சரியும் செல்வாக்கு

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

பீகா­ரில் சென்ற லோக்­சபா தேர்­த­லில் காங்­கி­ரஸ், ராஷ்­டி­ரிய ஜனதா தளம், ராஷ்­டி­ரிய லோக் சமந்தா, விகா­சில் இன்­சான், இந்­துஸ்­தான் மோர்ச்சா ஆகிய கட்­சி­கள் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன.  இந்த கூட்­ட­ணி­யில் லாலு பிர­சாத் யாதவ்­வின் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் 20 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்­டது. ஒரு தொகு­தி­யில் கூட வெற்றி பெற­வில்லை. படு தோல்வி அடைந்­துள்­ளது. 9 சட்­ட­மன்ற தொகு­தி­யில் மட்­டுமே அதிக வாக்­கு­களை வாங்­கி­யுள்­ளது. காங்­கி­ரஸ் 9 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு ஒரு தொகு­தி­யில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. மற்ற எந்த கட்­சி­யும் வெற்றி பெற­வில்லை.

 கால்­நடை தீவன ஊழல் வழக்­கில் லாலு பிர­சாத் யாதவ் சிறை­யில் உள்­ளார். அவ­ரது அர­சி­யல் வாரி­சாக அறி­வித்த இரண்­டா­வது மகன் தேஜஸ்வி யாதவ், கட்­சியை வழி­ந­டத்­திக் கொண்­டுள்­ளார். ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தின் அடித்­த­ள­மாக இருந்த யாதவ் சமூ­கத்­தின் பல­மான ஆத­ரவு, சரிந்து கொண்டு வரு­வது தெரி­கி­றது.

இனி லாலு பிர­சாத் யாதவ் கட்சி, தனி­யாக நின்று ஆட்­சிக்கு வர வாய்ப்­பில்லை. கூட்­டணி சேர்ந்­தால் மட்­டுமே வாய்ப்பு உண்டு என, லாலு பிர­சாத் யாதவ்­வின் தீவிர ஆத­ர­வா­ளர் என்று கூறிக் கொள்­ளும், லாரி போக்­கு­வ­ரத்து தொழி­லில் ஈடு­பட்­டுள்ள அனில் யாதவ் (50) கூறு­கின்­றார்.  

அனில் யாதவ் மனீர் என்ற சட்­ட­மன்ற தொகு­தி­யில் வசிக்­கின்­றார். இந்த மனீர் சட்­ட­மன்ற தொகுதி, பாடா­லி­புத்­தி­ரம் லோக்­சபா தொகு­திக்கு உட்­பட்­டது. சென்ற லோக்­சபா தேர்­த­லில் பாடா­லி­புத்­தி­ரம் தொகு­தி­யில் லாலு பிர­சாத் யாதவ் மூத்த மகள் மிசா பாரதி போட்­டி­யிட்­டார். மிசா பாரதி இரண்­டா­வது முறை­யாக பா.ஜ.,வைச் சேர்ந்த ராம் கிரு­பால் யாதவ்­வி­டம் தோல்வி அடைந்­தார். பீகா­ரில் உள்ள 243 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளில், லோக்­சபா தேர்­த­லில் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் 9 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளில் மட்­டுமே அதிக வாக்­கு­களை வாங்­கி­யி­ருந்­தது. அதில் மனீர் சட்­ட­மன்ற தொகு­தி­யும் ஒன்று.

