கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 11–07–19

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019

பாதை தெரியுது பார்!

எளி­மை­யான ஆங்­கில வாக்­கி­யங்­களை அவற்­றின் இலக்­க­ணம் பிச­கா­மல் பழ­கு­வ­தால்,  அவற்­றில் பொதிந்­துள்ள கட்­டு­மா­னம் மன­தில் உட்­கார்ந்து கொள்­ளும். அந்த வகை­யில் சில வாக்­கி­யங்­கள் ---

ஐ ஆம் ஹிஸ் எல்d­டர் bபிரd­தர். I am his elder brother).

ஐ = நான் ; எல்­டர் = வய­தில் மூத்த ; பிர­தர் = சகோ­த­ரன் ; ஹிஸ் = அவ­னு­டைய ; ஆம் am = தமிழ் வாக்­கிய அமைப்­பில் இல்­லாத, இணைக்­கும் வினைச்­சொல்; இருப்பை சுட்­டும் வினை­யின் வடி­வம். 'ஐ' என்­பது தன்­மை­யில் ஒரு­மை­யில் உள்­ள­தால் am என்று வரு­கி­றது). (இந்த 'ஆம்' am என்­ப­தில் உள்ள 'ஆ',  ஆப்­பிள் என்­ப­தில் உள்ள 'ஆ' என்ற உச்­ச­ரிப்­பு­டன் ஒத்­தி­ருக்­கி­றது).

தமி­ழில் 'நான் அவ­னு­டைய அண்­ணன்' என்­றால் வாக்­கி­யம் முற்­றுப்­பெற்­று­வி­டும். தமி­ழில் இல்­லாத வகை­யில், ஆங்­கி­லத்­தில் இருக்­கி­றேன் என்று கூற­வேண்­டி­வந்­தது. (am ; ஐ ஆம் ஹிஸ் எல்­டர் பிர­தர் = நான் அவ­னு­டைய முத்த சகோ­த­ர­னாக இருக்­கி­றேன் என்று கூற­வேண்­டி­யுள்­ளது).

'ஐ ஆம் அ டீச்­சர்'..நான் ஒரு ஆசி­ரி­யர் (நான் ஒரு ஆசி­ரி­ய­ர­பாக இருக்­கி­றேன்).

'ஐ ஆம் ஸிக்'. I am sick நான் உடல்­ந­ல­மில்­லா­மல் இருக்­கி­றேன். எனக்கு உடம்பு சரி­யில்லை என்று பொருள்.

'ஐ ஆம் ஹேப்பி. I am happy. நான் இருக்­கி­றேன் சந்­தோ­ஷ­மாக.

வீ ஆர் ஹேப்பி. We are happy. நாங்­கள் இருக்­கி­றோம் சந்­தோ­ஷ­மாக.

யூ ஆர் ஹேப்பி. You are happy. நீ இருக்­கி­றாய் சந்­தோ­ஷ­மாக.

யூ ஆல் ஆர் ஹேப்பி. You all are happy. நீங்­கள் இருக்­கி­றீர்­கள் சந்­தோ­ஷ­மாக.

ஹீ இஸ் ஹேப்பி. He is happy. அவன் இருக்­கி­றான் சந்­தோ­ஷ­மாக.

ஷீ இஸ் ஹேப்பி. She is happy. அவள் இருக்­கி­றாள் சந்­தோ­ஷ­மாக.

தே ஆர் ஹேப்பி. They are happy. அவர்­கள் இருக்­கி­றார்­கள் சந்­தோ­ஷ­மாக.

இவை எப்­ப­டிப் பயன்­ப­டும்? நீ புது வேலை­யில் சேர்ந்­தாயே, எப்­படி இருக்­கி­றது புது இடம், எப்­படி உணர்­கி­றாய்? 'ஐ ஆம் ஹேப்பி'. நான் சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றேன். எனக்­குத் திருப்தி என்று பொருள். இந்த வகை­யில் பிற வாக்­கி­யங்­க­ளுக்­குப் பொருள் செய்­து­கொள்­ள­லாம். பிர­யோ­கத்­தின் படி­யும் அந்­தந்த சூழ­லின் படி­யும், பொருள் மாறு­த­லான சாயல்­கள் கொள்­ளும்.

முதல் உதா­ரண வாக்­கி­ய­மான, 'ஐ ஆம் ஹிஸ் எல்­டர் bபிரd­தர் ' (I am his elder brother), என்­ப­தற்கு வரு­வோம்.

நான் அவ­னு­டைய மூத்த சகோ­த­ரன் என்­றால், அவன் எனக்கு என்ன?

அவன் என்­னு­டைய இளைய சகோ­த­ரன். ஹீ இஸ் மை யங்­கர் bபிரd­தர். He is my younger brother.

வேறு வாக்­கி­யத்­தில், நான் அவ­ளு­டைய இளைய சகோ­த­ரன் (தம்பி) என்று கூறு­கி­றோம் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். 'ஐ ஆம் ஹர் யங்­கர் bபிரd­தர்'. I am her younger brother.

