அதி­சய ஓவி­யம்!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

முது­மலை கிரா­மத்­தில், ஜெயன் என்ற சிறு­வன், வசித்து வந்­தான். நற்­கு­ணங்­கள் பெற்­ற­வன். பெற்­றோ­ரும், மற்­றோ­ரும் பாராட்­டும் வகை­யில் வாழ்ந்­தான்.

ஒரு சம­யம் -

மழை கொட்­டித் தீர்த்­தது; கிரா­மமே, வெள்ள காடாக காட்­சி­ய­ளித்­தது. பாதி கிரா­மம் அழிந்து விட்­டது. தொடர்ந்து வந்த நோயால், மீதி கிரா­ம­மும் அழிந்து கொண்­டி­ருந்­தது.

பெற்­றோரை இழந்த ஜெயன், எங்­கா­வது போய் பிழைக்க முடிவு செய்­தான். சிறிது தொலை­வில் பெரி­ய­பா­ளை­யம் என்ற கிரா­மத்­துக்கு சென்­றான்.

அந்த கிராம மக்­களை, 'பெரிய மனம் படைத்­த­வர்­கள்' என்று கூறு­வர். அங்கு சென்ற ஜெயனை, அன்­பு­டன் வர­வேற்று உப­ச­ரித்­த­னர்.

அவ­னுக்கு ஆறு­தல் கூறி, தைரி­யம் ஊட்­டி­னர். சாப்­பாடு தந்து, பாது­காத்­த­னர். அத­னால், ஊரா­ரின் மாடு­களை மேய்த்து காலந்­தள்ளி வந்­தான்.

அவன் மன­தில், ஓவி­ய­னாக வேண்­டும் என்ற ஆசை வந்­தது!

சிறு­வ­ய­திலே, அந்த ஆசை இருந்­தது. எல்­லாக் குழந்­தை­க­ளும் விளை­யா­டி­ய­படி இருப்­பர். அவனோ, தரை­யில் அமர்ந்து, குச்­சி­யால், மண­லில் அப்­ப­டி­யும், இப்­ப­டி­யும் கோடு­கள் போட்டு கொண்­டி­ருப்­பான். குழந்­தைப் பருவ ஆசை தான், ஜெயன் மன­தில் தலை துாக்­கி­யது.

மாடு­களை மேய விட்டு, மர நிழ­லில், மணல் பரப்பி, ஓவி­யம் வரை­யக் கற்­றுக் கொண்­டான்.

மணல் பரப்­பில், கோழிக்­குஞ்சு ஒன்றை வரைந்­தான். அது, உயி­ரோ­வி­யம் போல் இருந்­தது. வானத்­தில் பறந்த கழுகு, அந்த ஓவி­யத்­தைப் பார்த்­த­தும், உயி­ருள்ள கோழிக் குஞ்சு என, நினைத்து, துாக்­கிச் செல்ல வட்­ட­மிட்­டது.

சுய முயற்­சி­யால், உயி­ரோ­வி­யங்­களை வரைந்­தான் ஜெயன். ஒரு துாரிகை வாங்க முடி­ய­வில்­லையே என்ற கவலை அவ­னி­டம் இருந்­தது.

அன்று பவுர்­ணமி இரவு -

ஜெயன் அயர்ந்து துாங்­கிக் கொண்­டி­ருந்­தான். அவன் கன­வில், தேவதை தோன்றி, 'உன் முயற்­சியை பாராட்­டு­கி­றேன்; இதோ, அழ­கான துாரிகை. இதை பயன்­ப­டுத்தி, பெரும் சாதனை படைக்க முயற்சி செய். இது சாதா­ரண துாரிகை அல்ல... அதி­சய துாரிகை...' என்று கூறி மறைந்­தது.

கண் விழித்த போது, ஜெயன் கையில், கன­வில் கண்ட அதி­சய துாரிகை இருந்­தது. அவ­னால் நம்­பவே முடி­ய­வில்லை. தேவ­தைக்கு நன்றி கூறி­னான். ஓய்வு நேரத்­தில், துாரி­கை­யால் ஓவி­யங்­கள் வரைய ஆரம்­பித்­தான்.

ஒரு நாள் -

மணல் பரப்­பில், ஒரு பற­வையை வரைந்­தான். வரைந்து முடித்­த­துமே, அது உயிர் பெற்று, சிற­கு­களை அசைத்து வானில் பறந்­தது.

