள்­வார்­கள். எங்­கள் நக­ரம் வளர்ச்சி அடை­ய­வில்லை. 2ஜி இணைப்பே பெரிய விஷ­ய­மாக உள்­ளது. இன்று பல வச­தி­கள் உள்­ளன. நக்­சல் இயக்­கம் தவிர பல விஷ­யங்­கள் இருப்­பதை உணர்த்த முடி­கி­றது,” என்­கி­றார் நம்­ரதா.