சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 400– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 10 ஜூலை 2019

நடி­கர்­கள்  :  ஆர்.மாத­வன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால், நாகேந்­தி­ர­பாபு, அஷு­தோஷ் ராணா மற்­றும் பலர்.

இசை :  யுவன் ஷங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு :   நீரவ் ஷா, எடிட்­டிங் :    ஆண்­டனி, தயா­ரிப்பு :     திருப்­பதி பிர­தர்ஸ், திரைக்­கதை,  இயக்­கம் :   லிங்­கு­சாமி.

தூத்­துக்­கு­டி­யில் வசிக்­கும் சிறு­வர்க ­ளான திரு­மூர்த்­தி­யும் (மாத­வன்), குரு­மூர்த்­தி­யும் (ஆர்யா) பாச­மான அண்­ணன்­ – தம்பி. திரு வன்­முறை பிடிக்­காத பயந்த சுபா­வமு­டை­ய­வன். தம்பி குருவோ அடி­த­டி­யில் வல்­ல­வன். அண்­ணனை கேலி செய்­ப­வர்­களை குரு அடித்­து­வி­டு­வ­தால் போலீ­சாக இருக்­கும் இவர்­க­ளது தந்தை (நாகேந்­திர பாபு) குருவை தண்­டிக்­கி­றார். குருவை அடித்­தா­லும் திருவே அழு­கி­றான்.

தந்­தை­யின் மறை­விற்­குப்­பி­றகு அவ­ரது வேலைக்­கான வாய்ப்பு இளை­ஞர்­க­ளாக இருக்­கும் சகோ­த­ரர்­க­ளுக்கு கிடைக்­கி­றது. திருவை அந்த வேலையை வற்­பு­றுத்தி ஏற்­றுக்­கொள்ள வைக்­கி­றான் குரு. தைரி­ய­சா­லி­யான வசந்­தியை (சமீரா ரெட்டி) திரு மணந்து கொள்ள சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் வசந்­தி­யின் வீட்­டில் வாழத்­தொ­டங்­கு­கி­றார்­கள். அமை­தி­யான சுபா­வ­மு­டைய வசந்­தி­யின் தங்கை ஜெயந்­தியை (அமலா பால்) குரு விரும்­பு­கி­றான். தனது கண­வனை வீர­னாக நினைக்­கும் வசந்­திக்கு வேலை­வெட்­டிக்கு போகாத குருவை பிடிப்­ப­தில்லை. ஜெயந்­திக்கு தங்­க­ளது சிறு­வ­யது தோழன், என்­ஆர்ஐ மாப்­பிள்­ளை­யான கவுதமை முடிவு செய்­கி­றாள் வசந்தி. குரு­வும் ஜெயந்­தி­யும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் விரும்­பு­வது தெரிந்து வந்த மாப்­பிள்ளை திரு­ம­ணத்­தன்றே ஊரை­விட்டு போய்­விட, அனை­வ­ரின் விருப்­பப்­படி குரு­வுக்­கும் ஜெயந்­திக்­கும் திரு­ம­ணம் நடக்­கி­றது.

இத­னி­டையே போலீஸ் வேலை­யில் சேர்ந்­த­தில் இருந்து திரு­வுக்­கான வேலை­களை குருவே மறை­மு­க­மாக செய்து வரு­கி­றான். ஊரில் ரவு­டி­க­ளின் அட்­ட­கா­சத்தை ஒடுக்­கு­வது, எதிர்ப்­ப­வர்­களை பணிய வைப்­பது, சாட்­சி­களை பாது­காப்­பது என குரு செய்­யும் வேலை­க­ளுக்­கான பாராட்­டுக்­கள் திரு­வுக்கே கிடைக்­கி­ன்றன. லோக்­கல் தாதா­வான அண்­ணாச்சி (அஷு­தோஷ் ராணா) சிசி­டிவி மூல­மாக குரு­வைப் பற்றி தெரிந்து அவனை மிரட்ட திருவை அடித்­துப்­போ­டு­கி­றான். குண­ம­டைந்து வரும் திரு­விற்கு பயிற்­சி­ய­ளிக்­கும் குருவை திரு­வின் கண்­முன்பே அண்­ணாச்­சி­யின் ஆட்­கள் தாக்­கு­கி­றார்­கள். அண்­ண­னின் மாற்­றத்­திற்­காக குரு அடி­களை வாங்­கிக்­கொள்ள, கலங்­கும் திரு, தம்­பிக்­காக தனது பயத்­தை­யெல்­லாம் துறந்து வெகுண்­டெ­ழு­கி­றான்.

தனக்­கெ­தி­ராக நிற்­கும் சகோ­த­ரர்­களை பழி­வாங்க அண்­ணாச்சி அவர்­க­ளது வீட்­டிற்­குள் நுழை­கி­றான். ஜெயந்­தி­யும், கர்ப்­பி­ணி­யான வசந்­தி­யும் அவர்­க­ளி­டம் சிக்­கிக்­கொள்ள விரைந்து வரும் சகோ­த­ரர்­கள் இரு­வ­ரை­யும் காப்­பாற்­று­கி­றார்­கள். முடி­வில் அண்­ணாச்­சியை திரு கொல்ல, வழக்­கம்­போல் திரு­வுக்கே புகழ் கிடைக்­கி­றது. இம்­முறை குடும்­பத்­தில் அனை­வ­ரும் வற்­பு­றுத்­து­வ­தால் போலீஸ் வேலைக்­காக பயிற்சி எடுக்க சம்­ம­திக்­கி­றான் குரு.