கட­வு­ளும் ஆட்­டுக் குட்­டி­யும்!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

அழ­கி­ய­னுார் என்ற கிரா­மத்­தில், மூன்று ஆட்­டுக் குட்­டி­களை வளர்த்து வந்­தார் பெரி­ய­வர் ரவி. அவற்­றுக்கு, ராமு, சோமு, சீமு என, பெயர் வைத்­தார். அவற்றை, காட்­டிற்கு ஓட்­டிச் சென்று, மேய்ப்­ப­தும், திரும்ப வீட்­டிற்கு ஓட்டி வரு­வ­தும் வழக்­கம்.

ஒரு நாள் -

காட்­டிற்கு, மூன்று குட்­டி­க­ளை­யும் ஓட்­டிச் சென்ற போது, திடீ­ரென ஒரு சத்­தம் கேட்­டது. எதிர்­பா­ராத நேரத்­தில், மூன்று ஆட்­டுக் குட்­டி­க­ளும், ஒவ்­வொரு திசை­யில் பிரிந்­தன. வழித்­த­வ­றிய சோமு ஆட்­டுக்­குட்டி, வேட்­டைக்­கா­ரன், தோண்டி வைத்­தி­ருந்த குழி­யில் விழுந்­தி­ருந்­தது.

அது, 'காப்­பாற்­றுங்க... காப்­பாற்ற யாரும் இல்­லையா...' என, கத்­தி­ய­ப­டியே இருந்­தது.

அவ்­வ­ழியே சென்ற நரி­கள், ஆட்­டுக் குட்­டி­யின் குரலை கேட்டு, குழி அருகே வந்­தன.

அந்த ஆட்­டிக்­குட்­டி­யைப் பார்த்து, 'ஐயோ... கட­வுளே, இந்த குழி­யில் விழுந்த யாரும் இது­வரை உயிர் பிழைத்­தது இல்­லையே...' என்று கூறி­ய­படி சென்­றன.

இதைக் கேட்டு பயந்த ஆட்­டுக்­குட்டி, உயிரை விட்­டது. இறந்த பின், 'கடு­மை­யாக போராடி, அழைத்­தும், காப்­பாற்ற வர­வில்­லையே...' என்று கட­வு­ளி­டம் முறை­யிட்­டது.

'யாரே சிலர், சொன்­ன­தைக் கேட்டு, உயிரை விட்­டாயே! சிறிது நேரம் பொறு­மை­யாக இருந்­தி­ருக்­கக் கூடாதா... உத­விக்கு ஒரு­வரை அனுப்­பி­யி­ருப்­பேனே...' என்­றார் கட­வுள்.

குட்­டீஸ்... பொறு­மை­யாக இருந்­தால் எதிர்­பா­ராத உத­வி­கள் கிடைக்­கும்.

–- பெ.மாத­வன்