பா.ஜ., ஆட்சியில் நிதி முறைகேடு: சத்திஸ்கர் முதல்வர்

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

சத்­திஸ்­கர் மாநி­லத்­தில் உள்ள 11 லோக்­சபா தொகு­தி­க­ளில், இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டுமே காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றுள்­ளது. லோக்­சபா தேர்­த­லுக்கு சில மாதங்­க­ளுக்கு முன் நடை­பெற்ற இந்த மாநில சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் மொத்­த­முள்ள 90 தொகு­தி­க­ளில் 68 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தது. முத­ல­மைச்­ச­ராக பூபேஷ் பாகல் பத­வி­யேற்­றார். இவ­ருக்கு மாநில நிதி நிலையை சமா­ளிப்­பது முதல், மாநில அதி­கார வர்க்­கத்­தில் முன்­னாள் முதல்­வர் ராமன் சிங் ஏற்­ப­டுத்­திய தாக்­கம், மாவோ­யிஸ்­டு­களை ஒடுக்­கு­வது, அதானி குழு­மம் சுரங்­கம் அமைப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரும் பழங்­குடி மக்­களை சமா­ளிப்­பது என பல பிரச்­னை­கள் உள்­ளன. போர்க்­கு­ணம் மிக்­க­வர் என கரு­தப்­ப­டும் பூபேஷ் பாகல், காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்­தி­யின் கவ­னத்தை ஈர்த்­த­வர். இந்­தியா டுடே வார இதழ் குழு­மத்­தின் ஆசி­ரி­யர் குழு இயக்­கு­நர் ராஜ் செங்­கப்பா, இந்தி பதிப்பு ஆசி­ரி­யர் அனுஸ்­மன் திவாரி ஆகி­யோ­ருக்கு சத்­திஸ்­கர் முதல்­வர் பூபேஷ் பாகல் அளித்த பேட்­டி­யின் தமி­ழாக்­கத்­தின் சுருக்­கம்.

கேள்வி: சட்­ட­சபை தேர்­த­லில் மாபெ­றும் வெற்றி பெற்ற சில மாதங்­க­ளில் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் தோல்வி அடைந்து பற்றி என்ன கூறு­கின்­றீர்­கள்?

பதில்: சட்­ட­சபை தேர்­த­லுக்கு பிறகு நாங்­கள் விவ­சா­யி­கள், பழங்­கு­டி­மக்­கள், சாமா­னிய மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற தொடங்­கி­னோம். அதே நேரத்­தில் சட்­ட­சபை தேர்­த­லுக்­கு­பி­றகு பா.ஜ,வில் உள்­கட்சி சண்டை தொடங்­கி­யது. தொண்­டர்­கள் சோர்ந்து போனார்­கள். லோக்­சபா பிர­சா­ரத்­தின் போது பா.ஜ., எங்­கும் இல்லை. பல அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் காங்­கி­ரஸ் 10 முதல் 11 தொகு­தி­க­ளில் வெற்றி பெறும் என்று கணித்­த­னர். ஆனால் முடி­வு­கள் வந்த போது, எதிர்­பா­ரா­த­வி­த­மாக இருந்­தது. இங்­குள்­ள­வர்­கள் யாருமே இதை எதிர்­பார்க்­க­வில்லை.

கேள்வி: உங்­கள் தோல்­விக்கு கார­ணம் என்ன?

பதில்: இதற்கு கார­ணம் புரிந்து கொள்­வ­தற்கு அப்­பாற்­பட்­டது. சர்­ஜி­கல் தாக்­கு­த­லுக்கு பிறகு, தேசிய பற்று அதி­க­ரித்­து­விட்­டது என்ற கூறி­னால், காங்­கி­ரஸ் அல்­லாத மற்ற கட்­சி­கள் பா.ஜ.,வை எதிர்த்து நின்ற ஆந்­திரா, ஒடிசா, தமிழ்­நாடு, மேற்கு வங்­கம் போன்ற மாநி­லங்­க­ளில் ஏன் எந்த தாக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை. இதற்கு கார­ணம் ஏதோ உள்­ளது. எங்­க­ளால் எதை­யும் கூற இய­லாது. இதற்கு கார­ணம் வாக்­கு­ப­திவு இயந்­தி­ரம் என்­றால், இது மிக ஆபத்­தா­னது.