வரும் சட்­ட­மன்ற தேர்­த­லில் மனீர் தொகு­தி­யில் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் நிச்­ச­யம் வெற்றி பெறும். இந்த தொகு­தி­யின் மக்­கள் தொகை­யில் 80 சத­வி­கி­தம் யாதவ் சமூ­கத்­தி­னரே என்று கூறு­கின்­றார் அனில் யாதவ். 2014 லோக்­சபா தேர்­த­லின் போது, மனீர் சட்­ட­மன்ற தொகு­தி­யில், இரண்­டா­வ­தாக வந்த வேட்­பா­ள­ரை­விட, ராஷ்­டி­ரிய ஜனதா தள வேட்­பா­ளர் 16 ஆயி­ரம் வாக்­கு­கள் அதி­கம் வாங்­கி­யி­ருந்­தார். இது சென்ற லோக்­சபா (2019) தேர்­த­லில் எட்­டா­யி­ர­மாக குறைந்­து­விட்­டது. இதை சரிக்­கட்ட யாதவ்­கள் வேறு வழியை தேட வேண்­டும். இந்த தேர்­த­லில் சிஎஸ்­டி­எஸ்–­­லோக்­நி­தி­யின் கருத்து கணிப்­பில் இந்த லோக்­சபா தேர்­த­லில் 55 சத­வி­கி­தம் யாதவ் சமூ­கத்­தி­னர் ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­திற்கு வாக்­க­ளித்­துள்­ள­னர். சென்ற லோக்­சபா தேர்­த­லில் 64 சத­வி­கி­தம் வாக்­க­ளித்து இருந்­த­னர் என்று கூறி­யி­ருந்­தது.

தற்­போது லாலு பிர­சாத் சிறை­யில் இருப்­ப­து­டன், அவர் சுக­வீ­ன­மா­க­வும் உள்­ளார். அவ­ரால் முன்பு போல் யாதவ் சமூ­கத்­தி­ன­ரின் வாக்­கு­களை கவர இய­லாது. அவ­ரது சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள், அவரை போல் அவ­ரது மகன் தேஜஸ்வி யாதவ், சமூ­கத்­தி­னரை கவர முடி­ய­வில்லை என்­கின்­ற­னர். “லாலு பிர­சாத் யாதவ்­விற்கு இருந்த பல­மான ஆத­ரவு, அவ­ரது மக­னுக்கு யாதவ் சமூ­கத்­தின் இளை­ஞர்­கள் மத்­தி­யில் இல்லை. அவர்­களை தேஜஸ்வி யாதவ் கவ­ர­வில்லை. இந்த இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு நரேந்­திர மோடி­யின் தேசி­யம் கவர்ச்­சி­யாக உள்­ளது” என்­கின்­றார் விவ­சா­யி­யான ஜிதேந்­தர் யாதவ். இவர் மனீர் தொகு­தி­யைச் சேர்ந்­த­வர். தனது குடும்­பத்­தைச் சேர்ந்த இளம் தலை­மு­றை­யி­னர் தேர்­த­லில் ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தின் சின்­ன­மான லாந்­தர் விளக்­குக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. தாம­ரைக்கே வாக்­க­ளித்­துள்­ள­னர் என்­கின்­றார்.

“யாதவ் சமூ­கத்­தி­னர் மத்­தி­யில் லாலு பிர­சாத்­திற்கு செல்­வாக்கு உள்­ளது. அவர் சிறை­யில் இருந்து வெளியே வந்­தால், கட்­சி­யின் செல்­வாக்கு குறை­யாது. சில தொகு­தி­க­ளில் வெற்றி பெறும். அவ­ரது ஆத­ர­வா­ளர்­களை ஊக்­கு­வித்து வாக்­க­ளிக்­க­வைப்­பார். இவ்­வாறு செய்ய அவ­ரது மகன், மக­ளால் முடி­யாது என்று ஜிதேந்­தர் யாதவ் கூறு­கின்­றார்.    

லாலு பிர­சாத் யாதவ் குடும்­பத்­தின் சச்­ச­ர­வு­கள் பற்றி யாதவ் சமூ­கத்­தி­ன­ருக்கு தெரி­யும். இவர்­கள் மீது சிறி­த­ளவே நம்­பிக்­கை­யுள்­ளது. அவர்­கள் லாலு­வின் மூத்த மகன் தேஜ் பிர­தாப்பை பைத்­தி­யம் என்­கின்­ற­னர். மகள் மிசா பார­தியை பேரா­சை­காரி என்­கின்­ற­னர். “ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக மிசா பாரதி உள்­ளார். அவர் லோக்­சபா தேர்­த­லில் போட்­டி­யிட வேண்­டிய அவ­சி­யம் என்ன? அதற்கு பதி­லாக தகு­தி­யுள்ள மற்­ற­வ­ருக்கு போட்­டி­யிட வாய்ப்பு வழங்­கி­யி­ருக்­க­லாமே? என்று கேட்­கின்­றார் யாதவ் சமூ­கத்­தைச் சேர்ந்த மற்­றொ­ரு­வர்.