நான் = ஐ I

அவ­ளு­டைய = ஹர் her

இளைய = யங்­கர் younger

சகோ­த­ரன் = brother

'ஐ' என்­ப­தோடு வரும் 'am' ஆங்­கில வாக்­கிய அமைப்­பின்­படி இருப்பை (இருப்­ப­தைக்) குறிக்­கும் இணைப்பு வினைச் சொல்­லாக (லிங்­கிங் வர்ப் linking verb), இந்த வாக்­கி­யத்­தில் வரு­கி­றது.

நான் அவ­ளு­டைய இளைய சகோ­த­ரன் என்­றால் அவள் என்­னு­டைய மூத்த சகோ­தரி. அதை எப்­படி ஆங்­கி­லத்­தில் கூறு­வது? 'ஷீ இஸ் மை எல்­டர் ஸிஸ்­டர்'. She is my elder sister.

ஷீ She = அவள்

மை my = என்­னு­டைய

எல்­டர் elder = மூத்த

ஸிஸ்­டர் sister = சகோ­தரி

இங்கே இஸ் (is) என்­பது இணைக்­கும் வினைச் சொல்­லாக வரு­கி­றது.

'ஓல்ட்' என்­பது நீண்ட கால­மாக இருப்­ப­தைக் குறிப்­பிது.

'ஓல்­டர்' என்­பது 'ஓல்ட்' என்ற சொல்­லின் ஒப்­ப­ளவு  வடி­வம் (கம்­பே­ரே­டிவ் ஃபார்ம்). இதை விடப் பழை­யது என்று கூறு­வ­தற்­குப் பயன்­ப­டு­கி­றது. இதற்­கான எடுத்­துக்­காட்டு வாக்­கி­யம்…'திஸ் புக் ஸீம்ஸ் ஓல்d­டர் தேன் தேட் புக்'.


This book seems older than that book. இந்­தப் புத்­த­கம் அந்­தப் புத்­த­கத்­தை­விட பழை­ய­தா­கத் தெரி­கி­றது.

இன்­னொரு புத்­த­கம் இருக்­கி­றது. அது எல்­லா­வற்­றை­யும் விட பழ­சாக உள்­ளது. 'இட் இஸ் த ஓல்d­டெல்ட்' (It is the oldest) (சூப்­பர்­லே­டிவ் வடி­வம்).

இந்த ஓல்d­டர், ஓல்d­டெல்ட், குடும்ப உற­வு­கள் குறித்­துப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் போது, எல்d­டர் (மூத்த), எல்d­டெஸ்ட் (எல்­லா­ரி­லும் மூத்­த­வர்) என்று பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ராமா வாஸ் த எல்d­டெஸ்ட் ஆப் ஃபோர் bபிர­தர்ஸ். Rama was the eldest of four brothers. நான்கு சகோ­த­ரர்­க­ளில் ராமர் தான் எல்­லா­ரி­லும் மூத்­த­வர்.

தர்­ம­புத்ரா வாஸ் த எல்­டெஸ்ட் ஆஃப் த பஞ்­ச­பாண்­ட­வாஸ். Dharmaputra was the eldest of the Pancha Pandavas. பஞ்­ச­பாண்­ட­வர்­க­ளில் தர்­மர் மூத்­த­வர்.

வீ ஆர் பிர­தர்ஸ். We are brothers. நாங்­கள் சகோ­த­ரர்­கள்.

வீ We என்­கிற எழு­வா­யு­டன் (சப்­ஜெக்ட்) ஒத்­துப்­போ­கும், இருப்­பைக்­கு­றிக்­கும் 'ஆர்' are என்ற லிங்­கிங் வர்பை கவ­னி­யுங்­கள்.

வீ ஆர் ஹேப்பி நவ். We are happy now. இப்­போது நாங்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றோம். ஆஸ் இண்­டி­யன்ஸ் வீ ஆர் ஆர் பிர­தர்ஸ் அண்ட் ஸிஸ்­டர்ஸ். As Indians we are all brothers and sisters. இந்­தி­யர்­கள் என்று முறை­யிலே நாம் எல்­லோ­ரும் சகோ­தர சகோ­த­ரி­கள்.

ஆஸ் ஆல் ஆஃப் அஸ் லிவ் ஆன் திஸ் எர்த், வீ ஆர் ஆல் சில்ட்­ரென் ஆஃப் மதர் எர்த். As all of us live on this earth, we are all children of Mother Earth. நாம் எல்­லோ­ரும் இந்­தப் பூமி­யில் வாழ்­வ­தால், நாம் எல்­லோ­ரும் பூமித்­தா­யின் புதல்­வர்­கள்.

இத்­த­கைய நல்­லு­ணர்­வு­கள் நம் உள்­ளத்­தில் இருந்­தால், நம்­மு­டைய சக்தி வீணான குழப்­பங்­க­ளில் விர­ய­மா­கா­மல், இப்­போது ஒரு மொழி­யைக் கற்­கும் பய­னுள்ள காரி­யத்­தைப்­போல், நம்­மு­டைய வளர்ச்சி பல திசை­க­ளில் அபா­ர­மாக இருக்­கும்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in