பிசினஸ்: தமிழகம் முன்னேற அதிக தொழில்முனைவோர் தேவை! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019

தமி­ழத்­தில் அதிக தொழில்­மு­னை­வோர்­களை உரு­வாக்க வேண்­டும். இது­தான் தமி­ழ­கத்­தின் தற்­போ­தைய தேவை.நம் மாநி­லத்­தில் மெத்த படித்­த­வர்­கள் அனை­வ­ரும் சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, ஐரோப்பா உள்­ளிட்ட வளர்ந்த நாடு­க­ளுக்கு சென்­று­வி­டு­கின்­ற­னர். இவர்­கள் சொல்­லும் கார­ணம் தமி­ழ­கத்­தில் பல விஷ­யங்­கள் இல்லை, அத­னால் வெளி­நாடு செல்­கி­றோம் என்­கின்­ற­னர். ஆனால் இந்­தி­யா­வின் முன்­னோடி மாநி­லங்­க­ளில் ஒன்று நம் தமி­ழ­கம். சுதந்­தி­ரம் அடைந்த பிறகு எடுத்த நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக தமி­ழ­கம் இந்த நிலை­யில் இன்று இருக்­கி­றது. இந்­தி­யா­வில் அதிக தொழில்­கள் உள்ள மாநி­லம் தமிழ்­நாடு. இந்­தி­யா­வில் தொழிற்­சா­லை­கள் மூலம் அதிக வேலை­வாய்ப்பு உள்ள மாநி­ல­மும் தமிழ்­நா­டு­தான். தமிழ்­நாடு என்று பெய­ருக்­காக சொல்­ல­வில்லை. மத்­திய அர­சின் தக­வல் மூலம் இதனை புரிந்­து­கொள்­ள­லாம்.

தொழிற்­சாலை மூல­மாக தமி­ழ­கத்­தில் 23 லட்­சம் நபர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் மகா­ராஷ்ட்­ரா­வில் 18 லட்­சம் என்­னும் அள­வில்­தான் தொழிற்­சாலை மூலம் வேலை­கள் உரு­வாகி இருக்­கி­றது. தொழில்­க­ளும் அதி­கம், வேலை­வாய்ப்பு உரு­வாக்­கு­வ­தி­லும் அதி­கம் என்­றா­லும் மாநில ஜிடி­பி­யில் தமி­ழ­கம் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கி­றது. இதற்­குக் கார­ணம் பெரும்­பா­லான நிறு­வ­னங்­க­ளின் தலை­மை­ய­கம் மும்­பை­யில் இருப்­ப­து­தான்.

தொழில்­து­றை­யில் மட்­டு­மல்ல சமூக மேம்­பாட்டு குறி­யீ­டு­க­ளி­ளும் தமி­ழ­கம் முன்­ன­ணி­யில் இருக்­கி­றது. அதா­வது நம் நாட்­டில் 18 வயது முதல் 23 வய­துக்­குள் கல்­லூரி படிப்­ப­வர்­க­ளின் சத­வீ­தம்­தான் அதி­கம். இந்த விகி­தம் தமிழ்­நாட்­டில் 46.9 சத­வீ­த­மாக இருக்­கி­றது. தேசிய சரா­சரி 25.2 சத­வீ­தம் மட்­டுமே. இதற்கு மிக அடிப்­ப­டை­யான கார­ணம் தமி­ழ­கத்­தில் பெண்­கள் கல்­லூ­ரி­க­ளுக்கு செல்­லும் விகி­தம் அதி­கம். தேசிய அள­வி­லும் பெண்­கள் கல்­லூ­ரிக்கு செல்­லும் பட்­சத்­தில் இந்த விகி­தம் இரு மடங்­காக உய­ரும்.

அடுத்­த­தாக குழந்தை இறப்பு விகி­தம். 2016-ம் ஆண்­டில் இந்­தி­யா­வில் 1,000 குழந்­தை­கள் பிறந்­தால் இதில் 34 குழந்­தை­கள் துர­திஷ்­ட­வ­ச­மாக இறக்­கின்­றன. ஆனால் தமி­ழ­கத்­தில் 1000 குழந்­தை­க­ளில் 17 குழந்­தை­கள் மட்­டுமே இறக்­கின்­றன. தமி­ழ­கம் போன்ற மிகப்­பெ­ரிய மாநி­லத்­தில் அனைத்து கிரா­மங்­க­ளி­லும் மருத்­துவ சேவை கிடைத்­தால் மட்­டுமே இந்த விகி­தம் இவ்­வ­ளவு குறை­வாக இருப்­பது சாத்­தி­ய­மா­கும்.

