ஒரு பேனாவின் பயணம் – 215 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019

மக்கள் தலைவன்!

தனிப்­பட்ட நபர்­கள் நாட்­டைப் பார்க்­க­வும், வியா­பா­ரம் செய்­ய­வும், தங்­க­ளு­டைய  கலா­சா­ரங்­க­ளைப்  பர­வச் செய்­ய­வும், தெற்கே போயி­ருக்க வேண்­டும்.  தென்­னாட்­டுக்கு முதன்­மு­த­லில் சென்ற ஆரி­யர் அகத்­திய மக­ரிஷி என்று ‘கர்ண பரம்­பரை’ சொல்­லு­கி­றது. அவ­ரு­டன் ஆரி­யர் மத­மும் கலை­ஞா­ன­மும் சென்­றன.

 இந்­தி­யா­வுக்­கும் மற்ற வெளி­நா­டு­க­ளுக்­கு­மி­டையே இதற்கு முன்பே நல்ல வியா­பா­ரம் நடை­பெற்று வந்­தது. தெற்கே விளைந்த மிளகு, தங்­கம், முத்து இவற்றை வாங்க வெளி­நாட்டு வியா­பா­ரி­கள் கடல் தாண்டி வந்­தார்­கள். அரிசி கூட ஏற்­று­மதி செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம். பாபி­லோ­னின் பழைய அரண்­ம­னை­க­ளில் மலை­யா­ளத்­துத் தேக்கு மரம் காணப்­ப­டு­கி­றது.

 சிறிது சிறி­தாக ஆரி­யர்­கள் இந்­தி­யா­வில் தங்­க­ளு­டைய கிராம அமைப்பு முறையை ஏற்­ப­டுத்­தி­னார்­கள். திரா­வி­ டர்­க­ளின் பழைய கிராம அமைப்பு முறை­யும் ஆரி­யர்­க­ளின் புதிய கருத்­துக்­க­ளும் கலந்து பரி­ண­மித்­த­தா­கும் இப்­பு­திய முறை. இக்­கி­ரா­மங்­கள் அதிக

சுதந்­தி­ரம் பெற்று விளங்­கின. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பஞ்­சா­யத்­துக்­கள் கிராம ஆட்­சியை நடத்தி வந்­தன. பல கிரா­மங்­கள்  அல்­லது சிறு பட்­ட­ணங்­கள் சேர்ந்து ஒரு அர­சன் அல்­லது தலை­வ­னின் ஆளு­கைக்­குட் பட்­டி­ருந்­தன.  அவன் சில சம­யங்­க­ளில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தும் உண்டு.  அல்­லது பரம்­ப­ரை­யாக வரு­வ­தும் உண்டு.  இம்­மா­திரி பல கிரா­மத் தொகு­தி­கள் ஒன்று சேர்ந்து பல பொது நன்­மைக்­கான காரி­யங்­களை கவ­னித்து வந்­தன.  சாலை­கள் அமைத்­தல், சத்­தி­ரம் கட்­டு­தல், நீர் பாய்ச்­சு­வ­தற்­கான கால்­வாய்­கள் தோண்­டு­தல் முத­லிய பல பொது வேலை­களை அவர்­கள் செய்­தார்­கள். அர­சன் தனது நாட்­டில்  முதன்­மை­யா­ன­வ­னா­க­யி­ருந்­தா­லும் தன் மனம் போன போக்­கில் ஒன்­றும் செய்ய முடி­யாது.  ஆரி­யச் சட்­டங்­க­ளுக்­கும் சம்­பி­ர­தா­யங்­க­ளுக்­கும் அவன் கட்­டுப்­பட்­ட­வன். அவனை சிம்­மா­ச­னத்தை விட்டு நீக்­க­வும், அவ­னுக்கு அப­ரா­தம் விதிக்­க ­வும் ஜனங்­க­ளுக்கு அதி­கா­ரம் இருந்­தது. ஜனங்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளைக் கேட்டு அர­சாங்­கத்தை நடத்­து­மாறு 16வது லூயி என்ற பிரான்ஸ் அர­சன் கேட்­டுக் கொள்­ளப்­பட்ட போது அவன் `அர­சாங்­கமா ? அது நான்­தானே’ என்று சொன்­னா­னாம். அத்­த­கைய மனோ­பா­வம் இந்­தி­யா­வில் இல்லை.  ஆகவே, ஆரி­யர் குடி­யே­றி­ யி­ருந்த இடங்­க­ளில் ஒரு­வி­த­மான ஜன­நா­யக அரசு முறை அமு­லில் இருந்­தது என்று சொல்­ல­லாம். அதா­வது ஆரி­யக்­கு­டி­கள் தங்­கள் அர­சாங்­கத்­தின் மீது ஓர­ள­வுக்கு ஆதிக்­கம் செலுத்த முடிந்­தது.

