இறைவன் கருணை எப்போது கிடைக்கும்?

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

* எதனை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக ஆகும்?

சிவானுபவத்தை.

* இறைவனுடைய கருணை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அடியவர் உறவு கிடைக்க வேண்டும்.

* இறைவன் எப்படி விளங்குகிறான்?

தூயவர்களுக்கு  அண்மையிலும், தீயவர்களுக்கு நெடுந்தொலைவிலும்.

* சகல பாவங்களும் எதனால் விலகும்?

அடியார்களின் பாததூளி சென்னியால் படுவதால்.

* பொய் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்களை கூறுக.

இல்லாத ஒன்று பொய், சில காலம் இருந்து பின் அழிவது. (உதாரணம்: உடம்பு)

* மனிதனுக்கு அத்தியாவசிய பொருட்கள்?

உடை, உணவு, நீர், மருந்து, மனைவி, வீடு.

* பற்று என்பது?

உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு.

* அவா என்பது?

இன்னும் வேண்டுமென்று கொழுந்து விடும் நினைவு.

* பேராசை என்பது?

எவ்வளவு வந்தாலும் திருப்தியடையாது மேலிடுகின்ற விருப்பம்.

* துன்பத்தை தாண்டுபவன் யார்?

தர்மத்தை ஆடம்பரத்துக்காகச் செய்யாமல், தேவையை குறைத்துக்கொண்டு வாழ்பவன்.

(‘வாரியாரின் ஒரு வரி பதில்’ நூலிலிருந்து.....)