அடுத்து சமூக ஏற்­றத்­தாழ்­வு­கள். சமூ­கத்­தில் ஏழை­க­ளுக்­கும் பணக்­கா­ரர்­க­ளுக்­கும் உள்ள இடை­வெளி அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில், சமூக அமை­தி­யின்மை ஏற்­ப­டும் வாய்ப்பு இருக்­கி­றது. சர்­வ­தேச சூழல் அது­வா­க­வேக இருக்­கி­றது. ஆனால் தமி­ழ­கத்­தில் நடுத்­தர குடும்­பங்­க­ளின் எண்­ணிக்­கையே அதி­க­மா­கும். இது­போல பல குறி­யீ­டு­க­ளில் தமி­ழ­கம் மேம்­பட்ட சூழ­லில் இருக்­கி­றது என்று காட்­டு­கி­றது.

தமி­ழ­கம் குறித்து வைக்­கப்­ப­டும் மற்­றொரு விமர்­ச­னம் டாஸ்­மாக். இத­னு­டைய வரு­மா­னத்­தில் தமி­ழ­கம் இயங்­கு­கி­றது என்­றும் தமி­ழ­கத்­தில் அனை­வ­ரும் குடிக்­கி­றார்­கள் என்­னும் கருத்து மேலோங்கி இருக்­கி­றது. ஆனால் இதில் உண்­மை­யில்லை. டாஸ்­மாக் மூல­மாக கிடைக்­கும் வரு­மா­னம் ரூ.27,000 கோடி மட்­டுமே. ஆனால் தமி­ழக ஜிடி­பி­யில் இது 1.67 சத­வீ­தம் மட்­டுமே. இந்­தி­யா­வில் அதிக ஆல்­க­ஹால் பரு­கும் மாநி­லங்­க­ளில் ஆந்­திரா முத­லி­டத்­தில் இருக்­கி­றது என்­ப­து­தான் உண்மை.

வளர்ச்­சிக்­கான கார­ணம்...

சமூக குறி­யீ­டு­கள், தொழில் குறி­யீ­டு­கள் என பல­வற்­றி­லும் தமி­ழ­கம் வளர்ச்சி அடைந்த  நிலை­யில் இருக்­கி­றது. இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்து 71 ஆண்­டு­கள் ஆகி­றது. கிட்­டத்­தட்ட மூன்று தலை­முறை. முதல் தலை­மு­றை­யில் தமி­ழ­கம் பள்­ளிக்­கல்­விக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டது. 1950களில் 6,000 பள்­ளி­கள் மட்­டுமே இருந்­தன. ஆனால் 1960களில் 27,000 பள்­ளி­கள் உரு­வாக்­கப்­பட்­டன. அப்­போ­தைய குழந்­தை­க­ளில் 77 சத­வீ­தம் பள்­ளிக்கு சென்­ற­னர். பள்­ளிக்­கல்வி வெற்­றி­ய­டைந்­தது சத்­து­ண­வுத் திட்­டமே கார­ணம் என்று சொல்­லு­வார்­கள். ஆனால் அதை­விட முக்­கி­யம் பள்­ளி­களை உரு­வாக்க அது உத­வி­யதே.

ஒரு தலை­முறை படித்­தா­கி­விட்­டது. அடுத்து உயர்­கல்வி. 1980 முதல் 2000-ம் ஆண்­டு­வரை 550-க்கும் மேற்­பட்ட பொறி­யி­யல் கல்­லூ­ரி­கள் தமி­ழ­கத்­தில் உரு­வாக்­கப்­பட்­டன. பொறி­யி­யல் கல்வி குறித்த அடுத்த குற்­றச்­சாட்டு, தர­மான மாண­வர்­கள் இல்லை என்­பது. ஆனால் இந்­தி­யா­வில் முதல் 100 பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் 37 கல்­லூ­ரி­கள் தமி­ழ­கத்­தில்­தான் இருக்­கின்­றன. தெற்கு ஆசி­யா­வில் தர­மான பொறி­யி­யல் மாண­வர்­கள் தமி­ழ­கத்­தில்­தான் உள்­ள­னர்.