  இந்­திய ஆரி­யர்­க­ளை­யும், கிரேக்க ஆரி­யர்­க­ளை­யும் ஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போது, பல வேற்­று­மை­க­ளும் ஒற்­று­மை­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. இரண்டு இடங்­க­ளி­லும் ஒரு­வி­த­மான ஜன­நா­ய­கம் இருந்து வந்­தது. ஆனால், இந்த ஜன­நா­யக உரி­மை­கள் ஆரி­யர்­க­ளுக்கு மட்­டுமே என்­பதை நாம் நினை­வில் வைக்க வேண்­டும்.  அவர்­க­ளின்­கீழ் அடி­மை­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்­கும், அவர்­க­ளால் தாழ்ந்த சாதி­கள் என்று ஒதுக்­கி­வைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் ஜன­நா­ய­கமோ சுதந்­தி­ரமோ கிடை­யாது. தற்­போது இருப்­பது போல் பல நூறு வகைப்­பட்ட சாதிப்

பிரி­வு­கள் அப்­போது இல்லை. அந்­நா­ளில் இந்­திய ஆரி­யர்­க­ளுக்­குள் நான்கு பிரி­வு­கள் அல்­லது சாதி­கள் இருந்­தன.

கற்­ற­றிந்­தோ­ரும், குருக்­கள்­மா­ரும்,

ரிஷி­க­ளும், பிரா­ம­ணர் என்­றும், நாட்டை ஆளு­வோர் சத்­தி­ரி­யர் என்­றும், வியா­பா­ரம் செய்­வோர்  வைசி­யர் என்­றும், ஊழி­யம்  செய்­வோ­ரும் தொழி­லா­ளர்­க­ளும் சூத்­தி­ரர் என்­றும் அழைக்­கப்­பட்­டார்­கள். ஆகவே இப்­பி­ரி­வு­கள் தொழில் வேற்­றுமை பற்றி ஏற்­பட்­டவை என்று தெரி­கி­றது. தங்­க­ளால் ஜெயிக்­கப்­பட்ட மக்­க­ளி­லி­ருந்து பிரிந்து வாழக் கருதி ஆரி­யர்­கள் இந்த ஜாதி­மு­றையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும் இருக்­க­லாம்.  ஆரி­யர்­கள் தங்­க­ளைத் தவிர மற்­ற­வர்­கள் இழிந்­த­வர்­கள் என்று கருதி இறு­மாப்­பும், வீண் பெரு­மை­யும் கொண்­டி­ருந்­த­தோடு மற்­ற­வர்­க­ளோடு தாங்­கள் கலப்­ப­தை­யும் விரும்­ப­வில்லை. ஜாதிக்கு சமஸ்­கி­ரு­தத்­தில் ‘வர்­ணம்’ என்று பெயர். வர்­ணம் என்­றால் நிறம் என்று பொருள்­ப­டு­கி­றது. இதி­லி­ருந்து ஆரி­யர்­கள் இந்­தி­யா­வில் பூர்­வீ­க­மாக இருந்­த­வர்­க­ளை­வி­டச் சிவந்த மேனி படைத்­தி­ருந்­தார்­கள் என்று தெரி­கி­றது.