பின், குளக்­க­ரைக்­குச் சென்­றான். அங்­குள்ள மணல் பரப்­பில், மீன் வரைந்­தான். அது, உயிர் பெற்று, துள்­ளிக் குதித்து, குளத்­தில் விழுந்து நீந்­தி­யது. அக்­காட்சி, ஜெயனை, மகிழ்ச்­சி­யின் எல்­லைக்கே அழைத்­துச் சென்­றது.

அதி­சய துாரி­கை­யால், எருமை, கலப்பை போன்­ற­வற்றை வரைந்து, அவை நிஜ­பொ­ரு­ளா­ன­தும், கிராம மக்­க­ளுக்கு வழங்­கி­னான். அத­னால், ஏழை எளிய மக்­கள் ஜெயனை, தெய்­வ­மாக கரு­தி­னர். பேரும், புக­ழும் பர­வி­யது.

அந்த ஊரில், மிரா­சு­தார் ஒரு­வர் இருந்­தார். அவ­ரின் செல்­வாக்கு, நாளுக்கு நாள் குறை­யத் துவங்­கி­யது. அதற்கு கார­ணம் ஜெயன் என, எண்­ணிய மிரா­சு­தார் அவனை, வீட்­டில் சிறை வைத்­தார்.

சில தினங்­க­ளில் தப்­பிய ஜெயன், தொலை துார கிரா­மத்­துக்­குச் சென்­றான். அங்கு, ஒரு வீட்­டில் தங்கி, முழுமை பெறாத ஓவி­யங்­களை வரைந்து, சொற்ப விலைக்கு விற்­றான்.

குறை­யுள்ள ஓவி­யங்­கள் உயிர் பெறாது என்­பது அவ­னுக்கு தெரி­யும்.

ஒரு நாள் -

ஒரு கண் உள்ள சிட்­டுக் குரு­வியை, ஓவி­ய­மாக தீட்­டி­னான். அதை காண, ஊர் மக்­கள் திரண்­டி­ருந்­த­னர்.

சிட்­டுக் குரு­வியை, ஓவி­ய­மாக தீட்­டிக்­கொண்­டி­ருந்த போது, துாரி­கையை உத­றி­னான்; அப்­போது, குரு­வி­யின் இன்­னொரு கண் இருக்க வேண்­டிய இடத்­தில் மை பட்டு, கண்­க­ளாக மாறி விட்­டன.

அடுத்த நிமி­டம், அந்த சிட்­டுக் குருவி உயிர் பெற்று எழுந்து பறந்­தது. இதை பார்த்­த­வர்­கள், அதி­ச­யத்­தில் ஆழ்ந்­த­னர்.

ஜெயன் கையில் உள்ள அதி­ச­யத் துாரிகை, அவன் வரை­யும் ஓவி­யங்­கள் பற்றி, அந்­நாட்டு அர­ச­னி­டம் எடுத்­து­ரைத்­த­னர். அர­சனோ, கொடு­மைக் காரன், பேரா­சை­யின் மறு­வ­டி­வம்.

மக்­க­ளைக் கசக்­கிப் பிழி­வ­தில், கை தேர்ந்­த­வன். அவன், ஏவல் ஆட்­களை அனுப்பி, ஜெயனை பிடித்து சிறை­யில் அடைத்­தான். அதி­சய துாரி­கை­யை­யும் பறித்­துக் கொண்­டான். பல இடங்­க­ளில் இருந்து ஓவி­யர்­களை வர­வ­ழைத்து, அந்த துாரி­கை­யால் கோட்டை, யானை, குதிரை சேனை­களை ஓவி­ய­மாக வரைய செய்­தான்.

அவை எல்­லாம், உயி­ரு­டன் வந்­தால், தன்னை யாரும் வெற்றி பெற முடி­யாது என, எண்ணி அவ்­வாறு செய்­தான் அர­சன்.

அவன் பேராசை நிறை­வே­ற­வில்லை; ஓவி­யங்­கள் உயிர் பெற­வில்லை. அர­ச­னுக்கு சினம் வந்து, ஜெயன் தலையை வெட்­டும்­படி உத்­த­ர­விட்­டான். இந்த ஆத்­தி­ரச் செய­லைக் கண்ட மந்­தி­ரி­கள், பொறு­மை­யாக இருக்­கும்­படி அர­ச­னைக் கேட்­ட­னர்.

