கவுரவ வேடத்தில் நடிக்க நடிகை ரேட் : ரூ.13 கோடி!

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு நடி­கை­க­ளின் மார்க்­கெட் டல்­லா­கி­வி­டும் என்ற இமேஜை உடைத்­தி­ருக்­கி­றார், நடிகை தீபிகா. காத­லன் ரன்­வீ­ரைத் திரு­ம­ணம் செய்­த­பி­ற­கும், பாலி­வுட்­டின் முடி­சூடா ராணி­யாக வலம் வந்­து­கொண்­டி­ருக்­கி­றார்.

இப்­போது, ’சபாக்’ என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். இது, ஆசிட் வீச்­சால் பாதிக்­கப்­பட்­டும் அசாத்­திய தன்­னம்­பிக்­கை­யால் மீண்­டு­வந்­துள்ள முன்­னு­தா­ரண நாயகி லட்­சுமி அகர்­வா­லின் வாழ்க்­கையை மையப்­ப­டுத்­திய படம். லட்­சுமி வேடத்­தில் நடிக்­கும் தீபிகா, ஆசிட் வீச்­சால் கோர­மான முகத்­தின் மேக்–அப் தோற்­றத்தை சமீ­பத்­தில் வெளி­யிட்­டார். இந்த படம் வைர­லாகி, தீபி­கா­வுக்கு பாராட்­டுக்­க­ளைக் குவித்­தது.

இப்­படி ஒரு நல்ல இமேஜ் வந்த நிலை­யில், ஒரு தக­வ­லால் தீபி­கா­வின் இமேஜ் சர்­ரென சரிந்­துள்­ளது.

கிரிக்­கெட் ஜாம்­ப­வான் கபில்­தேவ் தலை­மை­யி­லான இந்­திய அணி, 1983ல் உல­கக்­கோப்­பை­யைக் கைப்­பற்­றி­யது. இதை கதைக்­க­ள­மா­கக் கொண்ட ‘83’ என்ற சினிமா, பாலி­வுட்­டில் தயா­ராகி வரு­கி­றது. இதில் கபில்­தேவ் மனைவி வேடத்­தில் நடிக்க தீபி­காவை அணு­கி­யுள்­ள­னர். அப்­போது, ‘படத்­தில் சிறி­து­நே­ரமே வரும் இந்த கெஸ்ட் ரோலில் என்­னால் நடிக்க முடி­யாது’ என்று மறுத்­தி­ருக்­கி­றார், தீபிகா. படக்­குழு வலி­யு­றுத்­தி­ய­போது, ‘ரூ.13 கோடி சம்­ப­ளம் தரு­வீர்­களா? தந்­தால் ஓகே!’ என்று பேரம் பேசி­யி­ருக்­கி­றார்.

இந்த விவ­கா­ரம் கசிந்­த­­தால்­தான், தீபி­கா­வின் இமேஜ் டேமே­ஜா­கி­யி­ருக்­கி­றது. இப்­போது உல­கக்­கோப்பை கிரிக்­கெட் போட்டி நடந்து வரு­கி­றது என்­ப­தால், கிரிக்­கெட் ரசி­கர்­க­ளான நெட்­டி­சன்­கள் பல­ரும் தீபி­கா­வைத் தாளித்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டை­யில் ‘ரூ.13 கோடி சம்­ப­ளம் தர தயார்’ என்று படக்­குழு அறி­வித்­தி­ருப்­பது, தீபி­கா­வுக்கு தர்­ம­சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.