ஆன்மிக கோயில்கள்: நாக சர்ப்ப தோஷம் நீக்கும் வயலூர் சுப்பிரமணிய சுவாமி

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

தல வர­லாறு:  

திருச்சி குமார வயலூரில் வேட்­டை­யாட வந்த சோழ மன்­னன் ஒரு­வன் தண்­ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து இப்­போது கோயில் இருக்­கும் இடத்­துக்கு வரும் போது மூன்று கிளை­க­ளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டு, தாகம் தீர்க்க எண்ணி அதனை ஒடித்த போது அதி­லி­ருந்து ரத்­தம் கசிந்­தது. அவ்­வி­டத்தை தோண்­டிப்­பார்த்த போது சிவ­லிங்­கம் இருந்­த­தா­க­வும் பின்­னர் கோயில் எழுப்­பி­ய­தா­க­வும் கர்­ண­ ப­ரம்­பரை செய்தி கூறு­கின்­றது.

தல­ பெ­ருமை:    

அன்­னை­யும் பிதா­வும் முன்­னறி தெய்­வம்: இந்த வய­லூ­ரில் குடி­கொண்டு இருக்­கும் முரு­கப்­பெ­ரு­மான் ஒரு உண்­மையை விளக்­கு­கி­றார். முரு­கப்­பெ­ரு­மான் தந்­தை­யை­யும் தாயை­யும் முன்­னி­றுத்தி ‘அன்­னை­யும் பிதா­வும் முன்­னறி தெய்­வம்’ என்­பதை நமக்கு புகட்ட அன்­றா­டம் தாய், தந்­தை­யர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பால­க­ராய் காட்சி தரு­கி­றார்.

அரு­ண­கிரிநாதர் : திரு­வண்­ணா­ம­லை­யில் முரு­கப்­பெ­ரு­மா­னால் காப்­பாற்­றப்­பட்ட அரு­ண­கி­ரி­நா­தர் ‘முத்­தைத் திரு’ பாடி­ய­ பின்பு வய­லூ­ருக்கு வா என்று முரு­கன் செல்ல, அதன்­படி அரு­ண­கி­ரி­யார் இங்கு வந்­துள்­ளார். இங்­குள்ள பொய்­யா­ க­ண­பதிதான் அரு­ண­கி­ரி­யா­ருக்கு அருள் தந்­த­வர் என்று செல்­லப் ப­டு­கி­றது. இங்­கு­தான் அரு­ண­கிரிநாதர் ‘திருப்­பு­கழ்’ பாடும் ஆற்­ற­லை­யும் அறி­வை­யும் பெற்­றார். இத் த­லத்து முரு­கனே அரு­ண­கிரிநாத­ருக்கு நாவில் ‘ஓம்’ என்ற பிர­ணவ மந்­தி­ரத்தை எழுதி திருப்­பு­கழை சர­ள­மாக பாட அருள் செய்­தார். அத்­த­கைய பேரும் சிறப்­பும் கொண்ட முரு­கன் தலம்.

வாரி­யார் சுவா­மி­கள், ‘‘நான் அன்­றா­டம் வழி­பட்டு வரும் வய­லூர் முரு­கப்­பெ­ரு­மான் திரு­வ­டி­களை வணங்கி சொற்­பொ­ழிவை தொடங்­கு­கி­றேன்’’ என்று முன்­னுரை வழங்­கிய பின்பே சொற்­பொ­ழிவை தொடங்­கு­வார். இத் திருக்­கோ­யில் பெரு­ம­ளவு புகழ்­பெற செய்­த­தற்­கான அத்­தனை பெரு­மை­யும் வாரி­யா­ருக்கே சாரும்.

சிவன் கோயி­லில் முரு­க­னுக்கு முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தலம். மூலஸ்­தா­னத்­தில் முரு­கன் மயில் வடக்கு பக்­கம் பார்த்து இருக்­கி­றது. இதற்கு ‘தேவ­ம­யில்’ என்று பெயர். ஆதி­நா­யகி ஏனைய தலங்­க­ளில் வடக்கு முகம் பார்த்தே இருப்­பாள். இங்கு மட்­டும் தென்­மு­கம் பார்த்து இருப்­பது அபூர்­வ­மா­னது.

