மன­தில் ஆறாத வடு!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

தஞ்­சா­வூர் மாவட்­டம், ஒரத்த நாடு, அரசு பெண்­கள் உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1977ல், 8ம் வகுப்பு படித்­தேன்!

தமிழ் பாடத்­தில், முதல் மதிப்­பெண் பெறு­வேன். என் அருகே அமர்ந்­தி­ருந்த மாணவி, என் விடைத்­தாளை வாங்கி, 'நானும், உன்னை மாதிரி தான் எழு­தி­யுள்­ளேன்; எனக்கு மட்­டும் ஏன், குறை­வாக மதிப்­பெண் போடு­கி­றார்...' என்­றாள். அது பற்றி, ஆசி­ரி­யை­யி­டம் கேட்­டாள்.

'அடுத்­த­வர் திற­னு­டன் ஒப்­பி­டாதே...' என, ஆசி­ரியை கூறிய அறி­வுரை, அவ­ளுக்­குப் பிடிக்­க­வில்லை.

ஒரு­முறை வகுப்பை, இரு அணி­யாக பிரித்த ஆசி­ரியை, 'போட்­டிக்கு போட்டி' என்ற முறை­யில் கேள்வி கேட்க வைத்­தார்.

என் அணி சார்­பில், அவ­ளி­டம் கேள்வி கேட்­டேன். அதற்கு பதில் கூற முடி­யா­மல் தடு­மா­றி­னாள். எனக்கு பாராட்டு கிடைத்­தது, அவ­ளுக்­குப் பொறுக்க முடி­ய­வில்லை.

அதை, அவ­மா­ன­மாக கருதி, வகுப்பு முடிந்து புறப்­பட்ட போது, கூர்­மை­யான பென்­சி­லால், என் உச்­சந்­த­லை­யில் ஓங்கி குத்தி, ஓடி விட்­டாள்.

தலை­யில், ரத்­தம் கசிந்­தது. இதைக் கண்ட மாண­வி­யர், ஆசி­ரி­யை­யி­டம் சொல்ல முயன்­ற­னர்; நான் தடுத்­து­விட்­டேன்.

அந்த காயத்­தால், இரண்டு நாட்­கள் காய்ச்­ச­லில் அவ­திப்­பட்­டேன். பள்ளி படிப்பு முடிந்த அன்று, என் கையைப் பற்றி மன்­னிப்­புக் கேட்­டாள்.

அதன் பின், பிளேடு, கத்தி, அரி­வாள்­மனை என, கூர்­மை­யாக எதைப் பார்த்­தா­லும் பயம் வந்­து­வி­டும்.

எனக்கு, 56 வய­தா­கி­றது. சமை­ய­லுக்­குப் பயன்­ப­டுத்­தும் கத்­தி­யைக் கூட, மழுங்­க­லா­கத் தான் வைத்­துள்­ளேன்.

விருந்­தா­ளி­கள் வந்­தால், 'கத்­தியை கூர்­மை­யாக்கி வை...' என்று அறி­வுரை கூறு­வர். உடனே, அந்த சம்­ப­வம் நினை­வுக்கு வந்து, அமை­தி­யாகி விடு­வேன்.

ஒரு பென்­சி­லைக் கூட கூர்­மை­யாக சீவ முடி­யா­மல் மன­தில் நீங்­காத வடு­வா­கி­விட்­டது அந்த சம்­ப­வம்.

–- டி.இந்­து­ராணி, சென்னை.