அவல் கட்­லெட்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

தேவை­யான பொருட்­கள்:

அவல் - 1 கப்

தயிர் - 1 கப்

கேரட், வெங்­கா­யம், குடை­மி­ள­காய்,

உருளை கிழங்கு, பச்சை பட்­டாணி கலவை - 1 கப்

இஞ்சி, பச்சை மிள­காய், கரம் மசாலா துாள், உப்பு, கடலை எண்­ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுந்­தம் பருப்பு - தேவை­யான அளவு.

செய்­முறை:

அவலை, தண்­ணீ­ரில் நன்­றாக ஊற­வைத்து வடித்து எடுக்­க­வும். அதில், தயிர், உப்பு, காய்­கறி கலவை, மசாலா துாளை சேர்க்­க­வும்.  வாண­லி­யில், சிறிது எண்­ணெய் விட்டு, தாளித்து, அவல் கல­வையை கொட்டி நன்­றாக கலக்­க­வும்.

பின், தவா­வில் எண்­ணெய் ஊற்றி, அவல் கல­வையை, விருப்­ப­மான வடி­வத்­தில் வார்த்து, சிவக்க வேக வைக்­க­வும். அவல் கட்­லெட் தயார். சிறு­வர்,சிறு­மி­யர் விரும்பி உண்­பர்!

–- உஷா மோகன், சென்னை.