பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 7–7–19

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

ஒரு செய்­தி­யைப் பார்த்­த­போது மகிழ்ச்­சி­யாக இருந்­தது.  விவ­சா­யம் சார்ந்த படிப்­பு­க­ளுக்கு இப்­போது மதிப்பு கூடி­யி­ருக்­கி­றது. தமிழ்­நாடு வேளாண் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு இந்த வரு­டம் 51 ஆயி­ரத்து 876 விண்­ணப்­பங்­கள் வந்­தி­ருக்­கின்­றன.  சென்ற வரு­டத்தை விட இந்த வரு­டம்  10 ஆயி­ரம் விண்­ணப்­பங்­கள் அதி­க­மாக வந்­தி­ருக்­கின்­றன. வந்த விண்­ணப்­பங்­க­ளில் தகுதி பெற்­ற­வர்­கள் மட்­டும் 41 ஆயி­ரத்து 590 பேர். ஆனால் வேளாண் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இருக்­கும் இடங்­களோ 3 ஆயி­ரத்து 905 மட்­டுமே.  வேளாண் படிப்­புக்­கான ` புகழ்’ அதி­க­ரித்­தி­ருக்­கி­றது என்றே சொல்ல வேண்­டும். பொறி­யி­யல்  கல்­லூ­ரி­க­ளில் 1 லட்­சம் இடங்­க­ளுக்கு மேல் காலி­யாக இருக்­கி­றது. பல கல்­லூ­ரி­கள் மூடும் நிலை­யில் உள்­ளன. ஒரு காலத்­தில் பி.காம். படித்­தால் மட்­டுமே வங்­கி­க­ளில் வேலை என்­கிற நிலை இருந்­தது. பிறகு கணினி வந்­த­போது, அந்த படிப்­பு­க­ளுக்கு அதிக மவுசு வந்­தது. எல்­லோ­ரும் அந்­தப் படிப்­பையே தேர்ந்­தெ­டுத்­தார்­கள். அந்த கால­கட்­டங்­க­ளி­லெல்­லாம் வேளாண் மாண­வர்­களை எல்­லோ­ரும் சற்று ஏள­ன­மா­கவே பார்ப்­பார்­கள். இப்­போது வங்­கி­க­ளில் அதி­க­மாக ஆட்­கள் எடுப்­ப­தில்லை. பொறி­யி­யல்  படித்­த­வர்­க­ளெல்­லாம் கூட வங்கி வேலை­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றார்­கள். இப்­போது பொதுத்­துறை, தனி­யார் வங்­கி­க­ளில் பணி­பு­ரி­வோ­ரின் கல்­வித் தகு­தி­க­ளைப் பார்த்­தால், அதில் பெரும்­பா­லா­னோர் பி.காம். படிப்பு அல்­லா­த­வர்­களே அதி­கம் இருப்­பார்­கள்.  முன்­பெல்­லாம் தனி­யார் பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் பெரிய நிறு­வ­னங்­கள் சென்று கேம்­பஸ் தேர்வு நடத்தி தங்­கள் நிறு­வ­னங்­க­ளுக்கு தகு­தி­யான ஆட்­களை எடுப்­பார்­கள்.  இப்­போது அந்த மாதிரி எது­வும்  அதி­கம் நடப்­ப­தில்லை. தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் குறைந்து வரும்­போது, வேலை வாய்ப்­பு­க­ளும் குறைந்து கொண்­டே­தான் வரு­கின்­றன. ஐ.டி. தொழில் என்­பது ஒரு சேவைப் பணி­யாக இருப்­ப­தால், அதன் தேவை­க­ளும் குறைந்­து­விட்­டன. பொறி­யி­யல் படிப்­பில் சேரு­ப­வர்­கள் பல­ருக்­கும்  எப்­போ­துமே அமெ­ரிக்­கா­வில் வேலை பார்ப்­ப­து­தான் பெரும் கன­வாக இருக்­கும். ஆனால் டிரம்ப் வந்­த­வு­டன், அமெ­ரிக்­கர்­க­ளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்­க­வேண்­டும் என்­ப­தால், அந்­நி­யர்­க­ளுக்கு மெது­வாக தங்­கள் நாட்டு கத­வு­களை மூட ஆரம்­பித்­து­விட்­டார்.

