நீண்ட ஆயுளுக்கு பரிகாரம் என்ன? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

 தற்­கா­லத்­தில் அனை­வ­ரும் இள­மை­யில் பணத்­தின் பின் ஓடிக் கொண்டு தன் உடல் ஆரோக்­கி­யத்­தின், மேல் கவ­னம் வைக்­கா­மல் ஆரோக்­கி­யத்தை இழந்­து­வி­டு­கின்­ற­னர். பின்பு, வயது ஆக ஆக தன் உடல் ஆரோக்­கி­யத்­திற்­காக மருத்­து­வத்­திற்கு அதிக செலவு செய்­கின்­ற­னர். அதா­வது, கார் இருக்கு, பங்­களா இருக்கு, புகழ் இருக்கு, ஆனால் அதை அனு­ப­விக்க நாம் இல்லை என்­றால் எப்­படி இருக்­கும்உ பொது­வாக,  அனைத்து செல்­வங்­கள் ஒரு­வ­ருக்கு இருந்­தா­லும் அதை அனு­ப­விக்க வேண்­டு­மா­னால் அதற்கு முக்­கி­ய­மாக தீர்க்­கா­யுள் தேவைப்­ப­டு­கி­றது.

இதற்கு ஜாத­கத்­தில் உயி­ராக கரு­தப்­ப­டும் லக்­னத்­தின் நிலை, உடல்­கா­ர­க­னான சந்­தி­ர­னின் நிலை, ஆயுள் ஸ்தான­மான எட்­டாம் ஸ்தானம், ஆயுள் ஸ்தானா­தி­பதி, ஆயுள் ஸ்தானத்தை பார்க்­கும் கோள்­கள் மற்­றும் ஆயுள் கார­க­னான சனி பக­வா­னின் நிலையை வைத்­துத்­தான் ஆயுளை தீர்­மா­னிக்க வேண்­டும்.

பொது­வாக ஜோதிட சாஸ்தி­ரத்­தில் ஆயுளை மூன்று பிரி­வாக பிரித்­துள்­ள­னர்.

    அற்­பா­யுள் என்­பது 30 வய­திற்­குள் மர­ண­ம­டை­வதை குறிக்­கும்.

    மத்­திம ஆயுள் என்­பது ஐம்­பது வய­திற்­குள் மர­ண­ம­டை­வதை குறிக்­கும்.

    தீர்க்­கா­யுள் என்­பது 60லிருந்து 100 வய­துக்­கும் மேற்­பட்டு மர­ண­ம­டை­வதை குறிக்­கும்.

அற்­பா­யுள் யோக கிரக நிலை:

    எட்­டுக்­கு­டை­ய­வன் பாப­ரு­டன் கூடி 12ல் மறைந்­தால் இந்த ஜாத­க­னு­டைய ஆயுள் அற்­பா­யுள் என­லாம்.

    எட்­டுக்­கு­டை­ய­வன் பாப­ரு­டன் கூடி 6ல் மறைந்­தும் மற்­றும் லக்­னா­தி­ப­தி­யின் சேர்க்­கை­யும் இருந்­தால் அற்­பா­யு­ளில் மர­ண­ம­டை­வர்.

    3,2,12 ம் இடங்­க­ளில் பாப­ரு­டன் கூடி சுப­ரின் பார்வை பெறா­ம­லும் இருந்து குரூர சந்­தி­ரன் இருப்­ப­தும், லக்­னா­தி­ப­தி­யும் 6,8,12ல் இருந்­தால் அற்­பா­யுளே.

    லக்­னா­தி­பதி இரண்டு பாப கிர­கங்­க­ளின் மத்­தி­யில் இருந்து சுப­ரின் வீட்டை அடை­யா­ம­லும் இருந்து பிதா­வின் ஜென்ம லக்­னத்­தி­லும் பிறந்­த­வன் 25 வய­தில் மர­ண­ம­டை­வான்.

மத்­திம ஆயுள் யோகம் யாருக்கு?

    லக்­னா­தி­பன் 8ம் இடத்­தில் பாப­ரு­டன் கூடி­யும் சுப­க்கி­ர­கம் கேந்­தி­ரத்­திற்கு வெளி­யி­டத்­தி­லும் இருந்­தால் நாற்­பது வய­தில் மர­ண­முண்­டா­கும்.

    எட்­டாம் இடத்­திலோ பன்­னி­ரண்­டாம் இடத்­திலோ லக்­னா­தி­பதி இருந்­தால் 42 வய­தில் மர­ணம் உண்­டா­கும்.

