கைகொடுத்தார் சாதித்தேன்...! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019

கனவு காணும் வாழ்க்கை கலைந்து போகும் ஓட­மா­காது, அந்­தக் கனவு நிறை­வே­றும் என்ற அதீத நம்­பிக்கை இருந்­தால் என்று அனு­ப­வப்­பூர்­வ­மாக உணர்ந்­தி­ருக்­கி­றார் இளம் பெண் தொழில் முனை­வ­ரான சிந்து அருண்.

கோயம்­புத்­தூர் மாவட்­டத்­தில் ஒரு சிறு கிரா­மத்­தில் பிறந்து வளர்ந்த சிந்­து­வின் தந்­தை­யும், தாயும் ஆசி­ரி­யர்­கள். தொடக்­கக்­கல்­வியை சொந்த ஊரி­லேயே படித்­த­வர் 6ம் வகுப்­பிற்கு பின்­னர் பெரி­யப்பா வீட்­டில் தங்கி படித்து வந்­துள்­ளார்.

“6ம் வகுப்பு முதல் கல்­லூரி படித்து முடிக்­கும் வரை பெரி­யப்பா வீட்­டில் தங்கி படித்­தேன், பள்­ளிப்­ப­டிப்பு அனைத்­தும் தமிழ் வழி­யி­லேயே என்­ப­தால் ஆங்­கி­லம் பேசத் தெரி­யாது. பொள்­ளாச்சி மகா­லிங்­கம் கல்­லூ­ரி­யில் பி.டெக் படித்த போது லண்­ட­னில் உள்ள பிர­பல பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மேற்­ப­டிப்பு படிக்க வேண்­டும்,” என்று ஒரு கனவு இருந்­தது என்­கி­றார் சிந்து.

யுகே­யில் உள்ள டாப் 1 கல்­லூ­ரி­யில் படிக்க வேண்­டும் என்ற எனது விருப்­பத்தை தோழி­யி­டம் கூறி­னேன். இதற்­கா­கவே நான் ஆங்­கி­லம் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற எண்­ணத்­திற்கு உறு­து­ணை­யாக இருந்­தார் கல்­லூரி தோழி மேகலா.

பிடெக் முடித்­து­விட்டு எந்த நிறு­வ­னத்­தி­லும் பணி­யில் சேரா­மல் என்­னு­டைய கன­வான லண்­ட­னில் உயர்­கல்வி படிப்­ப­தற்­கான வேலை­க­ளில் ஈடு­பட்­டேன். லண்­ட­னில் இருந்த டாப் பல்­க­லைக்­க­ழ­கம் உள்­பட 4 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் விண்­ணப்­பித்து காத்­தி­ருந்­துள்­ளார் சிந்து. பல்­க­லைக்­க­ழ­கம் தொடங்­கிய பின்­ன­ரும் சிந்­து­விற்கு அழைப்பு வராத நிலை­யி­லும் நம்­பிக்­கை­யோடு அவர் காத்­தி­ருந்­த­தற்­கான பலன் கிடைத்­தது. ஒரு வாரத்­திற்­குப் பிறகு தி வார்­விக் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இருந்து சிந்­து­விற்கு அழைப்பு வந்­தது.

 2007ம் ஆண்­டில் பர்­மிங்­ஹா­மிற்கு சென்ற சிந்­து­விற்கு வானிலை, சூழ்­நிலை, மனி­தர்­கள், உண­வு­முறை, மொழி, கலாச்­சா­ரம் என அனைத்­துமே புதி­தாக இருந்­தது. எனி­னும் தனது கனவு கைகூ­டி­யது என்­ப­தால் இனி­யும் செல­வுக்கு பெற்­றோரை கஷ்­டப்­ப­டுத்­தக் கூடாது என்று பகுதி நேர வேலை தேடத் தொடங்­கி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் தான் அங்கு அறி­மு­க­மான தமிழ் நண்­பர் மூலம் மற்­றொரு விடு­தி­யில் நிரந்­த­ரப் பணி கிடைத்­துள்­ளது சிந்­து­விற்கு. காலை 9 மணி முதல் 4.30 மணி வரை கல்­லூ­ரிப்­ப­டிப்பு, அதன் பிறகு 6 மணி முதல் இரவு 12 மணிக்கு வரை பணி பின்­னர் வீடு திரும்பி ஓய்­வெ­டுத்­து­விட்டு மீண்­டும் அடுத்த நாள் ஓட்­டம் என்று ஒரு வரு­டம் சிந்­து­விற்கு நகர்ந்­துள்­ளது. படிப்பு, பகுதி நேர வேலை என்று ஓய்­வெ­டுக்­கக் கூட சிறிது நேரமே கிடைத்­தா­லும் இனி பெற்­றோ­ருக்கு தன்­னால் சுமை இருக்­காது என்ற எண்­ணம் தந்த மன நிறை­வால் 365 நாட்­கள் சக்­க­ரம் போல சுழன்று ஓடிக்­கொண்­டி­ருந்­துள்­ளார் என்­கி­றார் சிந்து.  பணம் சம்­பா­திப்­பதை விட லட்­சி­ய­மும், கனவு முக்­கி­யம் என்ற உறு­தி­யோடு 2009ம் ஆண்டு இறு­தி­யில் இந்­தியா திரும்­பி­யுள்­ளார் சிந்து.

