மொக்க ஜோக்ஸ்..!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019


‘‘நம்ம பைய­னுக்கு குறும்பு அதி­கம்ன்னு சொல்­றியே எப்­படி?’’

‘‘உலக உருண்­டையை சுத்தி விட்­டுட்டு பிர­த­மர் சுத்­துன எல்லா நாட்­டை­யும் நானும் பாத்­துட்­டேன்னு சொல்­றான்!’’

– ஜி. விஜ­ய­லட்­சுமி, காரைக்­கால்.


‘‘உங்க கிளாஸ்ல மட்­டும்  சத்­தமே வர­மாட்­டேங்­குதே..... எப்­படி சார்?’’

‘‘என்­னோட சேர்ந்து பசங்­க­ளும் துாங்­கினா எங்க இருந்து சத்­தம் வரும்...!’’

–  வ. முரு­கன், விழுப்­பு­ரம்.


‘‘வேலைக்கு சேர்ந்த ஒரே மாசத்­துல உங்க மகனை உயர்ந்த இடத்­திலே வச்­சிட்­டீங்­களா.... என்ன சொல்­றீங்க?’’

‘‘ஆமாங்க.... தரை­த­ளத்­தி­லி­ருந்து 20ம் மாடிக்கு  மாத்­திட்­டாங்க!’’

– தி. சிவ­சங்­கரி,  விழுப்­பு­ரம்.

‘‘அவர் போலி டாக்டர்ன்னு எப்படி சொல்றீங்க?’’

‘‘குளிர் ஜூரம்ன்னு  சொன்னதுக்கு மருந்து சீட்டுல ‘ஸ்வெட்டர்’ன்னு எழுதி தர்றாரே!’’

– நாவம்மா, தஞ்சாவூர்.

‘‘நம் மன்னர் பல போர்க்களங்களை பார்த்தவர்ன்னு எப்படி சொல்ற?’’

‘மாரத்தான் போட்டியில் முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்றிருக்கிறாரே!’’

– கமலம், கடலுார்.