கேள்வி: நீங்­கள் கூறும் குற்­றச்­சாட்டு கடு­மை­யா­ன­தாக உள்­ளதே?

பதில்: வாக்­கு­ப­திவு இயந்­தி­ரத்­தில் என்ன இருக்­கின்­றது என்­பது வாக்­கா­ளர்­க­ளுக்கு தெரி­யாது. வாக்கு சீட்டு என்­றால் அதில் எல்லா விப­ர­மும் இருக்­கும். படித்­த­வர்­க­ளுக்கு கூட வாக்­கு­ப­திவு இயந்­தி­ரத்­தில் உள்ள சூட்­ச­மங்­கள் பற்றி தெரி­யாது. சாமா­னிய மக்­க­ளுக்கு எப்­படி தெரி­யும்.

கேள்வி: நீங்­கள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. இதன் எதி­ரொ­லி­யாக லோக்­சபா தேர்­தல் முடி­வு­கள் அமைந்­துள்­ள­தாக கூறு­கின்­றார்­களே?

பதில்: இது தவறு. நாங்­கள் குவின்­டால் நெல்­லுக்கு குறைந்­த­பட்ச ஆதார விலை ரூ.1,750 ஐ விட உயர்த்தி ரூ.2,500 கொடுத்­தோம். கூட்­டு­றவு சங்­கங்­க­ளில் விவ­சா­யி­கள் வாங்­கிய கடனை தள்­ளு­படி செய்­தோம். இதை­விட வேறு என்ன செய்ய வேண்­டும். மற்ற மாநி­லங்­க­ளில் எல்­லாம் வாக­னங்­க­ளின் விற்­பனை சரி­யும் சந்­தர்ப்­பத்­தில் சத்­திஸ்­க­ரில் ஜன­வரி முதல் மே வரை இதன் விற்­பனை 26 சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது. தங்க நகை­கள், வெள்ளி பொருட்­கள் வாங்­கு­வது, வீடு கட்­டு­வது, ஏசி, கூலர் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது. மக்­க­ளி­டம் பணம் இல்­லா­விட்­டால், இவை நடந்­தி­ருக்­காது.

கேள்வி: பிர­த­மர் நரேந்­திர மோடி லோக்­ச­பா­வுக்­கும், மாநில சட்­ட­ச­பை­க­ளுக்­கும் ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்த வேண்­டும் என்று கூறு­கின்­றார். இது பற்றி உங்­கள் கருத்து என்ன?

பதில்: இந்த வருட இறு­தி­யில் பல மாநி­லங்­க­ளில் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்த மாநி­லங்­க­ளில் அடுத்த  நான்கு வரு­டங்­க­ளுக்கு ஜனா­தி­பதி ஆட்சி அமல்­ப­டுத்த வேண்­டும் என்­கின்­றார்­களா? தேவை­யற்ற விஷ­யங்­களை பற்றி பிரச்னை கிளப்­பு­கின்­ற­னர். இதற்கு பதி­லாக மாநி­லங்­க­ளி­லும், மத்­தி­யி­லும் உள்ள பொரு­ளா­தார சிக்­கல்­களை பற்றி பேச­லாமே. ஒரே நாடு ஒரே தேர்­தல் என்­பது பா.ஜ,வின் பழைய கொள்கை. இதை அவர்­கள் முத­லில் ஆட்­சி­யில் வந்த போது ஏன் செய்­ய­வில்லை.

கேள்வி: சத்­திஸ்­கர் மாநி­லத்­திற்­காக, எதற்கு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றீர்­கள்?

