நெருக்கடியில் நிதிஷ் குமார்!

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

பீகா­ரில் சென்ற லோக்­சபா தேர்­த­லில் நிதிஷ் குமா­ரின் ஐக்­கிய ஜனதா தளம், பார­திய ஜனதா, ராம்­வி­லாஸ் பஸ்­வா­னின் லோக் ஜன­சக்தி கட்சி கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. இதில் ஐக்­கிய ஜனதா தளம் 17 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு 16 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. பார­திய ஜனதா 17 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு அனைத்­தி­லும் வெற்றி பெற்­றது.

லோக் ஜன­சத்தி 6 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு 6 தொகு­தி­யி­லும் வெற்றி பெற்­றது. காங்­கி­ரஸ் ஒரு தொகு­தி­யில் மட்­டும் வெற்றி பெற்­றது. லூலு பிர­சாத் தலை­மை­யி­லான ராஷ்­டி­ரிய ஜனதா தளம் ஒரு தொகு­தி­யில் கூட வெற்றி பெற­வில்லை. (தற்­போது பீகா­ரில் ஐக்­கிய ஜனதா தளம், பார­திய ஜனதா, லோக் ஜன­சக்தி கூட்­டணி ஆட்சி நடை­பெ­று­கி­றது.)

இந்த வெற்­றியை கொண்­டா­டும் நிலை­யில் நிதிஷ் குமார் இல்லை. லோக்­சபா தேர்­தல் முடிவு வெளி­யான பிறகு, நிதிஷ் குமார் டில்­லி­யில் அமித் ஷாவை சந்­தித்­தார். அப்­போது அமித் ஷா, ஐக்­கிய ஜனதா தளத்­திற்கு ஒரு அமைச்­சர் பதவி கொடுப்­ப­தாக கூறி­னார். இத­னால் மனம் உடைந்த நிதிஷ் குமார் உடனே பாட்­னா­விற்கு திரும்­பி­விட்­டார். அவர் குறைந்­த­பட்­சம் அமைச்­சர் பதவி குறித்து பேச்­சு­வார்த்தை நடக்­கும் என்று எதிர்­பார்த்­தார். ஆனால் ஒரு அமைச்­சர் பதவி தான். இஷ்­டம் இருந்­தால் ஏற்­றுக் கொள்­ளுங்­கள். இல்­லை­யெ­னில் விட்டு விடுங்­கள் என்ற பாணி­யில் அமித் ஷா கறா­ராக பேசிய உடன், நிதிஷ் குமார் போன வேகத்­தி­லேயே பாட்­னா­விற்கு திரும்பி விட்­டார்.

2015ல் நடை­பெற்ற தேர்­தல் பிர­சார கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி, இந்­தி­யா­வி­லேயே பீகார் மக்­கள் மிக­வும் புத்­தி­சா­லி­கள் என்று புகழ்ந்­தார். இந்த மாநி­லத்­தில் அடுத்த வரு­டம் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்த தேர்­த­லில் மோடி­யும், அமித் ஷாவும் பீகா­ரி­க­ளின் புத்­தி­சா­லித்­த­னத்தை பயன்­ப­டுத்­திக் கொள்­வார்­கள் என எதிர்­பார்க்­க­லாம்.

2014ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் ஐக்­கிய ஜனதா தளம் இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. இந்த முறை பா.ஜ.,வுடன் கூட்­டணி சேர்ந்து போட்­டி­யிட்டு 16 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இதில் இருந்து பா.ஜ.,வுடன் கூட்­டணி சேர்ந்து போட்­டி­யிட்­ட­தால், அதிக தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று இருப்­பது தெரி­கி­றது.

லோக்­சபா தேர்­த­லில் ஐக்­கிய ஜனதா தள­மும், பா.ஜ.,வும் தலா 17 தொகு­தி­க­ளில் சம­மாக போட்­டி­யிட்­டுள்ள நிலை­யில், வரும் சட்­ட­சபை தேர்­த­லி­லும் இதே மாதிரி சம­மான தொகுதி பங்­கீட்டை பா.ஜ,, வற்­பு­றுத்­தும். இதற்கு சம்­ம­தித்­தால் சரி, இல்­லை­யென்­றா­லும் சரி என்று கூறவே வாய்ப்பு உள்­ளது. பீகா­ரில் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் பெரிய கட்சி என ஐக்­கிய ஜனதா தளம் உரிமை கொண்­டா­டு­வதை பா.ஜ., ஏற்­றுக் கொள்­ளாது. ஏனெ­னில் 2015 சட்­ட­சபை தேர்­த­லின் போது ராஷ்­டி­ரிய ஜனதா தளம், காங்­கி­ரஸ் உடன் நிதிஷ் குமார் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டது போல், இந்த முறை நிதிஷ் குமா­ரால், அந்த கட்­சி­க­ளு­டன் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட முடி­யாது என்­பது பா.ஜ.,வுக்கு தெரி­யும்.

