ஓ.என்.ஜி.சி கெயில் போன்ற நிறுவனங்களின் நேரடி முதலீட்டை 51 சதவீதத்திற்கும் கீழே குறைக்க அரசு முடிவு

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 20:40

புது டில்லி,

   அரசு கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, கெயில் போன்ற நிறுவனங்களில் நேரடி முதலீட்டை 51 சதவீதத்திற்கும் கீழே குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் உயர்த்துவதற்காக, முதலீடுகளை அதிகரிக்க வேண்டியுள்ளதுஅதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு கம்பெனிகளி உள்ள நேரடி முதலீட்டை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற அரசு நிறுவனங்கள் இதே ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, கெயில் போன்ற நிறுவனங்களில்  முதலீடு 51 சதவீதத்திற்கு மேல்தான் இருக்கும், குறைக்கப்போவதில்லை  என்றும் அரசு முடிவு செயதுள்ளது.