ஏனைய தலங்­க­ளில் முரு­கப்­பெ­ரு­மான் தாய், தந்­தை­யரை தனித்து நின்று பூஜை செய்­வார். ஆனால், தெய்வ குஞ்­சரி வள்­ளி­யோடு சேர்ந்து பூஜை செய்­கின்ற தனிச்­சி­றப்பு வய­லூர் தலத்­திற்கு உண்டு. வய­லூ­ரில் முரு­கக்கட­வுள் தனது வேலி­னால் தடா­கம் உரு­வாக்கி அம்மை அப்­பரை வழி­பட்­டார். நட­ரா­ஜர் சூரத்­தாண்­டவ மூர்த்­தி­யாக உள்­ளார். அரு­ண­கிரிநாத­ருக்கு கல்­யாண கோலத்­தில் குமா­ர­ராக காட்சி தந்­த­தால் தடை­பட்ட கல்­யா­ணங்­கள் நடை­பெ­றும்.

பிரார்த்­தனை :

 நாக சர்ப்ப தோஷம் உள்­ள­வர்­கள் செவ்­வாய் அன்று திருக்­கு­ளத்­தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முரு­கனை தரி­சித்­தால் திரு­ம­ணத்­தடை நீங்கி சுப காரி­யம் நடை­பெ­றும். இத்­த­லம் தமிழ்­நாட்­டி­லுள்ள பிரார்த்­த­னைத் தலங்­க­ளில் மேன்மை வாய்ந்­தது. நோய் நீக்­கம், துன்ப நீக்­கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்­வம், விவ­சா­யம் செழிப்பு ஆகி­ய­வற்­றைப் பெற இத்­த­லத்­தில் முரு­க­னி­டம் வேண்­டு­கி­றார்­கள்.

நேர்த்­திக்­க­டன்:  

முடி இறக்கி காது குத்­தல், காவடி எடுத்­தல், பால்கு­டம் எடுத்­தல், சஷ்டி விர­தம் இருத்­தல், உடற்­பிணி தீர ஆண்­கள் அங்­க­பி­ர­தட்­ச­ணமும், பெண்­கள் கும்­பி­டு­தண்­ட­மும், அடிப்­பி­ர­தட்­ச­ண­மும் நிறை­வேற்­று­கின்­ற­னர். தவிர சண்­மு­கார்ச்­சனை, சண்­முக வேள்வி ஆகி­யவை செய்­கி­றார்­கள். கார்த்­திகை விர­தம் இருத்­தல், ஏழை­க­ளுக்கு அன்­ன­தா­னம் செய்­தல், திருப்­ப­ணிக்கு பொரு­ளு­தவி செய்­தல் ஆகி­யவை இத்­த­லத்­துக்கு வரு­­பவர்­கள் இறை­வ­னுக்கு செய்­ய­லாம்.

திரு­விழா:

வைகாசி விசா­கம் - 12 நாட்­கள் – -10 ஆயி­ரம் பக்­தர்­கள் கூடு­வர். கந்த சஷ்­டி திரு­விழா (சூர­சம்ஹா­ரம்) -7 நாட்­கள், - ஆயி­ரம் பக்­தர்­கள் கூடு­வர். பங்­குனி உத்­தி­ரம் - 4 நாள் திரு­விழா, - 25 ஆயி­ரம் பக்­தர்­கள் கூடு­வர். தைப் பூசம் - 3 நாள் –- 10 ஆயி­ரம் பக்­தர்­கள் கூடு­வர்.      

திறக்­கும் நேரம்:

காலை 6 மதி­யம் – 1 மணி, மாலை 3.30 – இரவு 9 மணி.    

முக­வரி: சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யில், குமா­ர­வ­ய­லூர்- 620102. திருச்சி மாவட்­டம்.