பதில்: சத்­திஸ்­கர் மாநி­லம் விவ­சா­யத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட மாநி­லம். இரண்டு பரு­வ­மழை காலங்­க­ளி­லும் மழை பொழி­கி­றது. ஆனால் பாச­னத்­திற்கு தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யாக உள்­ளது. மாநி­லத்­தின்  44 சத­வி­கி­தம் வரை வனப்­ப­கு­தி­கள். இந்த பகு­தி­க­ளில் நீர் பாசன வச­தியை ஏற்­ப­டுத்­து­வது சிக்­க­லாக உள்­ளது. ஏனெ­னில் அணை­களை கட்­டு­வ­தற்­கும், மின்­வ­ழித்­த­டத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் வன சட்­டப்­படி அனு­மதி வாங்­க­வேண்­டி­ய­துள்­ளது. இந்த பிரச்­னைக்கு தீர்­வு­காண முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்­றோம்.

கேள்வி: முந்­தைய ராமன்­சிங் அர­சை­விட, உங்­கள் அரசு எப்­படி வேறு­பட்­டது?

பதில்: டாக்­டர். ராமன் சிங் தலை­மை­யி­லான பதி­னைந்து வருட ஆட்­சி­யில் ஏழை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. ஊட்­டச்­சத்து குறை­பாடு அதி­க­ரித்­தது. கல்­வி­யின் தரம் சரிந்­தது. மாவோ­யிஸ்­டு­கள் செல்­வாக்­குள்ள பஸ்­டார் பகு­தி­க­ளில் பள்­ளிக்­கூ­டங்­கள் மூடப்­பட்­டன. ராமன் சிங் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு மாவோ­யிஸ்­டு­க­ளின் செல்­வாக்கு 4 தாலுக்­காக்­க­ளில் மட்­டுமே இருந்­சது. இது 14 மாவட்­டங்­க­ளுக்கு விரி­வ­டைந்­தது. இதில் ராமன் சிங் சொந்த மாவட்­ட­மும் அடங்­கும். நான் விவ­சா­யி­கள், பழங்­குடி மக்­கள் நலன், ஊட்­டச்­சத்து குறை­பாடு, கல்வி துறையை சீர்­ப­டுத்­து­வது ஆகி­ய­வை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்­றேன்.

ராமன் சிங் ஆட்­சி­யில் நிதி முறை­கேடு நடந்­துள்­ளது. தாது சுரங்­கங்­க­ளால் பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­க­ளுக்­கான லாப நோக்­க­மில்­லாத, “மாவட்ட தாது­பொ­ருட்­கள் அறக்­கட்­டளை நிதி” (District Mineral Foundation—DMF) தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிதியை லிப்ட் பொருத்­து­வ­தற்­கும், விமான ஓடு­பாதை அமைக்­க­வும் முறை­கே­டாக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். கடந்த பதி­னைந்து வரு­டங்­க­ளில் கமி­ஷன் வாங்­கு­வது மட்­டுமே நடந்­துள்­ளது. சத்­திஸ்­கர் மாநி­லத்­தில் நிதி பற்­றாக்­கு­றையே இல்லை. இருப்­பி­னும் முந்­தைய அரசு ரூ.50 ஆயி­ரம் கோடி கடன் வாங்­கி­யுள்­ளது. புதிய தலை­ந­க­ருக்­காக ரூ.6 ஆயி­ரம் கோடி செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இதற்­கான எவ்­வித  அடை­யா­ள­மும் இல்லை. ராய்ப்­பூ­ரில் ‘ஸ்கைவாக்’ அமைத்­துள்­ள­னர். இதை யாரும் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. இவ்­வாறு நிதி முறை­கேடு நடந்­துள்­ளது. இவற்றை சரிப்­ப­டுத்த சில காலம் ஆகும். நான் அதி­கா­ரி­கள் கூட்­டத்­தில், “இவ்­வ­ளவு கால­மும் நீங்­கள் இப்­படி செய்து கொண்டு இருந்­துள்­ளீர்­கள். ஆனால் இதற்கு எவ்­வித பல­னும் இல்லை. இனி எல்­லா­வி­தத்­தி­லும் மாற வேண்­டும். மனம் இருந்­தால், மார்க்­க­முண்டு. முடி­யாது என்­பது எது­வும் இல்லை. நீங்­கள் படிப்­ப­டி­யாக மாற்­றம் அடை­வதை பாருங்­கள்” என்று கூறி­யுள்­ளேன்.

