ஸ்டார்ட் அப்: பட்­ஜெட்­டும் – ஸ்டார்ட் அப்­க­ளும்

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019

இளைய சமு­தா­யம்  அதி­க­மாக உள்ள இந்­தி­யா­வில் அர­சாங்­கமே எல்­லோ­ருக்­கும் வேலை­வாய்ப்பு அளிப்­பது என்­பது சுல­ப­மான காரி­ய­மல்ல. இளை­ஞர்­கள் சுய தொழி­லில் ஈடு­ப­ட­வும், மற்­ற­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு அளிக்­க­வும் 2016 ஆம் வரு­டத்­தி­லி­ருந்து ஸ்டார்ட் அப்­கம்­பெ­னி­கள் தொடங்­கு­வதை  அர­சாங்­கம்  ஊக்­கு­வித்து வரு­கி­றது. அதன் மூலம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது என்­ப­து­தான் அர­சாங்­க­த­தின் திட்­டம். இத­னால் ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளுக்கு பல சலு­கை­கள்­அ­ளிக்­கப்­பட்டு வந்­தன. இந்த பட்­ஜெட்­டும் ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளுக்கு இனிப்­பான செய்­தி­களை வழங்­கி­யுள்­ளது.

முறை­யான ஆவண தாக்­கல்

பல ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளின் குறையே வரு­மான வரி அதி­கா­ரி­கள் அவர்­களை  தொடர் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­த­ப­டு­கி­றார்­கள், தொந்­த­ரவு செய்­யப்­ப­டு­கி­றார்­கள், தங்­க­ளு­டைய ஸ்டார்ட் அப்­க­ளில் கவ­னம் செலுத்த இய­ல­வில்லை. இதை தவிர்க்­கும் வித­மாக புதி­தாக தொழில் துவங்­கு­வோர் மற்­றும் அவர்­க­ளின் முத­லீட்­டா­ளர்­கள் தேவை­யான ஆவ­ணங்­கள் மற்­றும் அவர்­க­ளின் வரு­மா­னம் தொடர்­பான தக­வல்­களை தாக்­கல் செய்­யும் பட்­சத்­தில் அவர்­க­ளின் பங்­கு­க­ளின் பிரீ­மிய மதிப்­பீ­டு­கள் குறித்து எந்­த­வி­த­மான ஆய்­வும் இராது. இதன் மூலம் புதி­தாக ஸ்டார்ட் அப் தொழில் துவங்­கு­வோர் வரு­மான வரித்­து­றை­யால் சந்­திக்­கும் ஏஞ்­சல் வரி பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்­வாக இருக்­கும்.

நிலு­வை­யில் உள்ள மதிப்­பீ­டு­கள்

நிலு­வை­யில் உள்ள தொழில் துவங்­கு­வோ­ரின் மதிப்­பீ­டு­கள் மற்­றும் அவர்­க­ளின் குறை­களை தீர்க்க மத்­திய நேரடி வரி வாரி­யம் சிறப்பு நிர்­வாக ஏற்­பா­டு­களை செயல்­ப­டுத்­தும்.

மூல­தன ஆதாய வரி விலக்கு

செய்­வ­தற்­காக சொத்­துக்­களை விற்று திரட்­டப்­ப­டும் முத­லீட்­டிற்கு இதி­லி­ருந்து தற்­போது அளிக்­கப்­ப­டும் மூல­தன ஆதாய வரி விலக்கு வரம்பு 31 மார்ச் 2021 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

நீங்­கள் உதா­ர­ண­மாக ஒரு சொத்தை விற்று வரும் பணத்தை உங்­க­ளது கம்­பெ­னி­யில் முத­லீடு செய்­தால் மூல­தன ஆதா­யத்­திற்கு சரி கட்ட வேண்­டிய சூழ்­நிலை ஏற்­ப­டும். ஆனால் இதே­போல் செய்த அந்த மூல­த­னத்தை அந்­தப் பணத்தை ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளில் முத­லீடு செய்­தால் அதற்கு மூல­தன ஆதாய வரி­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கி­றது.

ஸ்டார்ட் அப் சேனல்­கள்

ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை எப்­படி அமைப்­பது? அவர்­க­ளுக்கு என்­னென்ன சலு­கை­கள் உண்டு? வெற்றி பெற்­ற­வர்­க­ளின் கதை­கள் என்று ஸ்டார்ட் அப் பற்­றிய பல­வற்­றை­யும் விளக்க தொலை­காட்­சியை விட சிறந்த சாத­னம் இருக்க முடி­யாது என்­பதை உணர்ந்த அரசு அதற்­காக இந்­தி­யா­வில் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விப்­ப­தற்­கான நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்ப தனி டிவி சேனல் துவங்க இருக்­கி­றது. ஸ்டார்ட் அப்­கள் சந்­திக்­கும் பிரச்­ச­னை­கள் குறித்த விவா­தங்­கள், நிதி மற்­றும் வரி திட்­ட­மி­டல் ஆகி­ய­வற்றை பற்றி ஸ்டார்ட் அப்­க­ளுக்கு எடுத்­து­ரைப்­பது போன்ற பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ஒளிப்­ப­ரப்­ப­டும்.

இந்த பிரத்­யேக டி.வி நிகழ்ச்சி ஸ்டார்ட் அப்­க­ளா­லேயே வடி­வ­மைக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­ப­டும் என்­பது ஒரு முக்­கி­ய­மா­ன­தா­கும்.

ஸ்டார்ட் அப் பற்றி தெரிந்து கொள்ள மொழி ஒரு தடை­யாக இருக்க கூடாது. சிறிது சிர­ம­மாக இருந்­தா­லும் முக்­கி­ய­மான இந்­திய மொழி­க­ளில் இந்த சேனல்­கள் இருப்­பது மிக­வும் முக்­கி­யம். இந்த சேனல் முத­லீட்­டா­ளர்­களை நிறு­வ­னங்­க­ளு­டன் இணைக்­கும் பால­மா­க­வும் இருக்க வேண்­டும்.

உல­கின் மூன்­றா­வது பெரிய ஸ்டார்ட் அப்

உல­கின் மூன்­றா­வது பெரிய ஸ்டார்ட் அப் சூழ­லாக இருக்­கும் இந்­தி­யா­வில், இது ஸ்டார்ட் அப்­கள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை தொலை­காட்சி மூல­மாக செய்­வது இன்­னும் பலரை ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­கள் தொடங்க வழி வகுக்­கும். பல நாடு­க­ளில் ஸ்டார்ட் அப்­கள் சார்ந்த பல நிகழ்ச்­சி­கள் ஒளி­ப­ரப்­பாகி வரு­கின்­றன.

ஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப் திட்­டம்

ஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப் திட்­டம் இன்­னும் 5 ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதா­வது 2020-25 ஆண்­டு­கள் வரை இந்த திட்­டம் நீட்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இன்­கு­பேட்­டர்

2019-20 ஆண்­டில் 80 பிசி­னஸ் இன்­கு­பேட்­டர்­க­ளும், 20 டெக்­னா­லஜி இன்­கு­பேட்­டர்­க­ளும் தொடங்­கப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  இது ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களை திற­மை­மிக்­க­வர்­க­ளாக்க உத­வும்.