2015 சட்­ட­சபை தேர்­த­லில் நிதிஷ் குமா­ரின் ஐக்­கிய ஜனதா தளம், ராஷ்­டி­ரிய ஜனதா தளம், காங்­கி­ரஸ் ஆகி­யவை கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்டு ஆட்சி அமைத்­தன. சில மாதங்­க­ளி­லேயே துணை முதல்­வ­ராக இருந்த ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தின் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. இத­னால் கூட்­டணி அரசு முடி­வுக்கு வந்­தது.

பிறகு பா.ஜ.,வுடன் சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்­சியை தக்­க­வைத்­துக் கொண்­டார். இந்த சூழ்­நி­லை­யில் எவ்­வாறு நிதிஷ் குமார் மீண்­டும் ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­து­டன் சேர முடி­யும். நிதிஷ் குமா­ரால் பா.ஜ.,வின் உறவை முறித்­துக் கொள்ள முடி­யாது.

ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தைச் சேர்ந்த ரகு­வா­னாஸ் பாபு, மீண்­டும் கூட்­டணி சேர்ந்­தால் தவறு இல்லை என்­கின்­றார். அப்­ப­டியே நிதிஷ் குமார் கூட்­டணி சேர்ந்­தால் கூட, மீண்­டும் தேஜஸ்வி யாதவ்­வுக்கு துணை முதல்­வர் பதவி கொடுப்­பாரா என்ற கேள்வி எழு­கி­றது. அப்­ப­டியே கொடுக்க முன்­வந்­தா­லும், தேஜஸ்வி யாதவ் சம்­ம­திப்­பாரா என்­ப­தும் சந்­தே­கமே.

 சட்­ட­சபை தேர்­த­லுக்கு ஐக்­கிய ஜனதா தள­மும், ராஷ்­டி­ரிய ஜனதா தள­மும் கூட்­டணி சேர்ந்­தால், மக்­கள் இந்த சந்­தர்ப்­ப­வாத கூட்­ட­ணியை பார்த்து ஏள­ன­மாக சிரிப்­பார்­கள். ஏற்­றுக் கொள்ள மாட்­டார்­கள். பா.ஜ.,வுக்கே வாக்­க­ளித்து அரி­யணை ஏற்­று­வார்­கள்.

மத்­தி­யில் ஆட்­சி­யில் உள்ள மோடி, நிதிஷ் குமா­ருக்­கும், அவ­ரது கட்­சிக்­கும் சிம்ம சொப்­ப­ன­மா­கவே தெரி­வார். உட­ன­டி­யாக பா.ஜ., நிதிஷ் குமா­ரு­டன் உறவை முறித்­துக் கொள்­ளாது. அதே நேரத்­தில் எந்த நேரத்­தி­லும் தூக்­கி­யெ­றிய தயா­ரா­கவே இருக்­கும். தற்­போது பா.ஜ.,வின் கை  ஓங்கி உள்­ளது. வரும் சட்­ட­சபை தேர்­த­லில் தொகுதி பங்­கீட்டை பொறுத்து, முடிவு எடுக்­கும்.

சட்­ட­சபை தேர்­த­லில் கூட்­டணி அமைத்து நிதிஷ் குமார் முதல்­வர் என்று அறி­வித்து போட்­டி­யிட்­டா­லும், பா.ஜ.,வுக்­கும், லோக் ஜன­சக்தி கட்­சிக்­கும் அதிக இடங்­களை பெற்று போட்­டி­யிட்டு வெற்றி பெற பா.ஜ., திட்­ட­மி­டும். இந்த இரண்டு கட்­சி­க­ளும் சேர்ந்து ஆட்சி அமைக்­கும் அள­வுக்கு இடங்­களை கைப்­பற்­றி­னால், பா.ஜ., நிதிஷ் குமாரை கழற்­றி­விட தயங்­காது.

பா.ஜ.,வின் செல்­வாக்கு அதி­க­ரித்து இருப்­பது நிதிஷ் குமா­ரின் நிம்­ம­தியை குலைத்­துள்­ளது. அவர் தனது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்­றார். கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் தனது கட்­சி­யி­னரை அதிக அளவு நிய­மிக்­கின்­றார். யோகா தின நிகழ்ச்­சி­க­ளில் பங்­கேற்­க­வில்லை.

பீகா­ருக்கு சிறப்பு அந்­தஸ்து வழங்க வேண்­டும் என்று மீண்­டும் வலி­யு­றுத்­து­கி­றார். அவ­ரது கட்­சி­யின் துணைத் தலை­வ­ரும், தேர்­தல் வியூ­கம் அமைக்­கும் ஆலோ­ச­க­ரு­மான பிர­சாந்த் கிஷோர், மேற்­கு­வங்­கத்­தில் பா.ஜ.,வுக்கு எதி­ராக வேலை செய்ய அனு­ம­தித்­துள்­ளார். நிதிஷ் குமார் இது போன்று தனது அதி­ருப்­தியை காண்­பிக்­கின்­றார். அதே நேரத்­தில் அவ­ரால் கூட்­ட­ணியை முறித்­துக் கொண்டு, மீண்­டும் லாலு பிர­சாத் யாதவ்­வின் ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­து­டன் கூட்­டணி அமைக்க முடி­யாது.

