விடுகதை!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

1. குமிழி சட்டி கூழ்ப்­பானை, விடிந்து பார்த்­தால் வெறும் பானை. அது என்ன?

2. குய­வன் செய்­யாத பானை, மழை பெய்­யா­மல் தண்­ணீர் வண்­ணான் வெளுக்­காத வெள்ளை. அது என்ன?

3. குனிந்து பூ பூக்­கும், நிமிர்ந்து காய் காய்க்­கும். அது என்ன?

4. கோணக் கோணப் புளி­யங்­காய், எங்க நாட்­டுக்­கும் வருது, உங்க நாட்­டுக்­கும் போகுது. அது என்ன?

5. கையி­ரண்­டும் பெற்­றி­ருப்­பேன், கண்­ணாடி போட்­டி­ருப்­பேன், மெய்­யெல்­லாம் என்­னி­டம் அறி­வாய். நான் யார்?

6. கரு­ம­ணி­யாய் சிறு­ம­ணி­யாய் கண்­டெ­டுத்­துக் கோர்ப்­போ­ருக்கு நாடு தரேன், நக­ரம் தரேன், திருப்­பத்­துா­ரைத் திருப்­பித் தரேன், பொன்­னும் தரேன், பவுன் தரேன். நான் யார்?

7. குடிக்­க­லாம், அடிக்­க­லாம். எது அது?

8. கோவி­லுக்கு போனா­னாம் எங்க தம்பி, தீர்த்­தம் விட்­டா­னாம் எங்க தம்பி. அவன் யார்?

9.கோணல் மண­லாய்க் கொடி இருக்­கும், தாறு­மா­றாய் இலை இருக்­கும், மஞ்­சள் பூ பூத்­துச் சொறி சொறி­யாய் காய் காய்க்­கும். அது எது?

10. கேட­ய­முள்ள வீர­னுக்கு வாள் இல்லை. அது யார்?


விடை :

1. வயிறு

2. தேங்­காய்

3. எள் செடி

4. சாலை

5. கடி­கா­ரம்

6. சிறு கீரை விதை

7. காப்பி

8. தேங்­காய்

9. பாகற்­காய்

10. ஆமை