சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 8– 7–19

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்­குச் சந்தை பட்­ஜெட் வாரத்­தில் ஜம்­மென்று 40,000 புள்­ளி­கள் வரை ஏறிச் சென்­றது. அதை தாண்­டி­யும் சென்­றது. ஆனால் பட்­ஜெட் தினத்­தில் காற்­றி­ழந்த பலூன் போல சந்­தை­கள் இறங்கி விட்­டன. அப்­படி என்ன நடந்­தது பட்­ஜெட் தினத்­தில்?

பட்­ஜெட்

இடைக்­கால பட்­ஜெட் சமர்ப்­பித்த அதே மத்­திய அரசு இந்த முழு­மை­யான பட்­ஜெட்­டை­யும் சமர்­பித்­தது.   இத­னால் இடைக்­கால பட்­ஜெட்­டுக்­கும் என்ன வித்­தி­யா­சம் இருந்து விட­போ­கி­றது என்று பலர்  நினைத்­தி­ருக்­க­லாம். ஆனால் இடைக்­கால பட்­ஜெட் சமர்ப்­பித்த பிறகு நாட்­டில் பல    மாற்­றங்­கள்  / தேவை­கள் வந்­த­தால் இந்த பட்­ஜெட் பற்­றிய எதிர்­பார்ப்பு எகி­றி­யி­ருந்­தது. பட்­ஜெட்­டும் வந்து விட்­டது. ஆனால் சந்­தை­க­ளில் வெள்­ளி­யன்று ஒரு பெரிய தொய்வு. ஏன்? பிப்­ர­வரி இடைக்­கால பட்­ஜெட் ஒரு பாப்­பு­லிஸ்ட் பட்­ஜெட்­டாக இருந்­தது. எல்லா சலு­கை­க­ளும் அப்­போதே கொடுக்­கப்­பட்டு விட்­டது. ஆத­லால் பெரிய சலு­கை­கள் இந்த பட்­ஜெட்­டில் கொடுக்­கப்­ப­ட­வில்லை. ஆத­லால் பல­ருக்கு பெரிய ஏமாற்­றங்­கள்.

என்­னென்ன எதிர்­பார்ப்­பு­கள் இருந்­தன ? ஜி எஸ் டி குறைப்பு மற்­றும் சீர­மைப்­பு­கள்,   என் பி எப் சி கம்­பெ­னி­க­ளுக்கு லைப்­லைன், ஏற்­று­ம­தியை  ஊக்­கப்­ப­டுத்­து­தல்,          விவ­சாய   உற்­பத்­தி­யை­கூட்­டு­தல், கார்ப்­ப­ரேட் வரி விகி­தங்­க­ளில் சீர­மைப்பு,               தனி நபர் வரு­மான வரி குறைப்பு  போன்­றவை. ஆனால் சில நடந்­தது, சில நடக்­க­வில்லை.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 394 புள்­ளி­கள் குறைந்து 39513 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. தேசி­ய­பங்­குச்­சந்தை 135 புள்­ளி­கள் குறைந்து 11811 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. சென்ற வாரத்தை விட இந்த வாரம் சுமார் 119 புள்­ளி­கள் கூடி மும்பை பங்­குச் சந்தை முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

ப்ரமோட்­டர் ஹோல்­டிங்

ஒரு கம்­பெ­னி­யில் ப்ரோமோட்­டர் 75 சத­வீ­தம் வரை வைத்­தி­ருக்­க­லாம். ஆனால் தற்­போது அதை 65 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இத­னால் பல கம்­பெ­னி­கள் சந்­தை­யில் தங்­க­ளது பங்­கு­களை விற்க நேரி­டும். சந்­தை­யில் இப்­படி பல கம்­பெ­னி­கள் தங்­கள் பங்­கு­களை விற்க நேரிட்­டால் அதை சந்தை எப்­படி எதிர்­கொள்­ளும் என்­பதை காத்­தி­ருந்து தான் பார்க்க வேண்­டும்.

வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள்

வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் கடந்த ஒரு வரு­ட­மாக தள்­ளா­டி­வ­ரு­வது தெரிந்­ததே. இத­னால் இவர்­க­ளுக்கு  கடன்­கள் வழங்­க­வங்­கி­கள் யோசித்­துக்­கொண்­டி­ருந்த வேளை­யில், இந்த பட்­ஜெட்­மூ­ல­மாக சில சலு­கை­களை இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு மத்­திய அர­சு­வ­ழங்­கி­யுள்­ளது. இது அவர்­க­ளுக்கு ஒரு லைப் லைன்­போன்­ற­தா­கும். ஆனால் இன்­னும் நிலைமை சரி­யா­க­வில்லை. ஆத­லால் என்.பி.எப்.சி. கம்­பெ­னி­க­ளில் உங்­க­ளது முத­லீ­டு­களை குறைத்­துக் கொள்­ள­வும்.

