டிவி.பேட்டி : இந்துஸ்தானி இசை தெரியும்! – ஆஷிகா!

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

*    “தமிழ்­செல்வி” (சன் டிவி) புத்­தம்­புது சீரி­ய­லில் டைட்­டில் ரோலில் நடிப்­ப­வர், ஆஷிகா கோபால் படு­கோன்.

*    இதற்­கு­முன், அவரை வேறு  எந்த தமிழ் சீரி­ய­லி­லும் பார்த்­தி­ருக்க முடி­யாது. அம்­மணி தமி­ழுக்கு புதுசு.

*    அவ­ருக்கு வயது 23 ஆகி­றது.

*    ஜூன் 29, 1996ல் பிறந்­தார்.

*    கர்­னா­ட­கா­வி­லுள்ள உடுப்பி, அவ­ருக்கு பூர்­வீ­கம்.

*    ஆனால், அவர் இப்­போது வசித்து வரு­வது பெங்­க­ளூ­ரு­வில்.

*    உடுப்­பி­யி­லுள்ள செயிண்ட் மேரீஸ் இங்­கி­லீஷ் ஸ்கூலில் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­தார்.

*    பெங்­க­ளூ­ரு­வி­லுள்ள தயா­னந்தா சாகர் இன்­ஜி­னி­ய­ரிங் கல்­லூ­ரி­யில் தக­வல் அறி­வி­யல் மற்­றும் இன்­ஜி­னி­ய­ரிங் படித்­தார்.

*    5 அடி 3 அங்­கு­லம் உய­ரம் கொண்­ட­வர்.

*    எடை 53 கிலோ.

*    அவ­ரு­டைய தாத்தா ஆனந்தா கானிகா ஒரு பழம்­பெ­ரும் நாடக நடி­க­ரா­வார். ’ரங்­க­பூமி’ என்­னும் பிர­பல நாட­கக்­கு­ழுவை சேர்ந்­த­வர்.

*    2016ல் “நிக­ரிகா” கன்­னட சீரி­ய­லில் அறி­மு­க­மா­னார். அதில் அவர் நடிப்­ப­தற்கு மூலக்­கா­ர­ணம், அவ­ரு­டைய மாமா பிர­தீப் சந்­துரு. அவ­ரும் அதே சீரி­ய­லில் ஒரு ‘அப்பா’ கேரக்­ட­ரில் நடித்­தி­ருந்­தார். “ஒரு சின்ன கேரக்­டர்­தான். நீ தாரா­ள­மாக நடி! பயப்­ப­டாதே!” என்று சொல்லி ஆஷி­காவை நடிக்க வைத்­தி­ருக்­கி­றார்.

*    அதை தொடர்ந்து “திரி­வேணி சங்­கமா” தெலுங்கு சீரி­ய­லில் நடித்­தார்.

*    அவர் படிக்­கும் காலத்­தில் நாம் நடி­கை­யாக வேண்­டும் என்­கிற எண்­ணமே சுத்­த­மாக அவ­ருக்கு இருந்­த­தில்லை.

*    இன்­ஜி­னி­ய­ரிங் முடித்த பிறகு ஒரு பன்­னாட்டு நிறு­வ­னத்­தில் வேலை பார்க்­கும் எண்­ணத்­தில் இருந்­தார். அந்த நேரத்­தில்­தான் “திரி­வேணி சங்­கமா” தெலுங்கு சீரி­யல் ஆடி­ஷ­னுக்கு அழைப்பு வந்­தது. அதில் கலந்­து­கொண்ட பிற­கு­தான் தெரிந்­தது தான் கார் விபத்­தில் பலி­யான நடிகை ரச்­ச­னா­வுக்கு பதி­லாக நடிக்­கப்­போ­கி­றோம் என்­பது. ஏனெ­னில், ரச்­ச­னா­தான் அதில் “திரி­வே­ணி”­யாக நடித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

*    “ரச்­சனா நடித்த கேரக்­ட­ரில்­தான் நீங்­கள் நடிக்­கப்­போ­கி­றீர்­கள் என்று சொன்­ன­போது உண்­மை­யி­லேயே ஷாக்­காகி விட்­டேன். ஏனென்­றால், நான் அவரை மிக­வும் மதிக்­கக்­கூ­டி­ய­வள். ரச்­சனா நடித்த மற்ற சீரி­யல்­களை உன்­னிப்­பாக கவ­னிக்க ஆரம்­பித்­தேன். அதன் மூலம் அவ­ரு­டைய நடிப்பை ரசிக்க ஆரம்­பித்­தேன். உங்­கள் நடிப்பு    ரச்­சனா நடிப்­பது போலவே இருக்­கி­ற­தென்று சொல்­லா­த­வர்­கள் கிடை­யாது. இது மட்­டு­மல்ல, நீங்­கள் ரச்­ச­னாவை போலவே தோற்­ற­ம­ளிக்­கி­றீர்­கள் என்­றும் சொல்ல ஆரம்­பித்­தார்­கள்” என்று சொல்லி வாயா­றிப்­போ­னார்.

*    ஆஷிகா இப்­போது “தமிழ்­செல்வி” தவிர “காதலோ ராஜ­கு­மாரி” தெலுங்கு சீரி­ய­லி­லும் (ஸ்டார் மா டிவி) லீட் ரோலில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்.

*    இந்­துஸ்­தானி இசையை முறைப்­படி கற்­றுக்­கொண்­ட­வர் என்­பது மிக­வும் குறிப்­பி­டத்­தக்­கது.

*    “‘தமிழ்­செல்­வி’­யில் நடிப்­பது மிக­வும் இனி­மை­யான அனு­ப­வ­மாக இருக்­கி­றது!” என்­கி­றார் பூரிப்­போடு.

-– இரு­ளாண்டி