 ஆகவே, நாம் ஒரு விஷ­யம் ஞாப­கத்­தில் வைக்­க­வேண்­டும். ஆரி­யர்­கள் தொழி­லாளி வகுப்­பி­ன­ரைக் கீழ்­நி­லை ­யி­லேயே வைத்து அவர்­க­ளுக்கு ஜன­நா­ய­கத்­தில் யாதொரு பங்­கும் அளிக்­க­வில்லை. ஆனால் தங்­க­ளுக்­குள் அதிக சுதந்­தி­ரத்­து­டன் வாழ்ந்து வந்­தார்­கள். தங்­களை ஆளும் அர­சர்­கள் தவறி நடக்க அவர்­கள் விடு­வ­தில்லை. தவறி நடக்­கும் அர­சன் உடன் தன் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வான். சாதா­ர­ண­மாக சத்­தி­ரி­யர்­கள்­தான்  அரசு புரி­வார்­கள். ஆனால் சில சம­யங்­க­ளில் யுத்­தங்­கள் ஏற்­ப­டும்­போ­தும் இதர குழப்­பங்­கள் நேரும்­போ­தும் கீழ் சாதி­யைச் சேர்ந்த சூத்­தி­ர­னும் அர­ச­னாக வரு­வ­துண்டு. பிற்­கா­லத்­தில் ஆரி­யர்­கள் சீர்­கெட்­டுப் போகவே அவர்­க­ளு­டைய சாதி­மு­றை­யும் கடு­மை­யாக மாறி­யது. பல பிரி­வு­கள் ஏற்­ப­டவே நாடு வலி குன்றி வீழ்ச்சி அடைந்­தது. அவர்­கள் தங்­க­ளு­டைய பழைய சுதந்­திர நாட்­டத்­தை­யும் இழந்­தார்­கள். ஏனெ­னில், ஆதி நாட்­க­ளில் ஆரி­யன் ஒரு­வன் எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் பிற­ருக்கு அடி­மை­யா­கக்­கூ­டாது என்­றும், அவ­னுக்கு மர­ணத்தை விட மானமே மேல் என்­றும் சொல்­லப்­பட்டு வந்­தது.

 ஆரி­யர்­கள் குடி­யேறி, அமைத்த பட்­ட­ணங்­க­ளும், கிரா­மங்­க­ளும் கண்­ட­படி உண்­டா­க­வில்லை. வரை­ய­றுக்­கப்­பட்ட  ஒரு திட்­டத்­தின்­ப­டியே அவை ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. சேத்­திர கணி­தம் என்று இப்­போது நாம் அறிந்­தி­ருக்­கும் கணி­தத்­தின்­படி அத்­திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டன. வைதிக பூஜை­க­ளில் சேத்­திர கணித முத்­தி­ரை­களை அக்­கா­லத்­தில் உப­யோ­கித்து வந்­தார்­கள். இப்­போது கூட இந்து குடும்­பங்­க­ளில் நடை­பெ­றும் பல­வித பூஜை­க­ளில் இவற்றை உப­யோ­கிக்­கி­றார்­கள். இப்­போது  சேத்­திர கணி­தம் வீடு­கள் கட்­டு­வ­தற்­கும் நக­ரங்­கள் நிர்­மா­ணிப்­ப­தற்­கும் அதி­க­மாக உப­யோ­கிக்­கப்­பட்டு வரு­கி­றது. பழைய ஆரிய கிரா­மம் முதன்­மு­த­லில் அரண் செய்­யப்­பட்ட ஒரு கோட்டை போல் இருந்­தி­ருக்க வேண்­டும். ஏனெ­னில், அந்­நாட்­க­ளில் பகை­வர் தாக்­கு­வார்­கள் என்­கிற பயம் சதா இருந்து வந்­தது. அந்த பயம் இல்­லாத போதும் பழைய திட்­டமே அனு­ச­ரிக்­கப்­பட்டு வந்­தது. அதா­வது நாலு பக்­க­மும் சுவர்­கள்; ஒவ்­வொரு பக்­கத்­தி­லும் பெரிய வாயில்; சிறிய வாயில் ஒன்று; இந்­தச் சுவர்­க ­ளுக்கு  உட்­பு­றத்­தில் ஒரு ஒழுங்கை அனு­ச­ரித்து வீதி­க­ளும் வீடு­க­ளும் அமைந்­தி­ருந்­தன. கிரா­மத்­தின் மத்­தி­யில் பஞ்­சா­யத்து வீதி அல்­லது சாவடி இருக்­கும். இந்­தப் பொது இடத்­தில் கிரா­மப் பெரி­யோர் கூடு­வார்­கள்.  சிறு கிரா­மங்­க­ளில் சாவ­டிக்­குப் பதி­லாக ஒரு பெரிய மரம் இருக்­கும். வரு­ஷா­வ­ரு­ஷம் கிரா­மத்­தி­லுள்ள சுதந்­திர மக்­கள் அனை­வ­ரும் கூடித் தங்­கள் பஞ்­சா­யத்­தைத் தேர்ந்­தெ­டுப்­பார்­கள்.