    கேந்­தி­ரத்­தில் குரு­வும் 10ம் இடத்­தில் சனி­யும் ஜென்ம லக்­னம் சர ராசி­யா­க­வும் இருந்­தால் 44 வய­தில் மர­ணம் உண்­டா­கும்.

    மக­ரம் ஜென்ம லக்­ன­மாகி அதில் செவ்­வா­யும், 7ம் இடத்­தில் குரு­வும், சனி 10ம் இடத்­தி­லும் இருந்­தால் 41 வய­தில் மர­ணம் உண்­டா­கும்.

    சந்­தி­ரன் லக்­னா­தி­பன் பாப­ரு­டன் கூடி 8லும் ஜென்ம லக்­னா­தி­பன் பாப­ரு­டன் கூடி 6லும் இருந்து பலம் பெற்ற சுபர் பார்­வை­யும் இல்­லா­தி­ருந்­தால் அவ­னுக்கு வயது 45.

தீர்க்­கா­யுள் யோகம் யாருக்கு?

    சுபக்­கி­ர­கம் பலம் பெற்று கேந்­தி­ரத்­தி­லும் 8 ம் இடம் சுப­க்கி­ர­கத்­து­டன் இருந்து பாப கிர­கம் லக்­னா­தி­ப­னா­லும் பார்க்­கப்பட்­டால் 70 வயது ஜீவித்­தி­ருப்­பான்.

    செவ்­வாய் 5லும் சனி நீச ராசி­யி­லும் சூரி­யன் 7 லும் இருந்­தால் இந்த யோகத்­தில் பிறந்­த­வன் 70வது வய­தில் மர­ணம் அடை­வான்.

    லக்­னத்­தில் புத­னும் திரி­கோ­ணத்­தில் சந்­தி­ர­னும் 9ல் சனி­யும் இருந்­தால் இந்த யோகத்­தில் பிறந்­த­வன் 74 வய­தில் மர­ண­ம­டை­வான்.

 சுபக்­கி­ர­கங்­கள் யாவும் லக்­னம் முதல் 9 ராசிக்­குள் இருந்து பலம் பெற்­றும் பாப­கி­ர­கங்­கள் யாவும்  ராசிக்கு மேலுள்ள கிர­கங்­க­ளின் பலம் பெற்­று­மி­ருந்­தால் இந்த யோகத்­தில் பிறந்­த­வன் நற்­கு­ணம் பொருந்­தி­யும் ஆயுள் 80 வரை நீண்­டும் வாழ்­வான்.

தீர்க்கா­யுள் உதா­ரண ஜாத­கம்

இந்த ஜாத­கர் சுமார் 92 வய­தில் மர­ணம் எய்­தி­னார். இவர் ராசி துலாம். நட்­சத்­தி­ரம் ஸ்வாதி, லக்­னம் மேஷம். இந்த ஜாத­கர் ஜாத­கத்­தில் நான் மேலே கூறி­ய­வாறே ஆயுள் கார­க­னான சனி உச்­சம் பெற்­றுள்­ளது. மேலும், ஆத்மகார­க­னான சூரி­ய­னும் லக்­னத்­தில் உச்­சம் பெற்­றுள்­ளது. மேலும், ஆயுள் ஸ்தானா­தி­ப­தி­யான செவ்­வாய் பலம் பெற்று கேந்­தி­ரத்­தில் உச்­சம் பெற்­றுள்­ள­தால்­தான் இவ­ருக்கு தீர்க்­கா­யுள் யோகம் உண்­டா­னது.

நீண்ட ஆயு­ளுக்கு பரி­கா­ரம்

நோயின்றி நீண்ட ஆயு­ளு­டன் வாழ சனி ஆயுள் கார­கன் ஆயுள் பலம் குறைந்­த­வர்­கள் ‘சனி காயத்ரி மந்­தி­ரம்’ அனு­தி­ன­மும் உச்­ச­ரித்து வந்­தால் ஆயுள் நீடிக்­கும்

சனி காயத்ரி மந்­தி­ரம்

‘‘காகத் வ்ஜாய வித்­மஹே

கட்க ஹஸ்­தாய தீமஹி

தந்நோ மந்­தஹ ப்ரசோ­த­யாத்’’

சனி ஸ்துதி

‘‘நீலாஞ்­சன சமா­பா­சம் ரவி­புத்­ரம்

யமாக்ஞ்­ஜம் சாய மார்த்­தாண்ட

சம்­பூ­தம் தம் நமாமி சனைஸ்­வ­ரம்’’

என்ற மந்­தி­ரத்தை அனு­தி­ன­மும் கூறி வந்­தால் நன்மை பயக்­கும்.