 அத­னால்,  அமெ­ரிக்க கனவு என்­பது  நமது மாண­வர்­க­ளி­டம் கலைந்து விட்­டது. விவ­சா­யம் குறித்த விழிப்­பு­ணர்ச்சி கடந்த பத்து ஆண்­டு­க­ளாக அதி­க­ரித்து வரு­கி­றது.  வேளாண் படிப்பு படித்­தால் அர­சாங்க வேலை தவிர தனி­யார் துறை­யி­லும் அதிக வாய்ப்பு இருப்­பது குறித்த விழிப்பு வந்து விட்­டதே இந்த கல்­வி­யின்  தேவையை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

 இதில் பட்­டப்­ப­டிப்­பான பி.எஸ்.சி. விவ­சா­யத்­திற்கு ஒரு இடத்­திற்கு இப்­போது 70 விண்­ணப்­பங்­கள் வரு­கின்­றன.   நம் நாடு சுதந்­தி­ரம் அடைந்து இத்­தனை ஆண்­டு­கள் கழித்து இப்­போ­து­தான், விவ­சாய பொரு­ளா­தா­ரம் சார்ந்த நாடு இது என்­கிற விழிப்பே நமது மக்­க­ளி­டையே வந்­தி­ருக்­கி­றது. இந்த விழிப்பு என்­பது நம் மண்­ணைக் காக்­க­வும், அதற்கு தேவை­யான நீர் பாது­காப்பை பேண­வும் வேண்­டும் என்­கிற எண்­ணத்தை வளர்த்­தால் அத­னால் பல நன்­மை­கள் உண்­டா­கும். மண்­ணின் பெருமை தெரிந்த படிப்­பா­ளி­கள் இருந்­தால், இந்த நாட்­டில் நீர்­நி­லை­க­ளுக்­கும், நீர்த்­தேக்­கங்­க­ளுக்­கும், ஏரி­க­ளுக்­கும், கால்­வாய்­க­ளுக்­கும் ஆபத்து வராது. அத்­த­கைய விழிப்­பு­ணர்வு வந்­தால்,  வான் பொய்த்து போகும் காலங்­க­ளில் கூட நம் மக்­கள் குடங்­களை எடுத்­துக் கொண்டு வீதி­வீ­தியா அலைய வேண்­டிய அவ­ல­நிலை வரா­மல் இருக்­கும். வேளாண் குறித்த விழிப்­பு­ணர்வு என்­பது மகிழ்ச்சி தரக்­கூ­டிய விஷ­யம்.

 ரசித்­தது !

 கைபே­சி­யில் வந்த  ஒரு சிறு குறும்­ப­டம். `பரா­சக்தி’ படத்­தில் கதா­நா­ய­கன் சிவாஜி இறு­திக் காட்­சி­யில் நீதி­மன்­றத்­தில் பேசும் வச­னங்­களை மழை பேசு­வது போல்  அமைத்து வந்­தி­ருக்­கும் ஒரு குறும்­ப­டம்­தான் அது. இந்த மீம்ஸ் போன்ற குறும்­ப­டம் பல­ருக்­கும் சென்­ற­டைந்­தி­ருக்­கும். ஆனால் இதை தயா­ரித்­த­வ­ரின் கற்­பனை வளத்தை மிக­வும் ரசித்­தேன். அந்த வச­னம் இது­தான்.