கேள்வி: முந்­தைய அரசு அமல்­ப­டுத்­திய ‘நயா ரெய்ப்­பூர்’ (புதிய ரெய்ப்­பூர்) திட்­டம் தொட­ருமா?

பதில்: ஏற்­க­னவை ரூ.6 ஆயி­ரம் கோடி செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் இதை தொடர்­வதை தவிர வேறு வழி­யில்லை.

கேள்வி: தண்­டி­வாடா பகு­தி­யில் அதானி குழு­மத்­திற்கு நிலக்­கரி சுரங்­கம் வெட்ட அனு­மதி வழங்கி இருப்­பது சர்ச்­சயை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு பழங்­குடி மக்­கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­ற­னர். இதில் உங்­கள் நிலை என்ன?

பதில்: அதானி குழு­மத்­திற்கு எந்த சுரங்­க­மும் வெட்ட அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கின்­றேன். முந்­தையை காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி ஆட்­சி­யில் நிலக்­கரி சுரங்க ஒதுக்­கீட்­டில் ரூ.1 லட்­சத்து 86 ஆயி­ரம் கோடி ஊழல் நடை­பெற்­ற­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது. அதன் பிறகு நிலக்­கரி சுரங்­கங்­கள் ஏலம் விட தொடங்­கப்­பட்­டது. இதன் மூலம் வெட்டி எடுக்­கப்­ப­டும் ஒரு டன் நிலக்­க­ரிக்கு மாநி­லங்­க­ளுக்கு ராயல்­டி­யாக ரூ.2,300ல் இருந்து ரூ.3,200 வரை கொடுக்க வேண்­டும். பிறகு இது நிறுத்­தப்­பட்­டது. அதன் பிறகு மாநி­லங்­க­ளுக்­கும், மாநில மின்­சார வாரி­யங்­க­ளுக்­கும் நிலக்­கரி சுரங்­கங்­கள் ஒதுக்­கப்­பட்­டன. இவ்­வாறு சத்­திஸ்­கர், ராஜஸ்­தான், குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­க­ளுக்கு நிலக்­கரி சுரங்­கங்­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இதை தொடர்ந்து நிலக்­கரி வெட்டி எடுக்க டெண்­டர் விடு­வது ஆரம்­பித்­தது. சுரங்­கம் தோண்டி கனிம வளங்­களை வெட்டி எடுக்­கும் நிறு­வ­னங்­கள் உரு­வா­கின.

மத்­திய அர­சுக்கு சொந்­த­மான நேஷ­னல் மின­ரல் டெவ­லப்­மென்ட் கார்ப்­ப­ரே­ஷன், மாநில அர­சுக்கு சொந்­த­மான சத்­திஸ்­கர் மின­ரல் டெவ­லப்­மென்ட் கார்ப்­ப­ரே­ஷன் ஆகிய இரு நிறு­வ­னங்­க­ளின் கூட்டு நிறு­வ­னம் பாய்­லா­டிலா (Bailadila). இந்த நிறு­வ­னம் நிலக்­கரி சுரங்­கத்தை அமைத்து,நிலக்­கரி வெட்டி எடுக்க டெண்­டர் விட்­டது. அதானி குழு­மம் டெண்­ட­ரில் வெற்றி பெற்­றது. இதற்கு எதி­ராக போராட்­டங்­கள் தொடங்­கிய போது (ஜூன் 7), நாங்­கள் வனப்­ப­கு­தி­யில் மரங்­களை வெட்ட கூடாது என்று நிறுத்­தி­னோம். நாங்­கள் கிரா­ம­சபை கூட்­டங்­கள் பற்­றி­யும் பரி­சீ­லனை செய்­வ­தாக அறி­வித்­தோம். (சுரங்­கம் அமைக்க கிரா­ம­ச­பை­யின் அனு­மதி வேண்­டும்) இந்த நட­வ­டிக்­கை­க­ளால் போராட்­டம் விலக்­கிக் கொள்­ளப்­பட்­டது.

