குடம் ஏற்றி வழி­பாடு!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

விழுப்­பு­ரம் மாவட்­டம், கீழ்­பெ­ரும்­பாக்­கம், அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1987ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம் இது!

எங்­கள் வகுப்­பா­சி­ரி­யர் குரு­மூர்த்தி; கணக்கு ஆசி­ரி­ய­ரும் அவரே. மாண­வர்­கள் தவறு செய்­தால் தண்­டிக்க மாட்­டார்; அறி­வு­ரைக் கூறி, திருத்த முயல்­வார்.

அவ­ருக்கு நேர் எதிர் குணம் உள்­ள­வர், தலைமை ஆசி­ரி­யர் அரி­தாச பாவ­லர். தவறு கண்­டால், பிரம்­பால் விளாசி தள்­ளு­வார்.

கூடா நட்­பின் கார­ண­மாக, எனக்கு புகைப்­பி­டிக்­கும் பழக்­கம் ஏற்­பட்­டது. ஒரு­முறை, பள்ளி முடிந்து வரும் வழி­யில், புகைத்­ததை வகுப்­பா­சி­ரி­யர் பார்த்து விட்­டார்.

'பெரிய தப்­புடா; இன்றே இப்­ப­ழக்­கத்தை விட்­டுடு...' என, அறி­வுரை கூறி­னார். நான் சமா­ளித்­தேனே தவிர, கைவி­ட­வில்லை.

அரை­யாண்­டுத் தேர்வு நடந்து கொண்­டி­ருந்­தது. தேர்வு மையத்­தில் திடீ­ரென நுழைந்து, சோதனை செய்­தார் தலை­மை­யா­சி­ரி­யர். என் கால்­சட்டை பையில், கையை நுழைத்­தார். அங்­கி­ருந்த தீப்­பெட்­டியை எடுத்­த­வர் திடுக்­கிட்­டார்.

'ஏன்டா... எத்­தனை நாளா இந்த பழக்­கம்...' என, கேட்­டார்; செய்­வ­த­றி­யாது விழித்­தேன். மேற்­பார்­வை­யா­ள­ராக இருந்த, வகுப்­பா­சி­ரி­யர் குரு­மூர்த்தி, 'சொல்­லேன்டா... பரீட்சை நல்லா எழு­த­ணும்ன்னு சாமிக்கு சூடம் ஏற்றி வழி­பட்­டேன்னு...' என்­றார்.

நானும், 'ஆமாம் சார்...' என, அசடு வழிந்து, தலை­மை­யா­சி­ரி­யர் பிடி­யில் இருந்து தப்­பி­னேன்.

அன்றே புகைப்­பதை அடி­யோடு விட்­டேன். என்னை நல்­வ­ழிப்­ப­டுத்­திய, அந்த ஆசி­ரி­யரை நன்­றி­யு­டன் நினைக்­கி­றேன்.

–- பி.சர­வ­ணன், சென்னை.