திருப்பதி கோவிலில் தூய்மைப்படுத்தும் சடங்கு: ஜூலை 16ம் தேதி கோவில் மூடல்

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 17:17

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானம் அளித்து வரும் திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கான டோக்கன்கள் வரும் 16-ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளன. அன்று கோயில் காலை 5:00 மணி முதல் மறுநாள் காலை 5:00 மணிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட உள்ளது.

பவுர்ணமி தினமான அன்று மாலை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 

ஜூலை 16 அன்று காலை 5:00 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதோடு, இரவு 7:00 மணி முதல் மறுநாள் காலை 5:00 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது.

எனவே, நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், தர்ம தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டோக்கன் ஆகியவை ஜூலை 16-ஆம் தேதி வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.