 ` சிங்­கா­ரச் சென்னை  விசித்­தி­ரம் நிறைந்த பல மழை­களை சந்­தித்­தி­ருக்­கி­றது.  புது­மை­யான பல வெள்­ளங்­களை கண்­டி­ருக்­கி­றது. ஆகவே, நான் புது­மை­யான மழை­யும் அல்ல,  அசா­தா­ர­ண­மான மழை­யும் அல்ல.  இயற்­கை­யாக வந்து போகும் வரப்­பி­ர­சா­தம் நான்.  மழை பொழிந்தே, வெள்­ளத்தை வர வழைத்­தேன்,  குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கி­றேன் இப்­ப­டி­யெல்­லாம். நீங்­கள் எதிர்­பார்ப்­பீர்­கள் நான் இதை­யெல்­லாம் மறுக்­கப் போகி­றேன் என்று! இல்லை நிச்­ச­ய­மாக இல்லை! கன­மழை பொழிந்து உங்­களை வெள்­ளத்­தில் மிதக்­க­விட வேண்­டும் என்­ப­தற்­காக அல்ல! ஏரி­க­ளும், குளங்­க­ளும் யுனி­வர்­சிட்­டி­க­ளா­க­வும், அபார்ட்­மெண்ட்­க­ளா­க­வும்  மாறி­விட்­டன என்­ப­தற்­காக.  வெள்­ளத்­தில் மிதக்க விட்­டேன், நீங்­க­ளெல்­லாம் ஒய்­யா­ர­மாக பட­கு­க­ளில் பய­ணம் செய்து `செல்பி’ எடுத்­துக் கொள்­ள­வேண்­டு­மென்­ப­தற்­காக அல்ல.  நான் செல்ல வேண்­டிய இடங்­க­ளை­யெல்­லாம் நய­வஞ்­ச­கர்­கள் ஆக்­கி­ர­மித்து விட்­டார்­களே என்­ப­தற்­காக ! உனக்­கேன் இவ்­வ­ளவு அக்­கறை, இயற்­கை­யில் யாருக்­குமே இல்­லாத அக்­கறை என்று கேட்­பீர்­கள்! நானே பாதிக்­கப்­பட்­டேன். சுய­ந­லம் என்­பீர்­கள்! சுய­ந­லத்­தில் பொது­ந­ல­மும் கலந்­தி­ருக்­கி­றது.  உங்­க­ளி­டம் திட்டு வாங்­கிக் கொண்டு மீண்­டும் மீண்­டும் பொழிந்து கொண்­டி­ருக்­கி­றேனே  என்­னைக் குற்­ற­வாளி குற்­ற­வாளி என்­கி­றீர்­களே, இந்த  குற்­ற­வா­ளி­யின் வாழ்க்­கையை சற்று பின்­னோக்கி நடந்து பார்த்­தால்,  நான் ஓடி வந்த சென்­னை­யின் ஏரி, குளங்­கள் எத்­தனை என்று கணக்­குப் பாருங்­கள்.  ஓடி வரப் பாதை­கள் இல்லை என் வழி­யில்! பிளாட்­டு­கள் நிறைந்­தி­ருக்­கின்­றன. ஏரி­களை விட்டு வெளி­யே­றி­யது இல்லை நான்.  ஆனால் பிளாட்­டுக்­களை இப்­போது தாண்­டி­யி­ருக்­கி­றேன். சென்னை மக்­களே! என்­னைத் திட்­டு­வ­தற்கு முன்­னால் நான் கூறு­வ­தைக் கேளுங்­கள்.  மடிப்­பாக்­கம், வேளச்­சேரி, பள்­ளிக்­க­ரணை  திரு­வி­டத்­திலே இருந்­த­வன் நான்.  இருக்க ஒரு ஏரியா. இப்­போது இருப்­பது ஒரு ஏரியா. இயற்­கை­யின் தலை­யெ­ழுத்­துக்கு நாம் மட்­டும் என்ன விதி­வி­லக்கா?

 வக்­கீல் : யார் செய்த தவ­றுக்கு நீ கன­மழை பொழிந்­து­விட்டு,   நீயே வக்­கீ­லாக மாறி இப்­போது நீ வாதா­டு­கி­றாய்?

 மழை :  யார் வழக்­கும் இல்லை. இது­வும் என் வழக்­குத் தான்.  சுய­ந­லத்­தில் கலந்­துள்ள பொது­நல வழக்கு.  ஏரி­க­ளை­யும், குளங்­க­ளை­யும் அழித்­து­விட்டு,  வீடு­கள், பிளாட்­டுக்­கள், யுனி­வர்­சிட்­டி­கள் கட்­டிய ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளுக்கு  புத்­தியை புகட்ட நான் கன­மழை பொழிந்­த­தில் என்ன தவறு?  நான் கன­மழை பொழிந்­தது ஒரு குற்­றம். வெள்­ளத்­தில் மிதக்க விட்­டது ஒரு குற்­றம்.  இத்­தனை குற்­றங்­க­ளுக்­கும் யார் கார­ணம்?  என்னை சென்னை முழு­வ­தும் சுற்­றித் திரிய விட்­டது யார் குற்­றம்?  இயற்­கை­யின் குற்­றமா? அல்­லது  இயற்­கையை ஓரம் கட்டி ஓரா­யி­ரம்  ஏரி­க­ளை­யும், குளங்­க­ளை­யும் தூர்த்து விட்­டு­கட்­டிய  மக்­க­ளின் குற்­றமா?  ஏரி­கள், குளங்­க­ளி­லெல்­லாம் யுனி­வர்­சிட்டி கட்­டி­யது யார் குற்­றம்?  என் குற்­றமா? அல்­லது நான் வர­வே­மாட்­டேன்  என்று தூர்த்­திய கய­வர்­கள் குற்­றமா?  குற்­றங்­கள் களை­யப்­ப­டும் வரை  மழை­க­ளும்,  ரம­ணர்­க­ளும் குறை­யப் போவ­தில்லை. இது­தான் என் பய­ணத்­தில் எந்த பக்­கம் புரட்­டிப் பார்த்­தா­லும்,  காணப்­ப­டும் பாடம், பகுத்­த­றி­வுள்ள இயற்கை தத்­து­வம்.

