நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆனித் திருவிழா

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019 12:33

நெல்லை

திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவாலயங்களில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் ஒன்று.
திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் ஆகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாக்களில் ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.
நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, தினமும் அபிஷேக ஆராதனை, காலையிலும், இரவிலும் சுவாமி, அம்பாள் சப்பர பவனி ஆகியவை நடக்கும்.

10 நாள் திருவிழாவின் 9ம் நாளான ஜூலை 14ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.