வயது என்பது எண் மட்டுமே!

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

ஜான் வெஸ்லி என்ற போதகர் மிக சுறுசுறுப்பானவர். சிறந்த எழுத்தாளரும் கூட. 400 புத்தகங்கள் எழுதியுள்ளார். தினமும் 15 மணி நேரம் எழுதுவார். அப்படியிருந்தும், இன்னும் அதிக நேரம் எழுத முடியவில்லையே என வருந்துவார். 86 வயதாகியும் கூட தினமும் இரண்டு மணி நேரம் நின்று கொண்டே பிரசங்கம் செய்வார்.

குதிரை சவாரி செய்வார். அவ்வாறு பல நாடுகளுக்கு அவர் பயணித்த துாரம் 4 லட்சம் கி.மீ., ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு வயது, உடல்நிலை, பணநிலை எதுவும் தேவையில்லை. ஆண்டவர் உடன் வருவார் என்ற ஒரே நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு உழைக்க வேண்டும். வயது என்பது உடலுக்கு மட்டும்தான், மனதிற்கு அல்ல. வயது என்பதை வெறும் எண்ணாக மட்டும் கருதி சேவையாற்றுங்கள். போதும், இனி எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.