 கற்­ற­றிந்­தோர் பல பட்­ட­ணங்­க­ளுக்­கும், கிரா­மங்­க­ளுக்­கும் அரு­கி­லுள்ள காடு­க­ளுக்­கும் சென்று எளிய வாழ்க்கை நடத்தி தங்­கள் அறி­வைப் பெருக்கி வந்­தார்­கள். அவர்­க­ளைச் சுற்றி பல மாணாக்­கர்­கள் சேரத் தலைப் பட்­டார்­கள். இவ்­வாறு பல குரு­கு­லங்­கள் உண்­டா­யின. இக் குரு­கு­லங்­க­ளைச்  சர்வ கலா­சா­லை­க­ளுக்கு ஒப்­பா­கச் சொல்­ல­லாம். அங்கே அரு­மை­யான கட்­ட­டங்­கள் கிடையா; ஆயி­னும் கல்­வி­ய­றிவை விரும்­பி­ய­வர்­

கள் தொலை­வான இடங்­க­ளி­லி­ருந்து இக்­கு­ரு­கு­லங்­க­ளுக்கு வந்து சேர்ந்­தார்­கள்.

 ஆனந்த பவ­னத்­துக்கு எதி­ரில் பரத்­வா­ஜர் ஆசி­ர­மம் இருப்­பது உனக்­குத் தெரி­யும்.  ராமா­யண காலத்­தில் பரத்­வா­ஜர் பெரிய ரிஷி­யாக விளங்­கி­ய­தும், ராம­பி­ரான் தமது வன­வா­சத்­தின்­போது அவ­ரைத் தரி­சித்­த­தும் உனக்­குத் தெரிந்­தி ­ருக்­க­லாம்.  பரத்­வாஜ மக­ரி­ஷி­யோடு ஆயி­ரக்­க­ணக்­கான சீடர்­க­ளும் மாணாக்­கர்­க­ளும் வாழ்ந்து வந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. பரத்­வா­ஜ­ரைத் தலை­வ­ரா­கக் கொண்ட ஒரு பெரிய சர்வ கலா­சாலை  என்று அவர் ஆசி­ர­மத்­தைச் சொல்­ல­லாம்.  அவ­ரு­டைய ஆசி­ர­மம் கங்­கைக் கரை­யில் இருந்­தது.  இப்­போது கங்கை ஒரு மைலுக்கு அப்­பால் ஓடி­னா­லும் இது உண்­மை­யாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும். நமது தோட்­டத்­தில் சில இடங்­கள் அதிக மண­லாக இருப்­ப­தி­லி­ருந்து கங்கை அந்­நா­ளில் இங்கே ஓடி­யது என்று ஊகிக்­க­லாம்.

