வித்­தி­யா­ச­மான விடை!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

திருப்­பூர் மாவட்­டம், அவி­னாசி, கரு­வ­லுார் அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1979ல், 9ம் வகுப்பு படித்­தேன்.

உடற்­ப­யிற்சி தேர்­வுக்கு, 20 மதிப்­பெண்­கள் உண்டு. அந்த தேர்­வில், 'விளை­யா­டும் போது, மாண­வ­ருக்கு அடி­பட்­டால் என்ன செய்­வாய்...' என, ஒரு கேள்வி இருந்­தது.

உடன் படித்த வேலுச்­சாமி, 'ஒரு பாடை கட்டி, காயம்­பட்­ட­வனை படுக்க வைத்து, சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு சொல்லி அனுப்பி, சுடு­காட்­டில் புதைப்­பேன். மூன்று நாட்­க­ளுக்­குப் பின், குழி­யில், பால் ஊற்­று­வேன்...' என, விடை எழு­தி­யி­ருந்­தான்.

உடற்­கல்வி ஆசி­ரி­யர் ராம­சாமி, அவனை அழைத்து, வகுப்­பில் அதை உரக்­கப் படிக்­கச் சொன்­னார். அனை­வ­ரும் சிரித்­தோம்.

என் வயது, 52; அரசு வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்­று­கி­றேன். அவ­னைப் பார்க்­கும் போது, 'என்ன வேலுச்­சாமி... சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு சொல்லி அனுப்­பிட்­டியா...' என, வேடிக்­கை­யாக கேட்­பேன்.

அவ­னும் சிரிப்­பி­னுாடே, 'இன்­னுமா அதை நினை­வில் வைத்­தி­ருக்­கி­றாய்...' என்­பான்!  அந்த நினைவு இன்­னும் அழி­ய­வே­யில்லை.

–- த.இளங்­கோ­வன், திருப்­பூர்.