போலீசாரை தாக்கியதாக ஹாங்காங் நகரத்தில் 5 பேர் கைது

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019 20:55

ஹாங்காங்

    ஹாங்காங் நகரில் மூக்குப் பகுதியில் முகமூடி அணிந்த கலவரக்காரர்கள் 5 பேர் போலீசாரை தாக்கியதாகவும் போலீசார் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் கைது செய்து 5 பேரை கைது செய்திருப்பதாக ஹாங்காங் காவல்துறையின் சார்பில் திங்கட்கிழமை காலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாங்காங் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வழக்கம் போல தெருவில் ஹாங்காங் அரசின் கடத்தல் மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஆர்ப்பாட்டம் முடிந்து முகமூடி அணிந்த இளைஞர்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, போலீசார் அவர்களை வழிமறித்து கைது செய்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோங் கோக் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள், ஆனால் ஆயுதம் ஏந்திய போலீசார் சாலையின் குறுக்கே வரிசையாக தங்கள்  கேடையங்கள் நின்று ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்தார்கள். அவர்களை தடுத்ததோடு கத்தி, கம்புகளால் அடித்தனர் அதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து லாரிகளில் அழைத்துச் சென்றனர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஜோஷுவா உன் அறிக்கை விடுத்துள்ளார்.

வழக்கமாக போலீசார் செய்யும் தந்திரம் முறைப்படி இந்த முறையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அமைதியாக சென்று கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு அவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள் என ஜோஷுவா கூறினார்.

வெளிநாட்டில் பதிவுசெய்து குற்றங்களுக்காக, ஆனால் நகர மக்களை வெளிநாடுகளுக்கு விசாரணைக்காக அனுப்ப வகை செய்யும் மசோதா அவை ஒருபோதும், ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள்.

ஹாங்காங் நகரத்தில் ஜனநாயக நடைமுறைகள் எல்லாம் கைவிடப்பட்டு இப்பொழுது அடக்குமுறை மேலோங்கி இருக்கிறது என அவர்கள் குறிப்பிட்டனர். விசாரணைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப வகை செய்யும் மசோதா முற்றிலும் கைவிடப்படவேண்டும். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது ரப்பர் குண்டுகளால் சுட்டது ஆர்ப்பாட்ட அவர்கள் மீது தடியடி நடத்தியது ஆகிய வன்முறைச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் ஜனநாயக உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவோரை கைது செய்யும்பொழுது கலவரக்காரர்கள் என்று குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்கிறார்கள் கலவரக்காரர்கள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டால் நீண்ட கால சிறைத்தண்டனை வழங்க ஹாங்காங் சட்டம் வகை செய்கிறது. அதனால் போலீஸ்காரர்கள் திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை சிறையில் தள்ள இப்படி வழக்கு பதிவு செய்கிறார்கள்.

 இனிமேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று வழக்குப் பதிவு செய்ய வேண்டும் கலவரக்காரர்கள் என்று வழக்கு பதிவு செய்யக் கூடாது என ஜோஷுவா உன் வேண்டுகோள் விடுத்தார்