தங்­கம்

தங்­கம் இந்­தி­யா­வில் எப்­போ­துமே  ஒரு முடக்­கப்­பட்­ட­சொத்­தா­கவே இருப்­பது அர­சாங்­கத்­திற்கு எப்­போ­தும் ஒரு கவ­லை­அ­ளிக்­கக்­கூ­டிய ஒரு விஷ­ய­மா­கும். இத­னால் தங்­கம்­இ­றக்­கு­ம­தி­யின் மீது தற்­போது 10 சத­வீ­த­மாக இருந்த இறக்­கு­ம­தி­வரி 12.5 சத­வீ­த­மாக கூட்­டப்­பட்­டுள்­ளது. தங்­கம் விலை மிக­வும்­கூ­டு­த­லாக இருப்­ப­தா­லும், இந்த இறக்­கு­மதி வரி­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தா­லும்  தங்­கம் இறக்­கு­மதி குறை­யும் இத­னால்­நாட்­டின்   அந்­நி­யச் செலா­வணி கைஇ­ருப்பு பாது­காக்­கப்­ப­டும்.

அதே சம­யம் தங்­கம் இறக்­கு­மதி பெரிய அள­வில் ஆப­ர­ணங்­கள் செய்து அதை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இந்த வரி கூடு­தல் விதிப்பு இவர்­க­ளுக்கு பெரிய பாதிப்பு. இத­னால் இந்­தி­யா­வின் இந்த ஜுவல்­லரி பிசி­னஸ் அரு­கில் உள்ள் அநா­டு­அக்­ளுக்கு செல்­லும் வாய்ப்பு இருக்­கி­றது. தங்­கம் சம்­பந்­த­பட்ட ஸ்டாக்­க­ளில் அதி­கம் முத­லீடு செய்ய வேண்­டாம்.

ஆனால் தங்­கத்­தில் உங்­கள் முத­லீடு சிறி­த­ளவு இருக்­க­லாம்.

 கார்­பொ­ரேட் வரி

இந்­தி­யா­வில் 250 கோடி ரூபாய் வரை விற்­பனை அள­வுள்­ள­கம்­பெ­னி­க­ளுக்கு கார்ப்­ப­ரேட் வரி விகி­தங்­கள் 25 சத­வீ­த­மா­க­இ­ருந்­தது. இது 400 கோடி ஆக தற்­போது உயர்த்­தப்­பட்­டுள்­ளது.இந்­தி­யா­வில் 99 சத­வீத கம்­பெ­னி­கள் 400 கோடிக்­கும் ரூபாய்க்­கும் கீழே தான் விற்­பனை அளவை கொண்­டி­ருப்­பது ஒரு முக்­கி­ய­மா­ன­வி­ஷ­யம். ஆத­லால் இவர்­க­ளுக்கு இந்த வரிச் சலுகை பல கார்ப்­ப­ரோட் கம்­ப­னி­க­ளுக்கு பலன்  அளிக்­கக்­கூ­டி­ய­தா­க­இ­ருக்­கும். இவர்­க­ளின் லாபங்­கள் சிறிது கூடும். சிறிய மற்­றும் நடுத்­தர கம்­பெ­னி­க­ளுக்கு இது சிறிது பய­ன­ளிக்­க­கூ­டி­ய­தா­கும்.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

ஆட்டோ கம்­பெ­னி­கள் மிக­வும் கீழே இறங்­கி­யுள்­ளன. மேலும் ஜுன் மாத ஆட்டோ விற்­ப­னை­க­ளும் அவ்­வ­ளவு சரி­யாக இல்லை. மாருதி 14 சத­வீ­தம் விற்­பனை குறைந்­தி­ருக்­கி­றது, டாடா மோட்­டார்ஸ் 14 சத­வீ­தம் விற்­பனை குறைந்­தி­ருக்­கி­றது. ஆனால் நீண்ட கால அடிப்­ப­டை­யில் விலை குறைந்­தி­ருக்­கும் போது பங்­கு­களை வாங்­கு­வது தான் நல்­லது. இந்த செக்­டா­ரில் யார் எலக்­டி­ரிக் வாக­னங்­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட போகி­றார்­கள் என்று பார்த்து வாங்­க­லாம்.

தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளுக்கு 70000 கோடி ரூபாய்­கள் மூல­த­னம் தரப்­ப­ட­வுள்­ளது. இத­னால் இவற்­றில் நல்ல வங்­கி­களை பார்த்து வாங்­க­லாம்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

இனி வரும் வாரங்­கள் காலாண்டு முடிவு வரும் வாரங்­கள். 9ம் தேதி டி.சி.எஸ்., 12ம் தேதி இன்பி என ரிசல்ட்­கள் வர இருக்­கின்­றன. ஆனால் பல கம்­பெ­னி­க­ளுக்கு ஜுன் காலாண்டு முடி­வு­கள் சிறப்­பாக இருக்க வாய்ப்­பு­கள் இல்லை. நல்ல காலாண்டு முடி­வு­கள் தரும் கம்­பெ­னி­க­ளாக பார்த்து வாங்­க­லாம். இது பொறு­மை­யாக இருக்க வேண்­டிய நேரம்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com