ஏற்­று­மதி உல­கம்: டெனிம் ஜீன்ஸ் கண்­காட்சி

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019

டெனிம் மற்­றும் ஜீன்ஸ் களுக்­காக ஒரு தனிப்­பட்ட கண்­காட்சி நடை­பெற்­றால் எப்­படி இருக்­கும். ஆமாம் அப்­படி ஒரு கண்­காட்சி நடந்­தால் எப்­படி இருக்­கும்?

இந்த மாதம் 17 மற்­றும் 18 தேதி­க­ளில் பெங்­க­ளூ­ரில் இது போன்ற ஒரு கண்­காட்சி நடை­பெற இருக்­கி­றது இதில் இந்­தி­யா­வில் இருந்து 40 கம்­பெ­னி­க­ளும், வெளி­நா­டு­க­ளில் இருந்து குறிப்­பாக ஐரோப்பா, பங்­க­ளா­தேஷ், துருக்கி மற்­றும் அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளி­லி­ருந்­தும் கம்­பெ­னி­கள் கலந்து கொள்ள இருக்­கி­றார்­கள்.

இந்­தியா வரு­டத்­திற்கு 8 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்து வரு­கி­றது. இன்­னும் மூன்று வரு­டத்­தில் கிட்­டத்­தட்ட 300 க்கும் மேற்­பட்ட  இன்­டர்­நே­ஷ­னல் பிராண்­டு­கள் இந்­தி­யா­வில்  தொழிற்­சா­லை­கள் தொடங்க இருக்­கி­றார்­கள். இத­னால் வெளி­நாட்டு கம்­பெ­னி­கள் இந்­தி­யா­வில் இருந்து வாங்­கு­வது அதி­க­ரிக்­கும்.

இந்­தியா டெனிம் உற்­பத்­தி­யில் உல­க­ள­வில் ஒரு சிறப்­பான இடத்­தில் இருப்­பது குறிப்­பி­ட­தக்­கது.

ஆர்­வ­முள்­ள­வர்­கள்

கலந்து கொள்­ள­லாம்

ஆரஞ்சு பழம் இறக்­கு­மதி

 வாய்ப்­பு­கள்

இந்­தியா எகிப்து நாட்­டி­லி­ருந்து நிறைய ஆரஞ்சு பழங்­களை இறக்­கு­மதி செய்து வரு­கி­றது. கார­ணம் அங்கு விலை குறை­வாக இருப்­ப­தால் தான். உல­கத்­தின் உற்­பத்­தி­யில் ஆறா­வது பெரிய நாடாக திகழ்­கி­றது. ப்ரெஷ் ஆரஞ்சு பழங்­களை ஏற்­று­மதி செய்­வ­தில் உலக அள­வில் முத­லி­டம் எகிஃப்து வகிக்­கி­றது. எகிப்து நாடு தற்­போது ஆரஞ்­சுப் பழங்­களை ரஷ்யா, சவுதி அரே­பியா, நெதர்­லாந்து, எமி­ரேட்ஸ், யுனை­டெட் கிங்­டெம்,  பங்­க­ளா­தேஷ் சைனா மற்­றும் இந்­திய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்து வரு­கி­றது.

எகிப்து நாட்­டி­லி­ருந்து மட்­டும் நாம் இந்த வரு­டம் 80,000 மெட்­ரிக் டன் ஆரஞ்சு பழங்­களை இறக்­கு­மதி செய்ய உள்­ளோம். இது கடந்த ஆண்டு 45 ஆயி­ரம் மெட்­ரிக் டன்­க­ளாக இருந்­தது. பழங்­கள் இறக்­கு­மதி செய்­ப­வர்­கள் இங்­கி­ருந்து செய்ய நினைக்­க­லாம்.

கேள்வி:  பேமண்ட் டெர்ம்­ஸில் மிக­வும் முக்­கி­ய­மா­னவை என்­னென்ன?

பதில் : டி.பி. (D.P.,) என செல்­ல­மாக அழைக்­கப்­ப­டும் டாக்­கு­மெண்ட்ஸ் எகைன்ஸ்ட் பேமண்ட். அதா­வது நீங்­கள் சரக்­கு­களை ஏற்றி அனுப்பி வைத்து விட்டு அனுப்­பும் டாக்­கு­மெண்ட்­கள் அங்கு வங்­கிக்கு சென்­ற­வு­டன் அந்த டாக்­கு­மெண்ட்­கான பணத்தை கட்டி விட்டு சரக்­கு­களை எடுப்­பது தாண் டி.பி. எனப்­ப­டும்.

டி.ஏ. (D.P.,) என்­பது டாக்­கு­மெண்ட்ஸ் எகைன்ஸ்ட் அக்­சப்­டன்ஸ். அதா­வது நீங்­கள் சரக்­கு­களை ஏற்றி அனுப்பி வைத்து விட்டு அனுப்­பும் டாக்­கு­மெண்ட்­கள் அங்கு வங்­கிக்கு சென்­ற­வு­டன் அந்த டாக்­கு­மெண்ட்­கான அக்­சப்­டன்ஸை கொடுத்து விட்டு பின்­னர் சரக்­கு­களை எடுப்­பது. சரக்­கு­க­ளுக்­கான பணத்தை குறிப்­பிட்ட காலம் கழித்து கொடுப்­பது.

கேள்வி: இ.சி.சி.ஜி.யில் ஒரு பையர் பற்­றிய ஓபி­னி­யன் மட்­டும் கேட்­டால் தரு­வார்­களா?

பதில்: நல்ல கேள்வி. முன்­பெல்­லாம் கொடுத்து கொண்­டி­ருந்­தார்­கள். தற்­போது கொடுப்­ப­தில்லை. இது மீண்­டும் தொடர வேண்­டும் என்­பது  எனது விருப்­பம். இதன் மூலம் பல ப்ராடு­கள் / ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு பல நஷ்­டம் போன்­றவை தடுக்­கப்­ப­டும். ஏன் இ.சி.சி.ஜி. கொடுக்க வேண்­டும்? பல நிறு­வ­னங்­கள் இருக்­கின்­ற­னவே என்று நீங்­கள் கேட்­பது காதில் விழு­கி­றது. கார­ணம் இ.சி.சி.ஜி.யின் கட்­ட­ணம் மிக­வும் குறைவு. அத­னால் தான் இந்த சேவையை தொடர வேண்­டும் என்று விரும்­பு­கின்­றேன்.

கேள்வி: எல்லா ஒரி­ஜி­னல் பில் ஆப் லேடிங்-­கை­யும் நேர­டி­யாக இறக்­கு­ம­தி­யா­ள­ருக்கு கன்­சைன் செய்து அவற்றை நேர­டி­யாக இறக்­கு­ம­தி­யா­ள­ருக்கு அனுப்பி வைக்க வேண்­டும் என்று எல்.சி. கூறு­கி­றது. இதை ஒத்­துக் கொள்­ள­லாமா?

பதில்: இறக்­கு­ம­தி­யா­ளர் ஏன் இது போல கேட்க வேண்­டும் என்று யோசிக்க வேண்­டும். அவரை உங்­க­ளுக்கு நன்­றாக தெரிந்­தி­ருந்­தால், உங்­க­ளால் எல்.சி.க்கான டாக்­கு­மெண்ட்­களை தவ­றில்­லா­மல் தயா­ரிக்க தெரிந்­தி­ருந்­தால் மட்­டுமே நீங்­கள் இதற்கு ஒத்­துக் கொள்ள வேண்­டும். இல்­லா­வி­டில் இதில் பல ரிஸ்க்-­கள் இருக்­கி­றது.