'நாடா­ளும் அர­சனை சிறு­வன் ஏமாற்­று­வதா... மனம் பத­று­கி­றது அமைச்­சர்­களே...' என்று, அவை­யில் கொட்டி தீர்த்­தான் அர­சன்.

'இது, அதி­ச­யத் துாரிகை என்­ப­தில் ஐயம் இல்லை; ஆனால், இந்த துாரிகை, அந்த சிறு­வ­னி­டம் மட்­டுமே, சக்தி பெறு­கி­றது. எனவே, அவ­னுக்­குப் பொரு­ளாசை காட்டி, ஓவி­யங்­களை வரை­யச் சொல்­வது தான் பொருத்­த­மா­னது. அப்­படி செய்­தால் தான், நீங்­கள் நினைத்­தது நடக்­கும்...' என்­ற­னர் அமைச்­சர்­கள்.

ஆலோ­ச­னையை ஏற்று, ஜெயனை, அரண்­ம­னைக்கு அழைத்து, நன்கு உப­ச­ரித்­தான் அர­சன். தன் விருப்­பத்­தை­யும் கூறி­னான்.

அதி­சய துாரி­கையை திரும்ப பெற விரும்­பிய ஜெயன், அர­சன் சொற்­படி கேட்­ப­தாக நடித்­தான்.

ஒரு பணம் காய்க்­கும் மரத்தை வரை­யும்­படி கூறி­னான் அர­சன்.

ஜெயனோ, நீல­வண்­ணக் கடலை வரைந்­தான்.

'யார் உன்­னைக் கடல் வரை­யும்­படி கேட்­டது; பணம் காய்க்­கும் மரத்தை தானே வரைய சொன்­னேன்...' என்­றான் அர­சன்.

'சற்று பொறுங்­கள் அரசே...' என்று கூறி, கடல் நடுவே, ஒரு தீவை­யும், அதன் நடுவே பணம் காய்க்­கும் மரத்­தை­யும் வரைந்­தான் ஜெயன்.

'அரசே பாருங்­கள்... நீங்­கள் கேட்ட பணம் காய்க்­கும் மரம்...' என்று கூறி­னான் ஜெயன்.

'நான் அங்கே எப்­படி போக முடி­யும்; அதற்கு ஒரு படகை வரைந்து கொடு...' என்று கேட்­டான் அர­சன்.

மிகப் பெரிய படகை வரைந்­தான்; அதில், அர­சன், அரசி, மந்­தி­ரி­கள் ஏறி­னர்; உடனே, காற்றை வரைந்­தான் ஜெயன்; படகு மெது­வாக அசைந்து புறப்­பட்­டது.

மகிழ்ச்­சிக் கட­லில் மூழ்­கி­யது அர­ச­னும், அவ­ரது பட்­டா­ள­மும்.

'படகு மெது­வா­கப் போகி­றதே... வேக­மாக போகட்­டும்...' என்­றான் அர­சன்.

ஜெயன், புயல் காற்றை வரைந்­தான். அது சூறா­வ­ளி­யாக வீசி­யது; படகு திசை மாறி­யது; மழை அதி­க­ரித்து, பட­குக்­குள் நீர் புகுந்­தது.

'போதும்... போதும்... நிறுத்து...' என்று கத்­தி­னான் அர­சன்.

'அரசே... இனி எது­வும் செய்ய முடி­யாது; விதி விட்ட வழி அவ்­வ­ளவு தான்...' என்று தீர்க்­க­மா­கச் கூறி­னான் ஜெயன்.

சூறா­வ­ளி­யால் படகு கவிழ்ந்து, அனை­வ­ரும் மூழ்கி இறந்­த­னர்.

அர­சன் இறந்­து­விட்­ட­தால், ஜெயனை மன்­ன­ராக்கி மகிழ்ந்­த­னர் அந்த நாட்டு மக்­கள்.

குட்­டீஸ்... சுய­ந­ல­மின்றி, நிதா­ன­மாக வாழ்ந்­தால் உயர்ந்த பத­வி­கள் தேடி­வ­ரும்.

- – ஸ்ரீ செண்­பகா பதிப்­ப­கம்!