நான் பிர­த­ம­ருக்கு கடி­தம் மூல­மாக நிலக்­கரி சுரங்­கங்­களை மாநி­லங்­க­ளுக்­கும், மாநில மின்­வா­ரி­யங்­க­ளுக்­கும் ஒதுக்­கும் போது, அவர்­கள் வெட்டி எடுக்­கும் நிலக்­க­ரிக்கு ராயல்­டி­யாக எங்­க­ளுக்கு டன்­னுக்கு ரூ.100 மட்­டுமே கொடுக்­கின்­ற­னர். நிலக்­கரி சுரங்­கங்­களை ஏலத்­தில் விடும்­போது ராயல்­டி­யாக குறைந்­த­பட்­சம் டன்­னுக்கு ரூ.2,100 வரை கிடைக்­கின்­றது. நிலக்­கரி சுரங்­கங்­களை ஏலத்­திற்கு  விடா­மல், ஒதுக்­கு­வ­தால் அடுத்த முப்­பது வரு­டங்­க­ளில் சத்­திஸ்­கர் மாநி­லத்­திற்கு ரூ.9 லட்­சம் கோடி வரை இழப்பு ஏற்­ப­டும். நிலக்­கரி சுரங்­கங்­கள் ஒதுக்­கீடு செய்­வது தொடர்ந்­தால், குறைந்­த­பட்­சம் ராயல்­டியை டன்­னுக்கு ரூ.500 ஆக அதி­க­ரிக்க வேண்­டும். சுரங்­கம் வெட்­டு­வ­தால் வனப்­ப­குதி அழி­கின்­றது. சாலை­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. சுற்­றுச்­சூ­ழல் சீர்­கேட்­டால் உள்­ளூர் மக்­க­ளுக்கு நோய் வரு­கி­றது. அவர்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டு­கி­றது. இவற்றை ராயல்­டியை அதி­க­ரிப்­ப­தன் மூலம் சமப்­ப­டுத்த வேண்­டும் என்று தெரி­வித்­தேன். பிர­த­மரை நேரில் சந்­தித்த போதும்,இதையே வலி­யு­றுத்­தி­னேன்.

கேள்வி: முந்­தைய முதல்­வர் ராமன் சிங், மாவோ­யிஸ்­டு­களை கட்­டுப்­பாட்­டிற்­குள் வைத்­தி­ருந்­த­தாக கூறி­யுள்­ளாரே? நீங்­கள் மாவோ­யிஸ்­டு­களை சமா­ளிக்க என்ன திட்­டம் வைத்­துள்­ளீர்­கள்?

