மேகதாதுவில் அணை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

பதிவு செய்த நாள் : 10 ஜூலை 2019 18:30

சென்னை,

   தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், 19ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது எனவும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது எனவும் தெரிவித்து உள்ளார்.
இது போல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கும் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.