 ஆரி­யர்­கள் மிக­வும் மேன்மை பெற்று விளங்­கிய காலம் அது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அக்­கா­லத்­தைப் பற்­றிய சரித்­தி­ரம் நமக்­குக் கிடைக்­கா­த­தால் சரித்­தி­ர­மல்­லாத இதர புத்­த­கங்­க­ளி­லி­ருந்து உண்­மை­க­ளைத் தெரிந்து கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கி­றது. அந்­நா­ளி­லி­ருந்த ராஜ்­ஜி­யங்­க­ளும், குடி­ய­ர­சு­க­ளும் வரு­மாறு; மக­தம் (தெற்கு பீகார்) விதே­கம் (வடக்கு பீகார்) காசி, கோச­லம் இதன் தலை­ந­க­ரம் அயோத்தி (தற்­கா­லத்­தில் பைசா­பாத் என்று வழங்­கு­கி­றது.) பாஞ்­சா­லம் (கங்­கைக்­கும், யமு­னைக்­கும் இடை­யில்) பாஞ்­சால நாட்­டில் மதுரா, கன்யா குப்­ஜம், என்று இரு முக்­கிய நக­ரங்­கள் இருந்­தன. இந்­ந­க­ரங்­கள் பிற்­கால சரித்­தி­ரத்­தி­லும் பெயர் பெற்று விளங்­கின. இவ்­விரு நக­ரங்­கள் இன்­றும் இருக்­கின்­றன. கன்யா குப்ஜ நக­ரம் கான்­பூ­ருக்கு அரு­கில் கன்­னோசி என்ற பெய­ரு­டன் இருக்­கி­றது. அக்­கா­லத்­தில் உஜ்­ஜ­யினி நக­ர­மும் இருந்­தது. அது இப்­போது

குவா­லி­யர் சமஸ்­தா­னத்­தில் ஒரு சிறு

பட்­ட­ணம்.

 பாட­லி­புத்­தி­ரம் அல்­லது பாட்­னா­வுக்­க­ரு­கில் வைசாலி என்ற நக­ர­மும் இருந்­தது. புரா­தன இந்­திய சரித்­தி­ரத்­தின் புகழ்­பெற்ற விச்­சாவி வம்­சத்­தா­ரின் தலை­ ந­க­ரம் அது. இவர்­க­ளு­டைய ராஜ்­ஜி­யம் குடி­ய­ர­சாக இருந்­தது. அந்­நாட்­டி­லுள்ள பெரி­யோர் சபை கூடித் தங்­க­ளுக்கு ஒரு தலை­வன் அல்­லது நாய­க­னைத் தேர்ந்­தெ­டுத்­துக்கொண்டு ஆண்டு வந்தார்­கள்.

 காலம் செல்ல செல்ல, பெரிய பட்­ட­ணங்­க­ளும், நக­ரங்­க­ளும் தோன்­றின. வியா­பா­ரம் பெரு­கி­யது. தொழி­லா­ளி­யின் கைத்­தி­ற­மை­யும் வேலைப்­பா­டும் உயர்வு பெற்று விளங்­கின. நக­ரங்­கள் பெரிய வியா­பார தலங்­க­ளாக மாறின. காடு­க­ளில் பிரா­மண ரிஷி­கள் தங்­கள் மாணாக்­கர்­க­ளு­டன் வாழ்ந்து வந்த ஆசி­ர­மங்­கள், பெரிய கலா­சா­லைப் பட்­ட­ணங்­கள் ஆயின. இவ்­வா­சி­ர­மங்­க­ளில் சகல வித்­தை­க­ளும் கற்­றுக் கொடுக்­கப்­பட்­டன. பிரா­ம­ணர்­கள் வில் வித்தை கூடச் சொல்­லிக்­கொ­டுத்­தார்­கள். ‘மகா­பா­ர­தக்’ கதை­யில் பாண்­ட­வர்­க­ளில் குரு­வாக விளங்­கி­ய­வர் துரோணா சாரி­யார் என்­கிற பிரா­ம­ணர். அவர் பல வித்­தை­க­ளோடு போர் புரி­யும் வித்­தை­யை­யும் கற்­றுக் கொடுத்­ததை நீ அறிந்­தி­ருக்­க­லாம்.