“2010ம் ஆண்­டில் இ வர்த்­த­கம் பெரிய அள­வில் அறி­மு­கம் ஆகாத கால­கட்­டத்­தில் buy2all என்ற ஆன்­லைன் விற்­பனை தளம் மூலம் புத்­த­கம், செல்­போன் விற்­பனை செய்து வந்­தோம். ரிமோட் பகு­தி­க­ளுக்­கும் கூட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை கொண்டு சேர்த்த போது அவர்­கள் அளித்த பாராட்­டு­கள் மன­நி­றை­வைத் தந்­தது என்று பெரு­மி­தம் கொள்­கி­றார் சிந்து.

எல்­லாம் நன்­றா­கத் தான் போய்க்­கொண்­டி­ருந்­தது, ஆனால் இ–வர்த்­த­கத்­தில் போது­மான அனு­ப­வம் இல்­லா­த­தால் அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார் சிந்து.

“என்­னு­டைய சேமிப்பு, அண்­ண­னின் சேமிப்பு என சுமார் 25 லட்­சம் ரூபாயை தொழி­லில் முத­லீடு செய்­தி­ருந்­தோம். வர்த்­த­கம் நல்ல முறை­யில் தான் நடந்து கொண்­டி­ருந்­தது, ஆனால் முறை­யான வழி­காட்­டு­தல் இல்­லா­தது, நிதியை குறிப்­பிட்ட காலத்­திற்கு பின்­னர் அதி­க­ரிக்­கா­மல் விட்­டது, தொழில்­நுட்ப ரீதி­யி­லான அனு­ப­வ­மில்­லா­தது போன்ற கார­ணங்­க­ளால் அந்த தொழில் சறுக்­கி­விட்­ட­தால் அதை தொட­ர­மு­டி­யாத நிலை ஏற்­பட்­ட­தாக,” கூறு­கி­றார் சிந்து.

தொழில்­மு­னை­வ­ராக முத­லில் வைத்த அடி­யி­லேயே பின்­வாங்­கும் நிலைக்கு தள்­ளப்­பட்­ட­தால் அதன் பிறகு பிசி­னஸ் சார்ந்த அறிவு மற்­றும் அனு­ப­வங்­களை கற்­றுக்­கொள்­ளத் தொடங்­கி­யுள்­ளார் சிந்து. ஆனால் வயது 25 ஆகி­விட்­டது திரு­ம­ணம் செய்து கொண்டு எது வேண்­டு­மா­னா­லும் செய் என்று சிந்­து­வின் அம்மா போட்ட கட்­ட­ளையை மீற முடி­யா­மல், திரு­ம­ணத்­திற்கு ஒப்பு கொண்­ட­வர், தனது வாழ்க்­கைத் துணையை தான்­தான் முடிவு செய்­வேன் என்று அம்­மா­விற்கு நிபந்­தனை போட்­டுள்­ளார்.

சிந்­து­வின் கன­வு­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் பெற்­றோர் கிடைத்­தது போல அவ­ரு­டைய வாழ்க்­கைத் துணை­யாக அவரை நன்கு புரிந்து கொண்ட நபரே கிடைத்­தார். “2012 மார்ச் 4ம் தேதி எனக்கு திரு­ம­ணம் ஆனது, எனது கண­வர் அருண் மேட்­ரி­மோனி இணை­ய­த­ளத்­தில் என்­னைப் பார்த்து முக­நூ­லில் அறி­மு­க­மா­னார். இத­னைத் தொடர்ந்து நாங்­கள் வெளி­யில் பார்த்து பேசிப் பழ­கிய பின்­னர் பிடித்­துப் போனது, இரு­வ­ரின் எண்ண ஓட்­ட­மும் ஒத்து போன­தால் திரு­ம­ணம் பற்றி வீட்­டில் தெரி­வித்து பெற்­றோர் சம்­ம­தத்­து­டன் திரு­ம­ணம் செய்து கொண்­டோம் என்று தனது திரு­மண வாழ்க்­கை­யின் சுவா­ரஸ்­யங்­களை பகிர்ந்து கொண்­டார் சிந்து.

“2013ம் ஆண்டு இறு­தி­யில் என்­னு­டைய மாமா­வின் நிறு­வ­னத்தை நாங்­கள் கையில் எடுத்­தோம். தேங்­காயை கொள்­மு­தல் செய்து ஏற்­று­மதி செய்­யும் அந்­தத் தொழிலை வரை­மு­றைப்­ப­டுத்­தி­னோம். ’எவர்­கி­ரீன் என்­டர்­பி­ரை­சஸ்’ என்று நிறு­வ­னத்­திற்கு பெய­ரிட்டு அதில் இருந்த தொழி­லா­ளர்­கள் முதல் தொழில்­நுட்­பம் வரை அனைத்­தி­லும் மாற்­றங்­களை கொண்ட வந்­தோம். இந்­திய சந்தை மற்­றும் வெளி­நா­டு­க­ளுக்கு இந்­நி­று­வ­னம் மூலம் தேங்­காயை விற்­பனை செய்­தோம். இதே போன்று கொப்­ப­ரைத் தேங்­கா­யாக விற்­பனை செய்­வது என்று வியா­பா­ரத்தை விஸ்­தி­க­ரிப்பு செய்­த­தா­கக் கூறு­கி­றார் சிந்து.