எல்­லாம் தெரிந்த ஏகாம்­ப­ரம்!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

காட்­டு­யா­னம்!

நெல் தானி­யம் பற்றி பல­ருக்கு தெரி­யாது. அரிசி, அப்­ப­டியே மரத்­தில் காய்க்­கி­றது என, நினைப்­ப­வர்­க­ளும் உண்டு!

தமி­ழ­கத்­தில் நெடுங்­கா­லம் பயன்­பாட்­டில் உள்ள, பாரம்­ப­ரிய நெல் காட்­டு­யா­னம்; மற்ற நெல் ரகங்­களை விட மருத்­துவ குணம் உடை­யது.

எந்த தட்ப வெப்ப நிலை­யி­லும் விளை­யும். அதி­பட்­சம், ஏழு அடி வரை வள­ரும். வறட்சி, வெள்­ளத்தை தாங்கி மக­சூல் கொடுக்­கும்.

இந்த ரகத்தை சாகு­படி செய்­யும் வய­லில், யானை புகுந்­தால் கூட வெளியே தெரி­யாது என்­ப­தால், காட்­டு­யா­னம் என்ற பெயர் வந்­தது.

இந்த அரி­சியை, மண் பானை­யில் சமைத்து, முதல்­நாள் மாலை தண்­ணீர் ஊற்றி , மறு நாள் காலை, நீரா­கா­ரத்­து­டன் சாப்­பிட்டு வந்­தால், நோயால் முடங்­கிக் கிடப்­ப­வ­ரும், எழுந்து நடப்­பர்.

காட்­டு­யா­னம் பச்­ச­ரி­சியை, கஞ்சி காய்ச்சி, கரு­வேப்­பி­லை­யைக் கொத்­தாக போட்டு, மூடி வைத்து, மறு­நாள் காலை, சாப்­பிட்டு வந்­தால், நோய்­கள் தீரும்.

ஏக்­க­ருக்கு, 24 மூட்டை மக­சூல் தரும்; 180 நாள் வய­து­டை­யது. ரசா­யன உரம், பூச்­சிக்­கொல்லி இன்றி சிறப்­பாக வள­ரும்.

காட்­டு­யா­னம் போன்ற பாரம்­ப­ரிய நெல் ரகங்­களை பேணு­வோம்.


கால­ணி­யில்

சர்க்­கஸ்!

நவீன உல­கத்­தில், பெண்­க­ளி­டம் அதிக வர­வேற்பை பெற்­றி­ருப்­பது, குதி­கால் உயர்த்­தும் செருப்­பு­கள். அவை அணி­வதை, அந்­தஸ்­தாக நினைக்­கின்­ற­னர். அத­னால், ஏற்­ப­டும் பின்­வி­ளைவு பற்றி கவ­லைப்­ப­டு­வ­தில்லை.

இந்த வகை கால­ணி­கள் அணி­வ­தால், மூட்டு வலி ஏற்­ப­டும்; உடல் சம­நிலை மாறும்; உட­லுக்கு தேவை­யற்ற அழுத்­தம் ஏற்­ப­டும்.

நடை­யில் மாற்­றம் ஏற்­பட்டு, குதி­கால்­கள், இயற்­கைக்கு மாறாக, முன்­னுக்கு தள்­ளப்­ப­டும்.

சம­த­ளத்­தில் நடந்து பழ­கிய கால்­கள், 'ஹைஹீல்ஸ்' அணிந்து சர்க்­கஸ் செய்­வது போல் நடைப்­ப­யில்­வது சிர­மம். கால­ணி­யின் உய­ரத்­திற்­கேற்ப, உட­லில் தொந்­த­ர­வு­கள் ஏற்­ப­டும். கர்ப்­பப்பை பாதிக்­கப்­ப­டும். பெண்­களே... நாக­ரி­கத்தை விட, உடல் ஆரோக்­கி­யம் முக்­கி­யம்!