அடுத்­த­தாக இட ஒதுக்­கீடு மூலம் பல சமூ­கங்­க­ளின் வாழ்க்­கை­த­ரம் உயர்ந்­தி­ருக்­கி­றது. அதே சம­யத்­தில் நாம், நம்­மு­டைய தமிழை தற்­காத்­துக்­கொண்­டும், அதே சம­யத்­தில் ஆங்­கி­லத்­தை­யும் கற்­றுக்­கொண்­டோம். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சிக்கு இது­வும் முக்­கி­ய­மான கார­ண­மா­கும்.

தமிழ்­நாட்­டில் தமிழ் இல்லை என்­னும் குற்­றச்­சாட்டு இருக்­கி­றது. அப்­படி இருந்­தால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமி­ழில் சானல் தொடங்க மாட்­டார்­கள். பேடி­எம் நிறு­வ­னம் தமி­ழில் விளம்­ப­ரம் செய்­யாது. பல நிறு­வ­னங்­கள் தமி­ழுக்கு முக்­கி­யத்­தும் கொடுக்க மாட்­டார்­கள். தமிழ் சினிமா சந்தை மிகப்­பெ­ரிய சந்­தை­யாக உரு­வாகி இருக்­காது.

கன்­னடா மற்­றும் மராத்­திய சினி­மாத் துறை பெரிய அள­வில் வள­ர­வில்லை என்­ப­தை­யும் கவ­னிக்க வேண்­டும். மொழி இருந்­தால்­தான் சினிமா, வியா­பா­ரம் உள்­ளிட்­டவை இருக்­கும்.

நம்­மு­டைய தமி­ழ­கத்­துக்கு மகா­ராஷ்­டிரா மாடல் வளர்ச்­சியோ அல்­லது குஜ­ராத் மாடல் வளர்ச்­சியோ நமக்­குத் தேவை­யில்லை. நம்­மு­டைய மாடலை அவர்­கள் பின்­பற்­றா­லாம் என்­னும் அள­வுக்கு நாம் வளர்ந்­தி­ருக்­கி­றோம்.

அடுத்து என்ன...

முதல் தலை­மு­றை­யில் கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டது. அடுத்த தலை­மு­றை­யில் கல்­லூரி கல்­விக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டது. மூன்­றாம் தலை­மு­றை­யின் பங்­க­ளிப்பு பெரிய அள­வில் இல்லை என்­றா­லும் முதல் இரண்டு தலை­மு­றை­யில் செய்த நல்­ல­வை­யால் மட்­டுமே நாம் தற்­போ­தைய நிலை­மை­யில் இருக்­கி­றோம்.

மூன்­றாம் தலை­முறை செய்ய வேண்­டி­யது தொழில்­மு­னைவு. இதன் மூலம் அதிக வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்க முடி­யும். பல­ரும் திர­ளாக தொழில்­மு­னை­வில் களம் இறங்க வேண்­டும். தமி­ழ­கத்­தில் படிப்­ப­வர்­க­ளுக்கு இங்­கேயே பணி புரி­வ­தற்­கான சூழலை உரு­வாக்க முடி­யும்.

அடுத்த சில ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வின் ஜிடிபி 5 டிரில்­லி­யன் டாலர் என்­னும் அள­வுக்கு உய­ரும் என கணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதில் 20 சத­வீத (ஒரு டிரில்­லி­யன் டாலர்) பங்­க­ளிப்­பினை தமி­ழ­கம் வழங்க முடி­யும். தமி­ழக இளை­ஞர்­கள் தொழில்­மு­னைவு பாதையை தேர்ந்­தெ­டுத்­தால் மட்­டுமே இது சாத்­தி­யம்.

இத­னி­டையே மக்­க­ளின் மகிழ்ச்சி குறை­யா­மல் பார்த்­துக்­கொள்­வ­தும் மற்­றும் சுற்­றுச்­சூ­ழலை பாது­காப்­பது ஆகி­ய­வற்றை அர­சாங்­கம் செய்ய வேண்­டும். ஏனெ­னில் மக்­க­ளின் மகிழ்ச்­சியை குறைத்து, சுற்­றுச்­சூ­ழலை நாசப்­ப­டுத்தி ஒரு டிரில்­லி­யன் டாலர் என்­னும் வளர்ச்சி தேவை­யற்­றது,