ஆயி­ரம் ஆண்­டு­க­ளில் சீன சரித்­தி­ரம்

ஜன­வரி 16, 1931

 வெளி­யி­லி­ருந்து கலக்­கத்­தை­யும், துக்­கத்­தை­யும் உண்­டு­பண்­ணும்  செய்தி கிடைத்­தி­ருக்­கி­றது. ஆயி­னும் அதைக் கேட்­கப் பெரு­மை­யும் சந்­தோ­ஷ­மும் ஏற்­ப­டு­கின்­றன. ஷோலாப்­பூர் ஜனங்­க­ளுக்கு நேரிட்ட கதி­யைப் பற்­றிக் கேள்­விப்­பட்­டோம். இந்த துக்­கச் செய்தி பர­வி­ய­தும் தேச முழு­வ­தும் என்ன நடந்­தது என்­ப­தும் சிறிது தெரி­ய­வந்­தது. நமது இளை­ஞர்­கள் தங்­கள் உயி­ரைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். ஆண்­க­ளும், பெண்­க­ளும் ஆயி­ரக்­க­ணக்­கில் மூர்க்­கத்­த­ன­மான தடி­ய­டியை எதிர்த்து நிற்­கி ­றார்­கள். இந்த சம­யத்­தி­லி­ருந்தே சும்மா உட்­கார்ந்­தி­ருப்­பது    எனக்­குக் கஷ்­ட­மா­யி­ருக்­கி­றது. ஆயி­னும்  இது நமக்கு ஒரு நல்ல பயிற்சி என்று எண்­ணு­கி­றேன். நம்­மில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தம்­மைப்   பரி­பூ­ர­ண­மா­கச் சோதித்து அறிந்து கொள்­ளக்­கூ­டிய காலம் வரு­மென்று நினைக்­கி­றேன். இதற்­கி­டை­யில் நமது ஜனங்­கள் கஷ்­டங்­களை வர­வேற்க எவ்­வாறு அஞ்­சாது செல்­கி­றார்­கள்  என்­ப­தை­யும், பகை­வ­னின் ஒவ்­வொரு புதிய ஆயு­த­மும் அடி­யும் எவ்­வாறு  அவர்­க­ளு­டைய தீரத்­தை­யும் உறு­தி­யை­யும் அதி­க­மாக்­கு­கின்­றன என்­ப­தை­யும் அறிந்து கொள்­வது பெரிய ஆறு­த­லா­யி­ருக்­கி­றது.

நிகழ்­கா­லத்­துச் செய்­தி­கள் மனத்­தில் நிறைந்­தி­ருக்­கும் போது மற்ற விஷ­யங்­க­ளைப் பற்றி சிந்­திப்­பது கஷ்­ட­மா­யி­ருக்­கி­றது. ஆனால் வெறுமே பகற்­க­ன­வும் கண்டு கொண்­டி­ருப்­ப­தில் யாதொரு

பய­னும் இல்லை. நாம் உரு­வான வேலை  செய்ய வேண்­டு­மா­யின் மனதை அடக்க வேண்­டும். ஆகவே நாம் சிறிது நேரம் கஷ்­டங்­களை மறந்து ஆதி­கா­லங்­க­ளுத் திரும்­பிச் செல்­வோ­மாக.

 புரா­தன சரித்­தி­ரத்­தில் இந்­திய மாதா­வுக்­குச் சகோ­த­ரி­யாக விளங்­கும் சீன மாதாவை எடுத்­துக் கொள்­வோம். சீனா­வி­லும் கிழக்கு ஆசி­யா­வி­லும். ஜப்­பான், கொரியா, இந்தோ- சீனா, ` சையாம்’ பர்மா ஆகிய  நாடு­க­ளி­லும் வாழ்­ப­வர்­கள் ஆரி­யர்­கள் அல்ல. அவர்­கள் மங்­கோ­லிய வகுப்­பைச் சேர்ந்­த­வர்­கள்.

