சீனா மெக்ஸிகோ இரும்பு பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 20:32

வாஷிங்டன்

   சீனா மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில இரும்புப் பொருள்கள் மீது அமெரிக்க அரசு திங்களன்று புதிதாக கூடுதல் தீர்வுகளை விதித்துள்ளது. கூடுதல தீர்வை விவரம் பற்றிய விவரங்களை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.

சீனாவும் மெக்சிகோவும் தங்கள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நியாயமற்ற வகையில் பல மானியங்களை வழங்கி வருகின்றன. அதனால் அந்த இரு நாடுகளின் உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் இரும்புப் பொருட்களை தயாரிக்க முடிகிறது. அதனால் அந்த இரண்டு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினிய பொருள்கள் மீதான தீர்வுகளை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அமெரிக்கா மெக்சிகோ கனடா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள சம்மதித்த காரணத்தினால் இனிமேல் இரும்பு மற்றும் அலுமினிய பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதிக்காது என டிரம்ப் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இப்பொழுது அந்த முடிவுக்கு எதிராக மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரும்புப் பொருள்களுக்கு கூடுதல் தீர்வை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனா மற்றும் மெக்சிகோ நாட்டில் உள்ள இரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஏராளமாக மானியங்கள் வழங்கப்படுவதாக அமெரிக்க அரசிடம் அமெரிக்காவில் உள்ள இரும்பு பொருள் உற்பத்தியாளர்கள் புகார் செய்தனர்.

இது தொடர்பாக அமெரிக்க அரசு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வில் 30.3 சதவீதம் முதல் 177.4 3 சதவீதம் வரை இரும்பு கம்பெனிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து கூடுதல் தீர்வை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.

மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு 150 கோடி டாலர் மதிப்புள்ள இரும்பு பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.