பதில்: முந்­தைய காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் நான்கு தாலு­காக்­க­ளில் மட்­டுமே மாவோ­யிஸ்­டு­க­ளின் செல்­வாக்கு இருந்­தது. தற்­போது 14 மாவட்­டங்­க­ளில் மாவோ­யிஸ்­டு­க­ளின் ஆதிக்­கம் உள்­ளது. பழங்­குடி மக்­கள் அவர்­க­ளது இருப்­பி­டங்­க­ளில் இருந்து விரப்­பட்டு, தின­சரி பிரச்­னை­களை எதிர் கொள்­ளும் இடங்­க­ளில் வாழ வேண்­டி­ய­துள்­ளது. முந்­தைய அர­சி­டம் மாவோ­யிஸ்­டு­க­ளின் ஆதிக்­கத்­தில் இருந்து, நமது படை­கள் மீட்ட பகு­தி­க­ளில் வளர்ச்சி அடை­வ­தற்­கான எவ்­வித கொள்­கை­க­ளும், திட்­டங்­க­ளும் இல்லை. நமது படை வீரர்­கள் மாவோ­யிஸ்­டு­க­ளின் ஆதிக்­கத்­தில் இருந்து மீட்ட கிரா­மங்­க­ளுக்­கும், இன்­னும் மாவோ­யிஸ்­டு­க­ளின் ஆதிக்­கத்­தில் உள்ள கிரா­மங்­க­ளுக்­கும் எவ்­வித வித்­தி­யா­ச­மும் இல்லை. பாது­காப்பு படை­கள் செல்­வ­தற்­கா­கவே சாலை­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. உள்­ளூர் மக்­கள் தங்­க­ளுக்­காக சாலை வசதி செய்­யப்­ப­டு­கி­றது என்று எண்ண வேண்­டும். நான் இரண்டு நாட்­கள் பஸ்­தா­ரில் இருந்­தேன். அங்கு பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், சமூக குழு உறுப்­பி­னர்­கள், பழங்­குடி மக்­களை சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னேன். அவர்­க­ளது ஆலோ­ச­னை­களை கேட்­டேன். நாங்­கள் எல்லா தரப்­பி­ன­ரை­யும் ஆலோ­சித்து முடிவு எடுக்­கின்­றோம்.

கேள்வி: நீங்­கள் மாவோ­யிஸ்டு பிரச்­னை­களை கையாள்­வ­தற்கு மத்­திய அர­சு­டன், குறிப்­பாக உள்­துறை அமைச்­ச­கத்­து­டன் ஒருங்­கி­னைந்து நட­வ­டிக்கை எடுக்­கின்­றீர்­களா?

பதில்: ஆம். நாங்­கள் சமீ­பத்­தில் மாவோ­யிஸ்­டு­கள் போன்­ற­வர்­க­ளால் பாதித்த மாவட்­டங்­க­ளுக்­காக ரூ.4,400 கோடி நிதி கேட்­டோம். ஆனால் மத்­திய அரசு ரூ.306 கோடி மட்­டும் கொடுத்­தது. இந்த பிரச்­னையை நிதி ஆயோக் கூட்­டத்­தி­லும் கூறி­னோம். உள்­துறை அமைச்­ச­ரி­ட­மும் கூறி­னோம். அவர் ஜூலை மாதம் இட­து­சாரி தீவி­ர­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளின் முத­ல­மைச்­சர்­கள், டி.ஜி.பி.,க்களின் கூட்­டத்தை கூட்­டு­வ­தாக கூறி­யுள்­ளார்.

கேள்வி: தற்­போ­தைய மத்­திய அர­சு­டன், உங்­க­ளது உறவு எப்­படி உள்­ளது?

பதில்: நிதி ஆயோக் கூட்­டத்­தி­லும், நிதி அமைச்­சர் கூட்­டிய கூட்­டத்­தி­லும் நான், மாநி­லங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டும் நிதி அதி­க­ரிக்க வேண்­டும். மத்­திய அர­சுக்­கான நிதியை குறைத்­துக் கொள்ள வேண்­டும் என்று கூறி­னேன். மத்­திய அர­சின் திட்­டங்­க­ளான பிர­தான் மந்­திரி சதக் யோஜனா அல்­லது சுவாத் பாரத் போன்ற திட்­டங்­க­ளுக்­கான முழு நிதி­யை­யும் மத்­திய அரசு வழங்க வேண்­டும் என்று எல்லா முதல்­வர்­க­ளும் கூறி­னோம். மாநில அர­சு­க­ளின் நிதி சுமையை குறைக்க வேண்­டும். இந்த நிதி சுமை­யால் தான் மாநில அர­சு­கள் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற முடி­ய­வில்லை.

இவ்­வாறு பேட்­டி­யின் போது சத்­திஸ்­கர் முதல்­வர் பூபேஷ் பாகல் கூறி­னார்.

நன்றி: இந்­தியா டுடே வார இதழ்.