சிறந்த ‘கிஸ்’ நடிகர்... நடிகை அளித்த பதில்!

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

பாலி­வுட் நடிகை பரி­னிதி சோப்ரா, முன்­னணி நடி­கர்­க­ளான அர்­ஜுன் கபூர், சித்­தார்த்­து­டன் ஜோடி சேர்ந்து நடித்து வரு­கி­றார். கடந்த ஆண்­டில் ‘இஷா­கு­ஷாடே’ சினி­மா­வில் முதல் முறை­யாக இணைந்த அர்­ஜுன் – பரி­னிதி ஜோடி, இப்­போது ‘சந்­தீப் அவுர் பிங்கி பரார்’ படத்­தில் மீண்­டும் இணைந்­தி­ருக்­கி­றது.

5 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, ‘ஜபா­ரியா ஜோடி’ என்ற படத்­தில் சித்­தார்த் – பரி­னிதி ஜோடி மீண்­டும் இணைந்­தி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில், பாலி­வுட் வெப்­சைட்­டில் நடிகை நேகா துபியா நடத்­தி­ வ­ரும் சாட் ஷோவில் பரி­னிதி சமீ­பத்­தில் பங்­கேற்­றார்.

நேகா­வின் கேள்வி : ‘‘முத்­தக்­காட்­சி­யில் சிறப்­பாக நடிப்­பது யார்... சித்­தார்த்தா? அர்­ஜுனா?’’

பரி­னி­தி­யின் பதில் : ‘‘அர்­ஜுன்­தான்! அவ­ருக்­கும் எனக்­கும் உண்­மை­யான நட்­பு­றவு இருக்­கி­றது. பாலி­வுட்­டில் உண்­மை­யான நபர்­கள் அபூர்­வம். அர்­ஜுன், அபூர்வ மனி­தர்­க­ளில் ஒரு­வர்!’’