நிதிஷ் குமா­ரால் எந்த கட்­சி­யு­ட­னும் கூட்­டணி சேரா­மல் தனித்து போட்டி என்­றும் கூற முடி­யாது. அப்­படி போட்­டி­யிட்­டால், எதிர்­கட்­சி­க­ளின் வாக்­கு­கள் சிதறி, பா.ஜ., ஆட்­சிக்கு வரவே உத­வும். பீகா­ரில் பா.ஜ.வைச் சேர்ந்­த­வர் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­பார். காலப்­போக்­கில் ஐக்­கிய ஜனதா தளம் என்­பது பெய­ர­வில் சுருங்கி, வர­லாற்­றில் மட்­டுமே இடம் பெறும் கட்­சி­யாக தேய்ந்­து­வி­டும். ஒடி­சா­வில் நவீன் பட்­நா­யக் போல், பீகா­ரில் நிதிஷ் குமா­ரால் தனித்து போட்­டி­யிட இய­லாது. அவர் இது­வரை கூட்­ட­ணி­யின் பலத்­தால் முத­ல­மைச்­ச­ராக ஆகி­யுள்­ளார். அவர் சார்ந்­துள்ள ஜாதி மக்­க­ளும் குறை­வான எண்­ணிக்­கை­யி­லேயே உள்­ள­னர். கட்சி தொண்­டர்­க­ளும் இல்லை.

நிதிஷ் குமா­ரின் மிகப் பெரிய பலம், அவர் மீது எவ்­வித குற்­றச்­சாட்­டும் இல்லை என்­பதே. சமீ­பத்­தில் முளை காய்ச்­சல் கார­ண­மாக 150க்கும் மேற்­பட்ட அப்­பாவி குழந்­தை­கள் பலி­யாகி இருப்­பது, பீகார் அரசு நிர்­வா­கம் எந்த அள­வுக்கு சீர்­கு­லைந்­துள்­ளது என்­பதை எடுத்­துக் காட்­டு­வ­தாக உள்­ளது. இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து முதல்­வர் நிதிஷ் குமா­ரின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போ­துள்ள இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு லாலு பிர­சாத் யாதவ்­வின் குண்­டர்­கள் ராஜ்­ஜி­யம் பற்றி தெரிய வாய்ப்­பில்லை. இத­னால் அவர்­க­ளால் லாலு ஆட்­சி­யை­யும், நிதிஷ் குமார் ஆட்­சி­யை­யும் ஒப்­பிட்டு பார்க்க முடி­யாது.

லாலு பிர­சாத் யாதவ்­வின் குண்­டர் ராஜ்­ஜிய ஆட்­சி­யின் போது, நிதிஷ் குமா­ரால் சிறப்­பான நிர்­வா­கத்தை கொடுக்க முடி­யும் என்று கரு­தப்­பட்­டது. அவர் சிறப்­பான முறை­யில் ஆட்சி செய்­கின்­றார் என்ற தோற்­றத்தை உரு­வாக்­கிக் கொண்­டார்.

ஆனால் இப்­போது அவர் மேல் உள்ள நம்­பிக்கை சிதைந்து போயுள்­ளது. இளம் தலை­மு­றை­யி­னர், வேலை­யில்­லாத இளை­ஞர்­கள் போன்­றோர் ஆட்சி மாற்­றம் என்­ப­தற்கு இல­கு­வாக இரை­யா­கி­வி­டு­வார்­கள். இது போன்ற நிலை­யில் நிதிஷ் குமா­ருக்கு பா.ஜ,வின் ஆத­ரவு கரம் தேவை.

சட்­ட­சபை தேர்­தல் தொகுதி பங்­கீட்­டின் போது, கூட்­டணி கட்­சி­க­ளான பார­திய ஜனதா, லோக்­ஜ­ன­சக்தி ஆகி­யவை அதிக இடங்­களை கேட்டு நெருக்­கடி தரு­வார்­கள். இரண்டு கட்­சி­க­ளுக்­கும் குறை­வான தொகு­தி­களே கொடுக்க முடி­யும் என்று நிதிஷ் குமார் வீம்­பாக இருந்­தால், அவர் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யே­றும் நிலை உரு­வா­கும். அப்­படி செய்­வது தற்­கொ­லைக்கு சம­மா­னது. எப்­படி இருந்­தா­லும் பலன் அடை­யப்­போ­வது பார­திய ஜன­தாவே. இந்த நெருக்­க­டியை நிதிஷ் குமார் எப்­படி சமா­ளிக்­கப் போகின்­றார்?

நன்றி: தி பிரிண்ட் இணை­ய­த­ளத்­தில் சிவம் விஜி எழு­திய கட்­டு­ரை­யின் உத­வி­யு­டன்.