2013ல் இருந்து பா.ஜ., யாதவ் வாக்­கு­களை கவர வேண்­டும் என்ற முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது.  ஒரு முறை பொதுக்­கூட்­டத்­தில் நரேந்­திர மோடி பேசும் போது, நான் துவா­ர­கை­யைச் சேர்ந்­த­வன். எனவே யாதவ் சமூ­கத்­தி­னர் எனக்கு நெருங்­கி­ய­வர்­கள் என்று கூறி­னார். லாலு பிர­சாத் யாதவ் களத்­தில் இருந்த வரை­யில், பா.ஜ., அதன் கூட்­டணி கட்­சி­க­ளின் முயற்சி பலிக்­க­வில்லை. இப்­போது லாலு பிர­சாத் களத்­தில் இல்லை. எனவே வரும் சட்­ட­சபை தேர்­த­லில் கணி­ச­மான யாதவ் சமூ­கத்­தின் வாக்­கு­களை கவர்ந்­து­வி­ட­லாம் என்று பா.ஜ., கரு­து­கி­றது. பீகார் மாநில பா.ஜ., தலை­வர் நித்­தி­யா­னந்தா ராய், யாதவ் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர். இவர் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவின் இலா­கா­வில் உள்­துறை இணை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். யாதவ் சமூ­கத்­தி­ன­ரின் வாக்­கு­களை கவர,வரும் சட்­ட­மன்ற தேர்­த­லில் நித்­தி­யா­னந்தா ராய் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட வாய்ப்பு உள்­ளது.

ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தைச் சேர்ந்த ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர், “எங்­கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கட்­சியை விட்டு வில­கா­மல் இருப்­ப­தற்கு கார­ணம், அவர்­க­ளுக்கு பா.ஜ.வின் தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­டணி சார்­பில் மீண்­டும் போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­கும் என்­பது நிச்­ச­ய­மில்லை என்­ப­தால், வில­கா­மல் உள்­ள­னர்.

கட்­சி­யின் மூத்த தலை­வர் ரகு­வா­னாஸ் பிர­சாத் சிங் வெளிப்­ப­டை­யாக தேஜஸ்வி யாதவ் அர­சி­யல் தலை­வர் இல்லை. அவர் சட்­ட­சபை எதிர்­கட்சி தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு கார­ணம், அவ­ரது தந்­தையே என்று பகி­ரங்­க­மாக கூறி­யுள்­ளதை சுட்­டிக் காட்­டு­கின்­றார்”.

1990ல் பீகார் முதல்­வ­ராக லாலு பிர­சாத் யாதவ் பத­வி­யேற்ற போது இருந்த சமூக நிலை இப்­போது பீகா­ரில் இல்லை. தேஜஸ்­வி­யா­தவ், அவர்­க­ளின் ஆத­ரவு சக்­தி­க­ளான யாதவ் சமூ­கத்­தி­னர் மத்­தி­யில் செல்­வாக்கு இழந்து வரு­வது, பீகா­ரில் பா.ஜ.,வுக்கு சாத­க­மாக புதிய சமூக அணி சேர்க்­கைக்கு உத­வி­யாக மாறி­யுள்­ளது.  

 நன்றி: தி பிரிண்ட் இணை­ய­த­ளத்­தில் தீபக் மிஸ்ரா எழு­திய கட்­டு­ரை­யின் சுருக்­கம்.

Äö¥D
ØÄ_kVÂz