 படித்­தது !

 எங்­கும் கிரிக்­கெட் ஜுரம். உல­கக் கோப்பை போட்டி  லண்­ட­னில் நடப்­ப­தால், பெரும்­பா­லான மாலை­க­ளில் பெரு­ந­க­ரங்­க­ளில் போக்­கு­வ­ரத்து குறைந்­தி­ருப்­ப­தாக சொல்­கி­றார்­கள். இந்­தி­யர்­க­ளுக்கு, குறிப்­பாக சென்னை வாசி­க­ளுக்கு கிரிக்­கெட் பைத்­தி­யம் எப்­போ­தும் உண்டு. அது­வும் 1992 களுக்­குப் பிறகு,  வண்­ணத் தொலைக்­காட்­சி­கள் வந்த பிறகு, கிரிக்­கெட் மார்க்­கெட் என்­பது பல கோடி ரூபாய்­கள் புர­ளக்­கூ­டிய ஒரு பெரிய தொழி­லாக மாறி­விட்­டது. சாதா­ரண லீக்  பந்­த­யம் ஆடு­ப­வர்­க­ளின்  வரு­மா­னம் கூட அதி­க­ரித்து விட்­டது. தொலைக்­காட்­சி­யின் வர­வி­னால், குக்­கி­ரா­மத்­தில் இருக்­கும் இளை­ஞ­னுக்­குக் கூட டி 20 பந்­த­யங்­க­ளில் கிராக்கி ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கிரா­மப்­பு­றங்­கள் காய்ந்து வறண்டு போயி­ருக்­கும் ஏரி­க­ளில் நமது இளை­ஞர்­கள் ஆடும் கிரிக்­கெட் என்­பது சர்­வ­தேச அள­விற்கு வளர்ந்து விட்­டது. ‘தி கிரேட் இந்­தி­யன் கிரிக்­கெட் ஹிஸ்­டரி’ படித்­துக் கொண்­டி­ருந்­தேன். நமது முன்­னோ­ரான கிரிக்­கெட் வீரர்­கள் நாட்­டுக்­காக ஆட­வேண்­டும் என்­ப­தற்­காக பணத்­தைப் பொருட்­ப­டுத்­தா­மல் ஆடி­னார்­கள்.  1950களி­லும், 1960களி­லும்  நமது நாட்­டுக்­காக ஆடிய இந்­திய வீரர்­கள், ‘கற்­ற­லிற் கேட்­டலே நன்று’ என்­ப­தற்­கேற்ப, வானொ­லி­யில் வரும் வர்­ண­னை­க­ளைக் கேட்டே தங்­கள் கிரிக்­கெட் திறனை வளர்த்­துக் கொண்­டார்­கள். ஆரம்ப காலங்­க­ளில் கிரிக்­கெட் என்­பது விளை­யா­டத் தெரி­யாத மகா­ரா­ஜாக்­க­ளின் ஆடம்­பர பொழு­து­போக்­காக இருந்­தது.  இந்­தி­யாவை கிரிக்­கெட்­டில் உலக அரங்­கிற்கு காட்­டிய பெருமை நமது இந்­திய ஸ்பின்­னர்­க­ளான  பிர­சன்னா, பிஷன் சிங் பேடி, சந்­தி­ர­சே­கர் ஆகி­யோ­ரையே சாரும். அப்­போ­தெல்­லாம் அவர்­கள் இந்­தி­யா­விற்கு ஆட வேண்­டு­மென்­றால் ஐந்து நாள் பந்­த­யத்­திற்கு ரூ.250 சம்­ப­ளம். மழை­யி­னால் ஓரிரு நாட்­கள்  விளை­யாட்டு நடக்­கா­விட்­டால் சம்­ப­ளத்­தில் பிடித்­துக் கொள்­வார்­க­ளாம்.