 ஏறக்­கு­றைய 5 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு மேற்­கே­யி­ருந்து சிலர் சீனா மீது படை­யெ­டுத்து வந்­தார்­கள். படை­யெ­டுத்து வந்­த­வர்­கள் மத்­திய ஆசி­யாவை சேர்ந்­த­வர்­களே. அவர்­கள் நாக­ரி­கத்­தில் சிறந்­த­வர்­கள். உழ­வுத் தொழிலை அறிந்­தி­ருந்த அவர்­கள் மந்தை மந்­தை­யாக ஆடு­மா­டு­கள் வைத்து வளர்த்து வந்­தார்­கள். அவர்­கள் நல்ல வீடு­கள் கட்டி அவற்­றில் வாழ்ந்து வந்­தார்­கள். அவர்­க­ளு­டைய சமூ­கம் நல்ல வளர்ச்சி அடைந்­தி­ருந்­தது. அவர்­கள் ‘மஞ்­சள் நதி’ என்று அழைக்­கப்­ப­டும் ஹொயாங்க – ஹோவுக்­க­ரு­கில் குடி­யே­றித் தங்­கள் ராஜ்­ஜி­யத்தை அமைத்­தார்­கள். பல நூற்­றாண்­டு­க­ளாக சீனா முழு­வ­தும் பரவி, கலை­யி­லும் கைத்­தொ­ழி­லி­லும் அபி­வி­ருத்தி அடைந்து வந்­தார்­கள். சீன­மக்­கள் பெரும்­பா­லும் குடி­யா­ன­வர்­கள். அவர்­க­ளு­டைய தலை­வர்­களை நாம் முன் கடி­தங்­க­ளில் சொல்­லி­யது போல நாட்­டாண்­மைக்­கா­ரர்­கள் என்றே சொல்ல வேண்­டும். அறு­நூறு அல்­லது எழு­நூறு வரு­ஷங்­க­ளுக்­குப் பிறகு அதா­வது இன்­றைக்கு 4 ஆயி­ரம் வரு­ஷங்­க­ளுக்கு முன் – யோ என்­னும் பெய­ரு­டைய ஒரு­வன் தன்னை சக்­க­ர­வர்த்தி என்று சொல்­லிக்­கொண்­ட­தாக அறி­கி­றோம். இந்த பட்­டம் இருந்­தா­லும் அவ­னைச் சக்­க­ர­வர்த்தி என்று சொல்­வதை விட

நாட்­டாண்­மைக்­கா­ரன் என்று கூறு­வதே பொருத்­த­மா­யி­ருக்­கும்.  எகிப்­தி­லும் மெச­பொ­டோ­மி­யா­வி­லும் நாம் பார்த்த சக்­க­ர­வர்த்­தி­கள் மாதிரி அல்ல இவன். சீன மக்­கள் உழ­வையே மேற்­கொண்­டி­ருந்­தார்­கள். அந்­நா­ளில் மத்­திய அர­சாங்­கம் என்­பது அவ்­வ­ள­வாக உருப்­பெ­ற­வில்லை.

 இந்­நாட்­டாண்­மைக்­கா­ரர்­கள் முத­லில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு வந்­த­தை­யும் பிறகு பரம்­ப­ரையை ஒட்டி வந்­த­தை­யும் நான் உனக்­குச் சொல்­லி­யி­ருக்­கி­றேன். சீனா­வி­லும் இம்­மா­திரி நடை­பெ­று­

வ­தைக் காண்­கி­றோம். யோவுக்­குப் பின் அவன் மகன் பட்­டத்­துக்கு வர­வில்லை. ஆனால் அவன் தனக்­குப்­பின் யாவ­ரி­னும் திற­மை­சாலி என்று கரு­தப்­பட்ட ஒரு­வனை நிய­மித்­தான். சீக்­கி­ரமே இப்­ப­தவி பரம்­பரை பாத்­தி­ய­தை­யாக மாறி­விட்­டது. 400 ஆண்­டு­க­ளுக்கு  மேலாக இந்த ஹிசையா வம்­சம்  சீனாவை ஆண்டு வந்­தது. இந்த வம்­சத்­தில் கடை­சி­யாக வந்த அர­சன் கொடி­ய­வ­னாக இருந்­த­ப­டி­யால் ஜனங்­கள் புரட்சி செய்து அவனை ஒழித்­தார்­கள்.

(தொட­ரும்)