அத்திவரதரை தரிசிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்பட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019 14:21

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் குவிந்தனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் சுவாமி தரிசனம் செய்தனர்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இன்று தரிசனம் செய்தனர். 

அத்திவரதரை தரிசிக்க 7-வது நாளான இன்று அதிகாலை முதலே ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கடந்த 6 நாட்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்த நிலையில்,  நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமையான இன்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுவாமி தரிசணத்திற்காக கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் போலீசார் ஒழுங்குபடுத்த திணறி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோயில் அருகே உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் அதிகப்படியாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.